Published:Updated:

`ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்துக்கு கிருஷ்ணாதான் இன்ஸ்பிரேஷன்'- டேட் எலியாட்

‘ஜேக் ஸ்பேரோ’ கதாபாத்திரம் இந்துக் கடவுள் கிருஷ்ணாவை நினைவில் வைத்து உருவாக்கப்பட்டது என அதன் கதாசிரியர்களில் ஒருவரான டேட் எலியாட் தெரிவித்துள்ளார். 

ஃபேன்டஸி திரைப்பட தொடரான ‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளது. கடற்கொள்ளையர்களை மையப்படுத்தி இதன் கதைக்களம் அமைப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு பாகமும் தாறுமாறு ஹிட். ஜானி டெப் ‘ஜேக் ஸ்பேரோ’கதாபாத்திரமாக மக்கள் மத்தியில் அறியப்படுகிறார். சமீபத்தில் வெளியான ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’ படத்தின் டிரெய்லரில் அமீர்கானின் கதாபாத்திரம் கப்பலில் நடக்கும் சண்டைக்காட்சிகள் ‘ பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படத்தை நினைவுபடுத்துவதாக சமூகவலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜானி டெப் கதாபாத்திரம் இந்துக் கடவுள் ‘கிருஷ்ணா’வை நினைவில் வைத்து உருவாக்கப்பட்டது என அந்தப் படத்தின் கதாசிரியர்களின் ஒருவரான டேட் எலியாட் (Ted Elliott) தெரிவித்துள்ளார்.  ‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படத்தில் ஜேக் ஸ்பேரோ கதாபாத்திரம் தான் திரைக்கதையை நகர்த்திச் செல்கிறது. ‘ஜேக் ஸ்பேரோ’ கதாபாத்திரம் இந்துக் கடவுள் கிருஷ்ணனை நினைவில் வைத்து உருவாக்கப்பட்டது. இதற்காக கிருஷ்ணா குறித்த பல்வேறு தகவல்களைச் சேகரித்தோம்' என டேட் எலியாட் கூறியுள்ளார்.