பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

வெங்கட் பிரபுவின் `பார்ட்டி’, விஷ்ணு விஷாலோடு `சிலுக்குவார்பட்டி சிங்கம்’, செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, மற்றும் திரு இயக்கத்தில் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என ரிலீஸுக்குக் காத்திருக்கும் படங்களில் க்ளாமர், ஆக்ட்டிங் என வெரைட்டி காட்டி நடித்திருக்கிறாராம் ரெஜினா காஸான்ட்ரா. ஆந்திர ரசிகர்களைக் கவர்ச்சி மழையில் நனைய வைத்ததுபோல, ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தில்  தமிழ் ரசிகர்களைக் கவர்ந்திழுக்க வருகிறார். படத்தின் தாறுமாறு ஸ்டில்கள் பார்த்துத் தமிழ் இண்டஸ்ட்ரியே `கேடி பில்லா கில்லாடி ரங்கா பாப்பாவா இது?’ என ஆச்சர்யப்பட்டுக் கிடக்கிறது. கேடி கில்லாடி லேடி!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

ஹாட்ரிக் உற்சாகத்தில் இருக்கிறார் மடோனா செபாஸ்டியன். விஜய் சேதுபதியோடு ‘காதலும் கடந்து போகும்’ படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர் ‘கவண்’ படத்திலும் ஜோடி சேர்ந்தார். தற்போது கோகுல் இயக்கிவரும் `ஜூங்கா’ படத்தில், மூன்றாவது முறையாக இணைகிறார் மடோனா. வெளிநாட்டில் வசிக்கும் டானாக நடிக்கும் விஜய் சேதுபதியின் குரூப்பில் குட்டி லேடி டானாக நடித்திருக்கிறாராம் மடோனா.  ஹாட்ரிக் அழகி!

இன்பாக்ஸ்

லையாள தேசத்திலிருந்து  ஒரு சிறு கண்ணசைவில்  உலக அளவில் ட்ரெண்டாகி வைரலான ப்ரியா வாரியர் தமிழ்ப்படத்தில் நடிக்கவிருக்கிறார். நலன் குமாரசாமியின் அடுத்த ரொமாண்டிக்  காமெடி கேங்ஸ்டர் படத்தில் ப்ரியா வாரியர்தான் ஹீரோயின். ஹீரோ அநேகமாகப் புதுமுகமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு பீட்சா லவ்!

இன்பாக்ஸ்

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் டி.வி நிகழ்ச்சி ஒன்றில், ‘ஜுராஸிக் பார்க்’ படத்தை ஆரம்பத்தில் தான்தான் இயக்கவிருந்ததாகவும் கடைசி நேரத்தில் அது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் வசம் சென்றதாகவும் ஒரு தகவலைப் பகிர்ந்திருக்கிறார். `நல்லவேளை அந்தப் படத்தை நான் இயக்கவில்லை. நான் இயக்கியிருந்தால் ஜூராஸிக் பார்க் மிகப்பெரிய ஃப்ளாப்பாகியிருக்கும்!’ என்றும் சொன்னதுதான் ஹைலைட். ஏலியன் லெவல் மேன்!

இன்பாக்ஸ்

80-களில் இந்திய சினிமாவில் ஸ்டைலாக சிகரெட் பிடித்து ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது ரஜினிகாந்த், சத்ருகன் சின்ஹா, அம்பரீஷ் ஆகிய மூவரும்தான். மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். வயது, உடல் நிலை காரணங்களைக் காட்டி ரஜினியும் சத்ருகனும் புகைப்பழக்கத்துக்கு முழுக்குப் போட்டுவிட, அம்பரீஷ் மட்டும் இன்னும் அடம்`பிடித்து’ வருகிறார். அம்பரீஷையும் சிகெரெட்டை விட்டுவிட வெளிப்படையாகக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் ரஜினியும் சின்ஹாவும்! நகுதற்பொருட்டன்று!

இன்பாக்ஸ்

மானை வேட்டையாடிய வழக்கில் தண்டனை பெற்று ஜோத்பூர் மத்திய சிறையிலிருக்கும் சல்மான்கானுக்குப் பத்துக்குப் பத்து சைஸில் தனியறை ஒதுக்கப்பட்டுள்ளது. `பாலிவுட்டின் டைகர்’ என்றழைக்கப்படும் சல்மானுக்கு 106 என்ற கைதி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. செக்ஸ் வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையிலிருக்கும் சாமியார் அஷராம் பாபுவின் அறைக்கும் இவரின் அறைக்கும் ஒரு சுவர் மட்டுமே நடுவில் உள்ளது. நீ விதைத்த வினையெல்லாம்

இன்பாக்ஸ்

ஜெனிஃபர் லோபஸ் தன்னை பெர்ஃப்யூம் பைத்தியம் என்று வெளிப்படையாகவே சொல்லிக்கொள்வார். பத்து வயதில் துவங்கி, தான் சேகரித்த சென்ட் பாட்டில்களைப் பொக்கிஷமாய் வைத்திருந்தவருக்கு, புது ஐடியா பிறக்க, சொந்தமாய் பெர்ஃப்யூம் பிஸினசில் இறங்கினார். 2001-ல் சிறிய அளவில் ஆரம்பித்த அவரின் ‘ஜே லோ’ பெர்ஃப்யூம் கம்பெனி, சமீபத்தில் விற்பனையில் நம்பர் 1 ஆகிச் சாதனை படைத்துள்ளது.  ‘நடிகையாக விருது வாங்கியதைவிட பிசினஸ் உமனாக நம்பர் 1 இடத்தைப் பிடித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது’ என்று சொல்லியிருக்கிறார். வாசமுள்ள மலரிது!

இன்பாக்ஸ்

பாலிவுட் என்றாலே `பயோபிக்’ தான். தற்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையைப் படமாக்க செம போட்டாபோட்டி பாலிவுட்டில். ராஜ்குமார் ஹிரானி, நீரஜ் பாண்டே, ஜோயா அக்தர், அஷுதோஷ் கவாரிகர் என ஹிட் இயக்குநர்கள் எல்லோருமே இதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். யார் ஆக்‌ஷன் கட் சொல்லப்போகிறார்கள் என விரைவில் தெரிந்து விடும். மயில்போல பொண்ணு ஒண்ணு...!

இன்பாக்ஸ்

சையமைப்பாளர் அனிருத், ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சியை விரைவில் நடத்தவுள்ளார். இந்த நிகழ்ச்சிஜுன் 16 மற்றும் 17-ம் தேதியில் லண்டன் மற்றும் பாரீஸில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்துக்கான இசைக்கோர்ப்புக்கான வேலைகளையும் லண்டன் மற்றும் பாரீஸில் நடத்த ஏற்பாடுகள் செய்துவருகிறார் அனிருத். இசை, அதை அமை!