அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிழ், தெலுங்கு என பிஸியாக இருந்துவரும் ரெஜினா கஸான்ட்ரா, ‘ஏக் லடுக்கி கோ தேகா தோ ஆயிசா லகா’ என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அனில் கபூர், சோனம் கபூர், ராஜ்குமார் ராவ் ஆகியோருடன் ரெஜினா ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

ன்னி லியோன் - டேனியல் வெப்பர் திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன. ‘‘நாம் எப்போதும் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும் என்று ஏழு ஆண்டுகளுக்கு முன் கடவுள் முன்னிலையில் சபதம் செய்துகொண்டோம். அன்றைவிட இன்று உங்கள்மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறேன். இதே அன்புடன் வாழ்க்கை முழுக்க ஒன்றாகப் பயணிப்போம்’’ என்று நெகிழும் சன்னி, தங்கள் திருமண போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.   

நிக்கி கல்ராணியின் செல்ல நாய்க்குட்டி ‘கிங்காங்.’ அதற்கு ஆடை அணிவித்து, மேக்கப் போட்டு, கையில் கிடாருடன் இருக்கும் புகைப்படத்தை ‘மை லிட்டில் ராக்ஸ்டார்’ என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார் நிக்கி.

‘தூங்காவனம்’ இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ‘‘இதில் அக்‌ஷரா ஹாசனின் கேரக்டர் மிகவும் சவாலானதாகவும், எல்லோருக்கும் பிடிக்கும் வகையிலும் இருக்கும்’’ என்கிறார்கள்.

வைரல்

மிழில் ‘முகமூடி’ படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே, கோலிவுட்டில் சரியான வாய்ப்புகள் அமையாததால் டோலிவுட் பறந்துவிட்டார். அங்கும் வாய்ப்பு குறைய, பிரபல பத்திரிகைக்கு பிகினி உடையில் போஸ் கொடுத்திருக்கிறார். அந்த போட்டோக்கள் இணையத்தில் செம வைரல்.

கேள்வி

மிழ்த் திரைப்படத்துறை ஒன்றரை மாத காலமாக ஸ்ட்ரைக்கில் உள்ளது. க்யூப் பிரச்னையைச் சமாளிக்க, அதற்கு மாற்றாக ஏராக்ஸ், மைக்ரோ ப்ளக்ஸ், கே செரா செரா ஆகிய நிறுவனங்களுடன் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது. பல ஆண்டுகளாக க்யூப் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்த தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும், புதிதாக வந்துள்ள இந்த நிறுவனங்களுடன் இணைந்து எப்படிச் செயல்படப் போகிறார்கள்? இந்தத் திடீர் மாற்றத்தை எப்படிக் கையாளப்போகிறார்கள்?

மிஸ்டர் மியாவ்

ஹைலைட்

ட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஹிட்டான படம் ‘தெறி.’ இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. அதில் விஜய் வேடத்தில் ரவி தேஜா நடிக்கிறார். எமி ஜாக்சன் வேடத்தில் நடிக்க கேத்ரின் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார். சமந்தா வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என ஆலோசனை நடைபெற்று வருகிறது.