தொடர்கள்
Published:Updated:

நயன் ஹீரோயின்! அனிருத் ஹீரோ!

நயன் ஹீரோயின்! அனிருத் ஹீரோ!
பிரீமியம் ஸ்டோரி
News
நயன் ஹீரோயின்! அனிருத் ஹீரோ!

அய்யனார் ராஜன்

“ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தருகிற கதைனா, நயன்தாரா தவிர வேற ஆப்ஷனே இல்லை. நாம சொல்ற ஒன்லைன் மட்டும் அவங்களுக்கு பிடிச்சுப்போச்சுன்னா, மேற்கொண்டு கதையை மெருகேத்தி டெவலப் பண்றதுல டைரக்டரோடயே போட்டிபோடறாங்க.  அந்தக் கதை மேலே அவங்க காட்ற ஈடுபாடு படத்தோட வெற்றியில முக்கியப் பங்கு வகிக்குது! `கோகோ’ (கோலமாவு கோகிலா) ஸ்க்ரிப்ட் தயாரானபோதும் இதுதான் நடந்தது’’

நயன் ஹீரோயின்! அனிருத் ஹீரோ!

விஜய் டிவியிலிருந்து கோலிவுட் வரும் அடுத்த முகம் நெல்சன், ஏராளமான ஹிட் நிகழ்ச்சிகளை இயக்கி, கவனம் பெற்றவர். இப்போது வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். கோகோவின் இறுதிக்கட்டப் பணிகளில் இருந்தவரைச் சந்தித்தேன்.

நயன் ஹீரோயின்! அனிருத் ஹீரோ!

டிவி டூ சினிமா... எப்படி இருக்கு?

‘`எப்பவும் நான் சினிமா இயக்கணும்கிற கனவோட இருந்ததில்லை. டிவியில ஹேப்பியா நிகழ்ச்சிகள் பண்ணிக் கிட்டிருந்தேன். படம் பண்ணணும்னு யார்கிட்டயும் போய் உதவி இயக்குநரா இருந்ததில்லை. சிம்பு என்னோட ஸ்கூல்மேட். என்னோட டிவி ஷோக்கு கெஸ்ட்டா வந்தவர், ‘வா, சினிமா பண்ணலாம்’னு கூப்பிட்டார். அந்த நாள்ல இருந்து சினிமா என்னோட சேர்ந்துடுச்சு.’’

நயன் ஹீரோயின்! அனிருத் ஹீரோ!

சிம்புவுடன் இப்பவும் தொடர்பில் இருக்கீங்களா? ‘வேட்டை மன்னன்’ என்னாச்சு?

`` ‘வேட்டை மன்னன்’ பாதிக்கு மேல முடிஞ்ச நிலையில ஏன் நிற்குதுன்னு காரணமே தெரியலை. டேக் ஆஃப் பண்ண முடியாம இருக்கு. என் கையில எதுவுமில்லை. ‘கோகோ’ தொடங்கினப்ப கூட வாழ்த்து அனுப்பினார்.’’

நயன் ஹீரோயின்! அனிருத் ஹீரோ!

‘கோலமாவு கோகிலா’ எப்படிப்பட்டவள்?

‘`லோயர் மிடில் கிளாஸ் பொண்ணு. கொஞ்சம் அப்பாவின்னுகூடச் சொல்லலாம்.  கடுமையான சூழலைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு அதை, எப்படிச் சமாளிக்கறாங்கன்றதுதான் கதை. படத்துல நிறைய ஹ்யூமரும் இருக்கு. படம் பார்த்துட்டு வெளியில வர்றப்ப, அமைதியா போக மாட்டீங்க. வேற ஒரு மூடுல இருப்பீங்க. புதுமையான விஷயம் பண்ணணும்னா ஹீரோவுக்கு கெட்-அப்பை எப்படி வேணும்னாலும் மாத்தி வித்தியாசம் காட்டலாம். ஹீரோயினுக்கு? நயன்தாரா இதுல சின்சியரா ஒருவிஷயம் பண்ணியிருக்காங்க. அது அவங்க இமேஜோட பொருந்தியும்போச்சு. அது என்னங்கறது மட்டும் சஸ்பென்ஸ்!’’

நயன் ஹீரோயின்! அனிருத் ஹீரோ!

வேற என்ன இருக்கு கோகோவுல?

``படத்துல நயன்தாராவுக்கு `இருக்கு ஆனா இல்லை’ங்கிற மாதிரி ஒரு ஜோடி. ரொம்பவே இன்ட்ரஸ்டிங்கா இதைப் பண்ணியிருக்கோம். தங்கையா விஜய் டிவி ஜாக்குலின். அம்மாவா சரண்யா பொன்வண்ணன். அப்பாவா பழைய நடிகர் ஆர்.எஸ். சிவாஜி,  இவங்களோடு, ‘கலக்கப் போவது யாரு’ புகழ் நிஷாவும் நடிச்சிருக்காங்க. சீனியர் சிவகார்த்திகேயனிடம் படம் கமிட் ஆனதுமே சொல்லிட்டேன். இப்ப அப்பப்ப ஃபாலோ அப் கேட்கிறார். அனிருத் இசை. ஹீரோ இல்லையேனு தோணுறப்ப இவரைத்தான் நான் ஹீரோவா நினைச்சுக்கிடுறேன். அந்தளவு ஒர்க் பண்ணியிருக்கார். ஒரு நல்ல டீம் இணைஞ்சு சந்தோஷமா பண்ணியிருக்கோம். நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!