பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”

கே.ஜி.மணிகண்டன்

“ஊர்ல ரெண்டு மூணு கல்யாணம் பண்ணவன்லாம் நல்லாதான் இருக்கான். ஒரேயொரு கல்யாணம் பண்றதுக்கு நான் படுற பாடு இருக்கே... ஐயய்யோ!” - சீரியஸாகவே எமோஷன் ஆகிறார் ஆர்யா. கலர்ஸ் தமிழ் டி.வி நிகழ்ச்சிமூலம் கல்யாணத்துக்குத் தயாராகிவிட்ட புதுமாப்பிள்ளை.   

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”

“ஆர்யாவுக்குக் கல்யாணம்... ஆச்சர்யம்தானே?”

“மத்தவங்களை விடுங்க, எனக்கே ஆச்சர்யம்தான். ‘எப்போ கல்யாணம்?’ங்கிற கேள்விக்கு ஒருவழியா பதில் சொல்லப்போற சந்தோஷம். தவிர, இப்படித்தான் என் கல்யாணம் அமையும்னு நான் கனவுலகூட நினைக்கலை. வேறென்ன பண்றது. நாம நினைக்கிற எதுவுமே நடக்கிறதில்லை. இப்படியாச்சும் நடக்கட்டுமே!”

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”

“சந்தோஷமா சொல்றீங்களா, வருத்தத்தோட சொல்றீங்களா?”

“சந்தோஷமாதான் சொல்றேன். பொதுவா, கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கப்போனா என்ன பண்ணுவோமோ, அதையே இந்த நிகழ்ச்சியில் 16 பொண்ணுங்ககிட்ட பண்ணப்போறேன். எனக்கு இது புதுசாதான் இருக்கு. ஒரு பொண்ணுகிட்டயே பழகிப்பார்த்து கல்யாணம் பண்ணிக்கிற சான்ஸ் கிடைக்காது. இங்கே கிடைச்சிருக்கு. இதுதான் வித்தியாசம். இந்த நிகழ்ச்சில கலந்துக்க ஊர், மாநிலம், நாடு கடந்துகூட வந்திருக்காங்க. கிட்டத்தட்ட 7,000 பொண்ணுங்க அப்ளை பண்ணி, அதுல இருந்து 16 பொண்ணுங்க தேர்வாகியிருக்காங்க. நிகழ்ச்சி தொடங்குறதுக்கு முன்னாடியே எனக்குப் பிடிச்சது எது, பிடிக்காதது எது, என் கேரக்டர் என்ன, வரப்போற மனைவி எப்படி இருக்கணும்னு நினைக்கிறேன்... இப்படி என் விருப்பங்களைச் சொல்லிட்டேன். அந்த அடிப்படையில்தான் இந்த 16 பொண்ணுங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காங்க.”

‘’வீட்ல என்ன சொன்னாங்க?”

“தயவு செஞ்சு கல்யாணம் பண்ணிக்கோனு கெஞ்சிக்கிட்டு இருந்தவங்களுக்கு, இது ஹேப்பிதான். சமயத்துல ‘ஒரு  ஆம்பளையையாவது கல்யாணம் பண்ணிக்கோடா’னுகூட சொல்லியிருக்காங்க. ஆனா, நான் பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்.”

“ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும்... தேர்ந்தெடுக்க ரொம்ப சிரமப்படுவீங்களே?”

``பிரச்னையே அதுதான். எல்லாப் பொண்ணுங்களும் யுனிக்கா இருக்காங்க. ஒரு பொண்ணோட பேசுறேன், பழகுறேன், பிடிச்சிருக்கு. அடுத்தநாள் இன்னொரு பொண்ணை மீட் பண்ணும்போது, ஏற்கெனவே பழகுன பொண்ணைவிட இவங்க இம்ப்ரஸ் பண்றாங்க. இப்படி ஒவ்வொரு பொண்ணும் ஏதோ ஒரு இம்ப்ரஷனைக் கொடுத்துக்கிட்டே இருக்காங்க. நிகழ்ச்சியில் அவங்களுக்கு என்னை நிராகரிக்கவும் உரிமை இருக்கு. ரெண்டுபேருக்கும் பிடிச்சாதான், கல்யாணம்!”

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”

“ஒரு நடிகர்னா, அவருக்கான இலக்கு ஒண்ணு இருக்கும்ல... ஆர்யாவுக்கு அப்படி எதுவும் இல்லையா?”

``அந்தளவுக்கெல்லாம் யோசிக்கிற அறிவு இருந்தா, நான் எங்கேயோ இருந்திருப்பேனே ப்ரோ..! ஜாலியா நடிக்கணும். ஆனா, அதுக்கு சின்சியரா உழைக்கணும்... இதுதான் என் இலக்கு. ‘கஜினிகாந்த்’ படத்தோட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் போய்க்கிட்டிருக்கு. சின்சியரா ஒரு வேலை பார்த்துக்கிட்டிருக்கும்போது, அவனோட கவனத்தைத் திசை திருப்புனா, பண்ணிக்கிட்டிருந்த வேலையை மறந்துடுவான்... அப்படிப்பட்ட ஒரு கேரக்டர்ல நான் நடிச்சிருக்கேன். என் பெயர் ரஜினிகாந்த்... படத்துல ஞாபக மறதி அடிக்கடி வர்றதுனால, கஜினிகாந்த். இதுதவிர, ‘சந்தனத் தேவன்’ பட வேலைகளும் போய்க்கிட்டிருக்கு.”

“உங்களுக்கு ஓகே... உங்கள் நண்பர் விஷாலுக்கு எப்போ கல்யாணம்?”

“இந்த நிகழ்ச்சியோட இயக்குநருக்கு நானே பர்சனலா, ‘எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னா, அடுத்த சீஸனை விஷாலுக்கு ஒதுக்கிடுங்க’னு சொல்லியிருக்கேன். ஏன்னா, எங்க கேங்ல இன்னும் சிலருக்குக் கல்யாணம் ஆகவேண்டியிருக்கு. எல்லோருக்கும் கல்யாணம் பண்ணிவைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு.”

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”