2017 ஸ்பெஷல்
Published:Updated:

பெஸ்ட் ஆஃப் வலைபாயுதே

பெஸ்ட் ஆஃப் வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
பெஸ்ட் ஆஃப் வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

twitter.com/Selvaa__: `கடைசி ரிங் வரைக்கும் அட்டெண்ட் பண்ணுவோம்’னு நம்பிக்கையோடு அந்தப் பக்கம் போன் பண்றவனுக்கு, நாம முதல் ரிங்லயே சைலன்ட்ல போடுறதுதான் நம்பிக்கைத் துரோகம்.

twitter.com/teakkadai: சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.

facebook.com/Raajaa Chandrasekar: தனியாக நின்றாலும், வரிசையில் நின்றிருப்பதுபோல் இருக்கிறது #BankQueueHangover

twitter.com/​manipmp:
சேனல் மாற்றும்போதுகூட, பொதிகையில் நல்ல நிகழ்ச்சி ஓடியது கிடையாது.

தனியாருக்குப் பலியான முதல் அரசு எலுமிச்சைப்பழம்.

​twitter.com/​mekalapugazh:
பெரும்பாலான நல்ல புத்தகங்கள், ஒரு சினிமா டிக்கெட்டின் விலையில்தான் இருக்கின்றன. ஆனாலும், விற்பனையில் சாதனை ஏதும் இல்லாதது வருத்தமே.

​twitter.com/​_Mynaah_ : என்னிடம் பேசாதே என்றால், என்னைக் கொஞ்சு என்று அர்த்தம்.

twitter.com/​manipmp: விருப்பமான பாடல் எல்லாமே பக்கத்து வீடுகளில்தான் ஒலிக்கும்.

பெஸ்ட் ஆஃப் வலைபாயுதே

twitter.com/iamVariable: வரலாற்றில், இந்த வருடம் நடந்ததுதான் சிறந்த காணும் பொங்கலாக இருக்கும். #ஜல்லிக்கட்டு

twitter.com/SolitaryReaper_ : இவ்வளவு பிரமாண்டமான மக்கள் சக்தியும் எழுச்சியும் உணர்வும் உள்ள மாநிலத்துக்கு, தன்னலமற்ற ஒரு தலைவன் இல்லை என்பது எத்துணை துரதிஷ்டம்.

twitter.com/minimeens:
எல்லாத்தையும் மேலே ஒருத்தன் பார்த்துட்டேதான் இருக்கான்கிறதை, சில வீடியோ பார்க்கிறப்ப நம்பத்தான்வேண்டியிருக்கு!

twitter.com/naiyandi :
இந்த நூற்றாண்டின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பா நான் நினைக்கிறது, வாட்ஸ்அப்பில் இருக்கிற `க்ளியர்  ஆல் சாட்ஸ்’தான்!

twitter.com/jeytwits: `Sorry’ என்பது மட்டுமல்ல... `சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!

twitter.com/gani2071990: பல்சரும் ஸ்கூட்டியும் பக்கத்துப் பக்கத்துல நிற்கும்போது லவ்வர்ஸ் மாதிரியே தெரியுது!

twiiter.com/​arattaigirl: `உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை’ என்று பொருள்!

​twiiter.com/​Enfielderstweet: 
ஆதார் கார்டு இருந்தாதான் ஆதார் கார்டு தருவோம்னு மட்டும்தான்டா நீங்க இன்னும் சொல்லல!

facebook.com/nchokkan: கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால் இயல்பாகப் பார்க்கிறார்கள். ஒரு கொய்யாக்காய் வைத்திருந்தால் விநோதமாகப் பார்க்கிறார்கள். #ஐடி பூங்காக்கள்.

twitter.com/manipmp: வசதியான வீட்டுத் திருமணங்களுக்கு மாருதி காரில் செல்லக்கூட, ஒரு மனோதைரியம் தேவையாக இருக்கிறது.

twitter.com/saravananucfc:
சிறப்பா பண்ற எல்லாக் கல்யாண ரிசப்ஷன்லயும் ஏதாவது ஒரு பொண்ணு அது தலைமையில்தான் ஃபங்ஷனே கட்டுக்கோப்பா கொண்டுபோற மாதிரி தன்னை பிஸியாவே காட்டிக்கும்.

twitter.com/jeytwits: டிவி-யில் சேனல் மாத்தாம ஒரே சேனலை ரொம்ப நேரம் பார்த்துட்டிருந்தா, ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும்... இல்லை மனசு சரியில்லாம இருக்கணும்.

twitter.com/skpkaruna: திருவள்ளுவரே இப்போ இருந்து திருக்குறள் எழுதினாலும், இறுதி வரியில் `தமிழனாய் இருந்தால் ஷேர் செய்!’ என்றே எழுதியாகணும். ட்ரண்ட் அப்படி.

பெஸ்ட் ஆஃப் வலைபாயுதே

facebook.com/மதுரை சத்யா: சுத்தம் செய்ய அழுக்குத்துணி தேடும் அப்பழுக்கற்ற மனிதர்கள் நாங்கள்!

facebook.com/வெ.பூபதி: `நான் சொல்றதை பேரன்ட்ஸ் கேட்கிறதே இல்லை’னு குழந்தைகள் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க!

twitte.com/jeranjit: இணையம், எல்லோரையும் எழுத்தாளராகவும்... எழுத்தாளர்களைக் கோமாளிகளாகவும் மாற்றிவைத்திருக்கிறது.

twitter.com/kumarfaculty: சின்னி ஜெயந்த்தையும் முரளியையும் கடைசி வரை பாஸ் செய்ய முடியாதவாறே நம் பாடத்திட்டம் வைத்திருந்தது.

twitter.com/mokkaigal: ஒரு காலத்தில் எல்லாமுமாக இருந்தவர்களை மீண்டும் சந்திக்கும்போது, பத்து நிமிடங்களுக்கு மேல் எதைப் பேசுவது எனத் திணறலாக இருக்கிறது.

twitter.com/manipmp:  ஒரு பக்கெட் துணியைத் துவைத்து முடித்து வரும்போது, நாம் போன் நோண்டிக்கிட்டிருப்பதை மனைவி பார்க்கும்போது வருவதுதான் மரணபீதி.

twitter.com/twittornewton: ஒரே நேரத்தில் முகநூலிலும் ட்விட்டரிலும் பதிவிடுவது ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் படத்தை ரிலீஸ் பண்ணுவதுபோல. சிலது அங்கே ஹிட்... சிலது இங்கே!

twitter.com/Piramachari: மிடில் க்ளாஸ் வாழ்க்கை  எவ்வளவு கஷ்டம்! எதிர்வீட்டுக்காரன் பார்த்தால் பணக்காரனா நடிக்கணும். சொந்தக்காரன் கடன் கேட்டால் ஏழையா நடிக்கணும்.

பெஸ்ட் ஆஃப் வலைபாயுதே

twitter.com/arattaigirl:

நாய் வளர்க்கறவங்க வீட்லயெல்லாம் ஒரே மாதிரி, `ஒண்ணும் பண்ணாது வாங்க’ன்றாங்க. ஆனா, நாய் லுக் `வாயேன் வந்துதான் பாரேன்’னு சூனா பானா லுக்லதான் இருக்கு.  
 
twitter.com/maniiiiii:

வளர்ந்த பின் ஆங்கில ஆசிரியரைவிட நன்றாக ஆங்கிலம் பேசுகிறோம். தமிழ் ஆசிரியரைவிட நன்றாக தமிழ் பேச முடிவதில்லை...

twitter.com/mekalapugazh 

அம்மா-அப்பா போடும் சண்டையே... குழந்தைகளின் முதல் உலகப்போர்!

twitter.com/jeytwits

பெரு நகரங்களில் பிரபலமான நகைக்கடை, துணிக்கடையின் கிளைகள் சிறு ஊர்களில் ஆரம்பிக்கப்படும்போது, அது ஊரின் வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

facebook.com/mani pmp

ரயில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே மக்களுக்கு இருக்கிற அறியாமை, `அன்ரிசர்வ்டு பெட்டி எங்க இருக்குதுனு தெரியாம ஓடுறதுதான்’!

பெஸ்ட் ஆஃப் வலைபாயுதே

twitter.com/boopatymurugesh

நாட்ல பாகுபலி மட்டும்தான் பொண்டாட்டிகூட சேர்ந்து எதிரியோட சண்டை போடுறான். மத்தவனுக்கெல்லாம் பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் சரியாருக்கு.

twitter.com/gv_rajen 

பதினைந்து ஆண்டுக்கால தமிழர் வாழ்வு சுவாரஸ்யமாகக் கழிந்ததில் வடிவேலுவின் பங்கு அதிகம்.

facebook.com/ராஜா முகமது சீன தேசத்திலிருந்து

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒவ்வொரு வீட்டிலிருந்து வெளிவரும் சமையல் மணத்தில் ஏன் கூடுதல் அன்பு கலந்திருக்கிறது?

twitter.com/mekalapugazh

முன்பெல்லாம் நன்று, சுமார், மோசம் என்று வரிசைப்படுத்தியவை இப்போது, தியேட்டரில் பார்க்கலாம், டி.வி.டி-யில் பார்க்கலாம், டி.வி-யில் போட்டா பார்க்கலாம் என்று மாறிவிட்டது.

twitter.com/LordZha 

சீமான் பேட்டிகளை கவனிச்சா, ஓட்டு வாங்கி ஆட்சியமைக்கிற ஐடியாவே இருக்காது. ஒப்படைச்சிடுங்க, எங்ககிட்ட குடுத்துடுங்கன்னேதான் சொல்லிட்டிருப்பார்.

பெஸ்ட் ஆஃப் வலைபாயுதே

twitter.com/Kozhiyaar

இப்பொழுதெல்லாம் நம்பிக்கை துரோகங்கள் ‘ஸ்கிரீன்ஷாட்’ வழியாக நிகழ்த்தப்படுகின்றன!

twitter.com/g_for_Guru  

அட்டென்ஷன் சீக்கிங்குக்காக பையன் தனியா ரூம்ல போய் உம்முன்னு இருப்பான், யாரும் கண்டுக்கலைன்னா அவனே வந்து விளையாடுவான். குழந்தையய்யா வைகோ.

twitter.com/HAJAMYDEENNKS 

குழந்தைகள், பெற்றோர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கின்றனர் என்பதுதான் உண்மை..!

twitter.com/amuduarattai

எட்டப்பன்கள் பிறப்பதில்லை. பள்ளிகளில் கிளாஸ் லீடர் என்ற பெயரில் உருவாக்கப்படுகிறார்கள்.

twitter.com/Nimeshiga

பொது இடங்களில் போனுக்கு சார்ஜ் போட வரும் சண்டைகளில்தான் மூன்றாம் உலகப்போர் ஆரம்பிக்கும்போல!

twitter.com/Selvaa__ 

பயணிப்பது மிருகங்களுடன் என்று உணர்ந்தவன் மனிதம் பேசுவதில்லை.

twitter.com/Aruns212

மேனேஜரிடம் லீவு கேட்கும் அனைவருமே ‘வேதா’ விஜய் சேதுபதிகள்தான் #ஒரு கதை சொல்ட்டா சார்?

twitter.com/amuduarattai 

எதுக்கு வாங்கினோமோ அதைத் தவிர, மற்ற எல்லாத்துக்கும் பயன்படும் ஒரு பொருளுக்கு டைனிங் டேபிள் என்று பெயர்.

பெஸ்ட் ஆஃப் வலைபாயுதே

twitter.com/rmdkarthik

எல்லா டீம்லேயும் ஒருத்தன் ``நான் இப்பவே பேப்பர் போட்டுட்டுப் போயிட்டே இருப்பேன்’’னு பீலா விடுவான். ஆனா, கடைசிவரைக்கும் போகவே மாட்டான். அந்த ஆள்தான் வையாபுரி. #biggboss

twitter.com/manipmp

தனிமை என்பது நிம்மதியாக போன் நோண்டிக்கொண்டிருப்பது.

twitter.com/roflmaxx

கணேஷ் : நீங்க முத்தம் கொடுத்தது உண்மையா?

ஆரவ் :Yes its happened.

கணேஷ் : இதெல்லாம் ஒருத்தனும் பார்க்கல. ரெண்டே ரெண்டு முட்டையை எடுத்ததைப் பார்த்துட்டானுங்க. #biggboss

twitter.com/amuduarattai

உள்ளே போனவர்கள்,வெளியில் நிற்பவர்களின் அவசரம் தெரியாமல், பொறுமையைச் சோதிக்கும் இடம், டாய்லெட்டுக்கு அடுத்து ஏ.டி.எம்- தான்.

twitter.com/Pon_Madhu

`அனிதா  சாவுல அரசியல் பண்ணாதீங்க’ன்னு சொல்றவங்கலாம் யாருன்னு பாத்தா, சுவாதி கொலையில அரசியல் பண்ணினவங்கதான்.

twitter.com/withkaran 

மணிரத்னம்-சிம்பு காம்போங்குறது மணிரத்னத்தோட புளூவேல் டாஸ்க்.

twitter.com/Kozhiyaar
 
அரசியல்வாதிகளுக்கு நுழைவுத் தேர்வு வேண்டும் என்கிறார்கள், அவர்களைத் தேர்ந்தெடுப்பதே நாம்தான் என்பதை மறந்து.

twitter.com/raajaacs

மயிலிறகால் வருடுகிறவர்களிடம் கவனமாக இருங்கள். மயிலைக் கொன்றவர்களாகக்கூட இருக்கலாம்.

twitter.com/Thaadikkaran 

குழந்தைகளுக்கு டிரஸ் எடுக்கப் போகும்போது டிரஸ் தேடுறதைவிட குழந்தைகளைத் தேடவே நேரம் சரியா இருக்கு.

facebook.com/Sarav Urs

20 வயசில பார்க்கிற பொண்ணுங்க எல்லாம் பிடிக்குது... 30 வயசில எல்லோரையும் விட்டுட்டு ஒருத்திய மட்டும் பிடிக்குது... 40 வயசில அந்த ஒருத்திய விட்டுட்டு மற்ற எல்லோரையும் பிடிக்குது..! #Male_Life
 
twitter.com/Boopaty Murugesh

கல்யாணத்துல பொண்ணைவிட பொண்ணோட தங்கச்சி அதிகமா மேக்கப் போட்டு சுத்துற மாதிரி இந்த ஆட்சில அதிமுகவைவிட பிஜேபிகாரனுங்கதான் ஆக்டிவா இருக்கானுங்க..!

twitter.com/ArunPandiyanMJ

நூறு நண்பர்களின் ஹெல்த் அட்வைஸுகள், ஆயிரம் டயட் புத்தகங்கள், லட்சம் ஜிம் விடியோக்கள் தரவியலாத உத்வேகத்தைத் தரவல்லது ஒரு ட்ரையல் ரூம் கண்ணாடி.

twitter.com/g_for_Guru 

வரன் பார்க்கும் போது வரும் போட்டோக்கள் சைடு போஸிலிருந்தால் உஷார்... லாரியவே சைடா நிறுத்துனா சின்னதாதான் இருக்கும்!

twitter.com/Divergent_offcl

முத்தத்தில் முடிக்காமல் குழந்தைக்குத் தலை சீவ அம்மாக்கள் பழகவே இல்லை.

twitter.com/Timekeeper19 

இந்த சூப்பை எல்லாம் முழுசா குடிக்கணுமானே தெரியல... புல், பூண்டுனு கிச்சன்ல மீந்த அத்தனை அயிட்டத்தையும் அதுல கொட்டிடுறாங்க!

twitter.com/chithradevi_91

கல்யாண மண்டபத்தைக் கடப்பவர்களுக்கு இரண்டே மனநிலைதான்:
“இப்படியெல்லாம் நமக்கு எப்ப செஞ்சு வைப்பாங்க?”
“இப்படித்தானே நம்மளை அப்ப வெச்சு செஞ்சாங்க!”

twitter.com/HAJAMYDEENNKS

நம்ம நாட்டுல மாதிரி வேற எந்த நாட்டிலும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இவ்வளவு வேலை இருந்திருக்காது...!

twitter.com/Thaadikkaran

`உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’ என்று சொல்லும்போது வேண்டாம் என்றும், `கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்போது இறங்காததும் குழந்தையின் டிசைன்!

twitter.com/pisaasu 

ஜீன்ஸ தொவச்சப்புறம் வெறும் வாஷிங் மிஷினை அலசி விடுது ஆத்தா.. #நம்மள அசிங்கப்படுத்துறதுக்குன்னே...

twitter.com/ak_eswari 

மழையில் நனையும் ஆசையோடு ஒவ்வொரு வீட்டிலும் காத்திருக்கிறது குடை...!

twitter.com/abuthahir707 

மழை பெய்து ஏரி குளம் நிறையுதுனு சந்தோஷப்பட்டா அது கிராமம்! `என்னது, ஏரி நிறையுதா!’  என்று ஷாக் ஆனால் அது சென்னை மாநகரம்!

twitter.com/amuduarattai

வீட்டில் இருக்கும் உறுப்பினர்களைவிட, குறைவான எண்ணிக்கையில் மொபைல்போன்கள் உள்ளவையே, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள்.

twitter.com/Aruns212

‘ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க!’ என்பது சென்ற தலைமுறை வதந்தி. ‘வாட்ஸ்அப்பில் வந்தது’ இன்றைய தலைமுறை வதந்தி.