
பிட்ஸ் பிரேக்
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, ஓவியாவுக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன.அவற்றில் ‘யாமிருக்க பயமே', ‘கவலை வேண்டாம்' படத்தின் இயக்குநர் டிகே இயக்கவிருக்கும் ‘காட்டேரி' படமும் ஒன்று. நிறைய படங்களில் ஒவியா பிஸியாக இருப்பதால் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. எனவே, இதில் ஓவியாவுக்குப் பதிலாக ‘மீசைய முறுக்கு' படத்தில் நடித்த ஆத்மிகா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஷாலினி பாண்டே தற்போது பரதம் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். பிடித்த ஹீரோ அமிதாப் பச்சன். பிடித்த இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக். ஜபல்பூரில் பிறந்து வளர்ந்த ஷாலினிக்குத் தென்னிந்தியக் கலாசாரம் மிகவும் பிடித்திருக்கிறது என்பதனால், இங்கிருக்கும் பையனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.

அஞ்சலி, வெளிப்புற ஷூட்டிங் ஸ்பாட் அருகே புகழ்பெற்ற கோயில்கள் இருந்தால் விசிட் அடிப்பதைப் பழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது ஃபிட்னஸ் பக்கம் தீவிரமாகக் கவனம் செலுத்துகிறார். காலையில் ஒரு மணிநேரம் ஜிம்மும், இரவில் ஒரு மணிநேரம் யோகாவும் அஞ்சலியின் To-do லிஸ்டில் நிச்சயம் இருக்கும். ‘சேதுபதி’ பட இயக்குநர் அருண் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்கவுள்ளார். தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.


சாதியத்தை முற்றிலுமாக மறுப்பவர் நடிகை பார்வதி. சமீபத்தில் தனது பாஸ்போர்ட் உட்பட அடையாள அட்டைகளில் ‘மேனன்' என்ற சாதிப்பெயரை நீக்கியுள்ளார். “எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கும் சாதிப்பெயர் இருக்காது. பெயரில் சாதி தெரிய வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது” என்கிறார். விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதும் பார்வதியின் கொள்கை.

சைவ உணவு வகைகளை மட்டுமே விரும்பி உண்ணும் சாய் தன்ஷிகா, டயட் என்ற வார்த்தையைக் கேட்டாலே எரிச்சலடைகிறார். ‘சாம்பார் சாதம் பிடிக்கும். நாம செய்யும் வேலைக்குத் தகுந்தமாதிரி என்னமாதிரியான டயட்டையும் ஃபாலோ பண்ணலாம்’ என்கிறார். உலகத்தை சுற்றிப் பார்க்கும் தீரா ஆசை உண்டு. புட்டபர்த்தி சாய்பாபா கோயிலும் சித்தூர் அம்மாஜி தர்காவும் சாய் தன்ஷிகாவுக்கு ரொம்பப் பிடித்த இடங்கள்.
