பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

"என் பூஜையறையில் ரஹ்மான் போட்டோ!”

"என் பூஜையறையில் ரஹ்மான் போட்டோ!”
பிரீமியம் ஸ்டோரி
News
"என் பூஜையறையில் ரஹ்மான் போட்டோ!”

சுஜிதா சென்

“கடவுள் மாதிரி ஓர் இசையமைப்பாளர். சொர்க்கம் மாதிரி ஒரு பாடல். இதுபோதும் இந்த வாழ்க்கைக்கு...” பெருமிதத்தோடு பேசும் சாஷா திருப்பதி. ‘காற்று வெளியிடை’ பட ‘வான் வருவான்...’ பாடலைப் பாடியதற்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

“காலையில எழுந்ததும் இப்படியொரு செய்தியை எதிர்பார்க்கலை. சந்தோஷத்துல அழுதுட்டேன். அம்மா பயந்துபோய், ‘ஏன் இப்ப அழற’னு கேட்டாங்க. தேசிய விருது விஷயத்தை சொன்னேன். இது, என் வாழ்க்கையில நடந்த இரண்டாவது அற்புதம். ஏ.ஆர்.ரஹ்மான் சார் என்னைப்பார்த்து, ‘என் இசையில் ஒரு பாட்டுப் பாடுறியா’னு கேட்ட தருணம்தான் முதல் அற்புதம். ‘இது வெறும் ஆரம்பம். இன்னும் நிறைய பாடல்கள் பாடவேண்டும். நிறைய விருதுகள் வாங்கவேண்டும்’னு முதல் வாழ்த்தே ஏ.ஆர்.ரஹ்மான் சார்ட்ட இருந்துதான் வந்தது.”

"என் பூஜையறையில் ரஹ்மான் போட்டோ!”

“இசை ஆர்வம், சினிமா வாய்ப்புகள் பற்றி சொல்லுங்க?”

“நான் கனடாவில் பிறந்தவள். பிரெஞ்ச், ஆங்கில மொழிகள்ல நிறைய ஆல்பம் பாடியிருக்கிறேன். இசையை முழுநேரமா எடுத்து பிராக்டீஸ் பண்ணணும்னு மருத்துவப் படிப்பைப் பாதியில விட்டுவிட்டு மும்பைக்கு வந்தேன். லதா மங்கேஷ்கரோட பாடல்களைக் கேட்டு, பாடித் திறமையை வளர்த்துக்கிட்டேன். 2010ல் ‘பம் பம் போலே’ என்ற இந்தி படத்தில் ‘ரங் தே’ பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்து இசையமைப்பாளர் தபாஸ் ரெலய்யாதான் என்னைப் பாடகியா அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில் இந்தி, பஞ்சாபி பாடல்கள் மட்டுமே பாட வாய்ப்புகள் கிடைச்சது. கூடவே இசை நிகழ்ச்சிகள்ல பாடுவதையும் வழக்கமா வெச்சிருந்தேன்.

"என் பூஜையறையில் ரஹ்மான் போட்டோ!”

சாஷா திருப்பதி

அதில் ‘கோக்-ஸ்டூடியோ’ முக்கியமான நிகழ்ச்சி. அங்க உருது, பெங்காலினு சில மொழிகளைக் கத்துக்கச்சொல்லி, பாட வெச்சாங்க. ரஹ்மான் சாரை ஒருமுறையாவது நேரில் பார்த்திட மாட்டோமானு ஏங்கிட்டு இருந்த எனக்கு, கோக் ஸ்டூடியோவோட மூணாவது சீசனுக்கு அவரே கெஸ்டா வந்திருந்ததைப் பார்த்ததும் தலைகால் புரியலை. எங்ககூட சேர்ந்து ஒரு பாடலையும் பாடினார். ‘என் இசையில் ஒரு பாட்டுப் பாட முடியுமா’னு அவர் கேட்டப்ப எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியலை. அப்படித்தான் கோச்சடையான்’ பட ‘காதல் கணவா உன்னைக் கைவிட மாட்டேன்’ பாடலை இந்தியில் பாடினேன். இதுதான் ரஹ்மான் சாரோட இசையில் நான் பாடின முதல் பாடல். ‘காவியத் தலைவன்’ பட ‘ஏய்...மிஸ்டர் மைனர்...’, ‘ஓகே கண்மணி’, ‘மரியான்’, ‘லிங்கா’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘காற்று வெளியிடை’, ‘‘2.0’னு ரஹ்மான் சார் இசையில் பல படங்களில் பல பாடல்களை பாடியிருக்கேன், பாடிட்டும் இருக்கேன்.

ரஹ்மான் சார் எனக்குக் கடவுள் மாதிரி. 12 வருஷமா ரஹ்மான் சாரோட புகைப்படத்தைப் பூஜை அறையில வெச்சுக் கும்பிடுறேன். அந்த அளவுக்கு அன்பும் அர்ப்பணிப்பும் என் வாழ்நாள் முழுக்க இருக்கும். ரஹ்மான் சாரோட கடின உழைப்பால் எனக்குக் கிடைத்த முதல் தேசிய விருது இது. என்னை மாதிரி அவர் நிறைய பாடகர்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்து வெச்சிருக்கார். அதனால நாங்க இப்ப உலகம் முழுக்க ஃபேமஸ் ஆகிட்டோம். `வான் வருவான்’ பாடலை ரஹ்மான் சார் எனக்கு விளக்கும்போது, ‘உணர்ச்சிமிக்க ஒரு பாடலை நான் பாடி, அதைக் கெடுத்துடக்கூடாது’ங்கிறதால கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு.`இது உன்னால முடியும்’னு ஊக்கப்படுத்தி, உச்சரிப்புகளைச் சரியாச் சொல்லிக்கொடுத்து, ரஹ்மான் சார்தான் பாடவெச்சார். எனக்குக் கிடைத்த இந்த விருதும் ரஹ்மான் சாருக்குத்தான் போய்ச் சேரணும்.”