
மிஸ்டர் மியாவ்

ஹைலைட்
திரைப் பிரபலங்கள் பலரும், தாங்கள் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக்கி வருகிறார்கள். தமன்னா, பூஜா ஹெக்டே, ரகுல் ப்ரீத் சிங், கத்ரீனா கைஃப், அமைரா தஸ்தூர் எனப் பலரின் இன்ஸ்டாகிராமிலும் ட்விட்டரிலும், ஜிம் அட்மாஸ்ஃபியர் போட்டோக்களும், வீடியோக்களும் குவிந்துகிடக்கின்றன.

ஹாட் டாபிக்
காவிரி பிரச்னை தொடர்பான போராட்டங்கள் தீவிரமாகியுள்ள நிலையில், தமிழ் சினிமா பிரச்னையும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ‘‘இன்றைய சூழலில், விவசாயிகளும் திரைப்படத் தயாரிப்பாளர்களும் ஒரே நிலைமையில்தான் இருக்கிறோம். அரசு தலையிட்டு தமிழ் திரைத்துறைக்கென தனி வாரியம் அமைத்து எங்கள் பிரச்னைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்’’ என்கிறார், தயாரிப்பாளர் சங்கத் தலைவரான நடிகர் விஷால்.

வைரல்
முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும் ஸ்லோகா மேத்தாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பல வி.ஐ.பி-க்கள் பங்கேற்ற அந்த விழாவுக்கு ஐஸ்வர்யா ராய் தன் மகள் ஆராத்யாவுடன் வந்திருந்தார். அப்போது எடுத்த போட்டோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

• மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இந்தியில் ‘தடக்’ படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். தன் தாயின் மறைவை மறக்கும் விதத்தில் படப்பிடிப்பில் கலகலப்பாக இருக்க முயற்சி செய்து வருகிறாராம் ஜான்வி. இந்நிலையில், படத்தின் ஹீரோ இஷான் கட்டாரியை ஜான்வி தன் மடியில் உட்காரவைத்திருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது

• மலையாளத்தில் பிஸியாக இருந்த மஞ்சிமா மோகன் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் தன்னை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியதால் சந்தோஷத்தில் ஆழ்ந்திருக்கிறார் மஞ்சிமா. ‘அளவுக்கு அதிகமான உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’ எனத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மஞ்சிமா.

• சிறுவயதில் மாறுவேடப் போட்டியில் கலந்துகொண்ட போட்டோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு லைக்ஸ் அள்ளி வருகிறார் ரெஜினா கஸான்ட்ரா. ‘இன்னொரு இன்ட்ரஸ்டிங்கான போட்டோ இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து சீக்கிரம் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்’ என்றும் பதிவிட்டுள்ளார்.