தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

ற்றைப் புருவ அசைவிலேயே இணையத்தைப் புரட்டிப் போட்டவர் பிரியா பிரகாஷ் வாரியர். ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் பாடல் காட்சி மூலம் ஃபேமஸ் ஆன வாரியர், தற்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் லட்சக்கணக்கில் பாலோயர்ஸ் வைத்திருக்கிற இணையப்பிரபலம். இந்தத் திடீர் புகழ்வெளிச்சத்தைப் பயன்படுத்தி, தன் இணையப்பக்கத்தில் விளம்பரதாரர்களின் பதிவுகளுக்குக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கி யிருக்கிறார். ஒரு விளம்பரப் பதிவுக்கு 8 லட்சம் வரை டிமாண்ட் செய்கிறார் என்கிறது மல்லுவுட் வட்டாரம். காற்றுள்ளபோதே...

இன்பாக்ஸ்

மெரிக்கா செல்கிறார் விஜயகாந்த். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முழு உடல்நலத்தோடு ஃபிட்டாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த முடிவாம். அமெரிக்காவின் மருத்துவராகப் பணியாற்றும் கேப்டனின் பரம ரசிகர்தான் சிகிச்சைக்கான அத்தனை ஏற்பாடுகளையும் முன்னின்று பார்த்துக்கொள்கிறாராம்.
பழைய பன்னீர்செல்வம் ரிட்டர்ன்ஸ்!

இன்பாக்ஸ்

ஜீவாவுடன் `ஜிப்ஸி’ படத்திற்கு பூஜை போட்ட ராஜூமுருகன், ஷூட்டிங்கைத் தொடங்குவதற்கு முன்னால் இந்தியாவைச் சுற்ற உதவி இயக்குநர்களோடு கிளம்பியிருக்கிறார். நாயகன் இந்தியாவையே குறுக்குவெட்டாகப் பயணிக்கிற கதை என்பதால், அந்த உணர்வைத் தன் உதவி இயக்குநர்களுக்கும் கடத்தவேண்டும் என்று சுற்றுப்பயணம் கிளம்பியிருக்கிறாராம். ஜீவா இப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றவிருப்பதால் அதற்காகத் தாடியும் நிறைய முடியும் வளர்க்க வேண்டியிருக்கிறது, அந்த கேப்பில் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்புவதுதான் திட்டமாம். நாடோடிகள்!

இன்பாக்ஸ்

பாலிவுட்டிலும் சர்வதேசத் திரைப்படங்களிலும் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்துப் புகழ்பெற்ற நடிகர் இர்ஃபான் கான். ‘லைஃப்  ஆஃப் பை’, ‘லன்ச் பாக்ஸ்’  படங்களில் நடித்த இவர், தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கேன்சர், மூளைக்காய்ச்சல் என வெவ்வேறு வதந்திகள் கிளம்பின. இது குறித்து இர்ஃபான்கான் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். ‘எனக்குச் சில உடல்நலக்கோளாறுகள் இருப்பது உண்மைதான், சீக்கிரமே குணமடைந்து மீண்டும் நடிப்புப் பயணத்தைத் தொடருவேன்’ என்று பதிவிட, அவருக்கு ஆதரவாக இந்தியத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். மீண்டு வாருங்கள் இர்ஃபான்!

இன்பாக்ஸ்

ந்த ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை வென்றவர் பிரான்ஸிஸ் மெக் டார்மன்ட்.  விருதுக்குப் பிறகு நடந்த விருந்து நிகழ்வில் அவரிடம் இருந்த விருதினை யாரோ திருடிச்சென்றுவிட பரபரப்பானது ஆஸ்கர் டீம். நல்லவேளையாக சில மணிநேரத்தில் டிராபியை மீட்டு மெக்டார்மன்டிடமே சேர்த்திருக்கிறது அமெரிக்கக் காவல்துறை. டிராபியை எடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரோ `நான் அப்பாவி, டேபிள் மேலே இது இருந்துதுனு எடுத்து செல்ஃபி எடுத்துக்கிட்டிருந்தேன், அதுக்குள்ள அந்தம்மா ஆர்ப்பாட்டம் பண்ணி போலீஸ் வரைக்கும் போய்ட்டாங்க’’ என்று வாக்குமூலம் கொடுக்க, ஆஸ்கர் கலகலப்பில் இதுதான் ஹைலைட்! செல்ஃபிமேனியா!

ழ்கடல் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர் பில் வாரன் என்ற அமெரிக்கர். கடலில் மூழ்கியவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பதில் கில்லாடி!  கடலுக்குள் பெட்டியில் வைத்து வீசப்பட்ட ஒசாமாவின் உடலை, கடந்த சில ஆண்டுகளாகத் தேடிவருகிறார்.  இதற்காக சி.ஐ.ஏ தன்னைக் கொல்லக்கூடும் என அச்சத்திலும் இருக்கிறார். சீக்கிரமே ஒசாமாவின் உடலைக் கண்டுபிடித்துவிட்டு, அடுத்து இந்தியப்பெருங்கடலில் மலேசிய விமானத்தையும் தேடிக் கண்டுபிடிக்கப்போவதாகச் சொல்லிப் பரபரப்பு கிளப்பியிருக்கிறார். வெளிநாட்டு வினோதன்!

ல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துவரும் பேராசிரியர் மு.ராமசாமி, இப்போது ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். கோலிவுட்டில் ‘வல்லமை தாராயோ’ மூலம் இயக்குநராக அறிமுகமான மதுமிதா. ‘கொல கொலயா முந்திரிக்கா’ படத்திற்குப் பிறகு படங்கள் இயக்காமல் தொலைக்காட்சிப் பக்கமாக ஒதுங்கியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது அவர் இயக்கும் படம் `கே.டி என்கிற கருப்பு துரை.’ 80 வயது கிராமத்துத் தாத்தாவாக நடிக்கப்போவது மு.ராமசாமி. வாங்க தாத்தா வாங்க!

இன்பாக்ஸ்

போர்னோ படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்றவர் மியா கலிஃபா. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தொடர் மிரட்டல்களால் போர்னோ படங்களில் இனி நடிக்கப்போவதில்லை என அறிவித்ததுதான் இணையத்தில் சென்ற வார வைரல் செய்தி. இனி விளையாட்டுப் போட்டிகளின் தொகுப்பாளினியாக மட்டுமே வாழ்க்கையைத் தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார் மியா. மாற்றம்!

இன்பாக்ஸ்

‘நாச்சியார்’ படத்தைப் பார்த்த பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் போன் செய்து, `இந்தியில ஒரு படம் பண்ணலாம். எப்போ கால்ஷீட்?’ என தேதி கேட்டதில் பயங்கர உற்சாகத்தில் இருக்கிறார் ஜிவிபி. ``கைல இருக்குற புராஜெக்ட்டை எல்லாம் சீக்கிரமே முடிச்சிட்டு வந்துடுறேன்’’ என்று சொல்லிவிட்டு இப்போது பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். நீ கலக்கு மச்சான்!