பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“இசைதான் ஒரே தீர்வு!”

“இசைதான் ஒரே தீர்வு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இசைதான் ஒரே தீர்வு!”

சுஜிதா சென்

“`காற்று வெளியிடை’ மற்றும் ‘மாம்’ படங்களுக்கு இரண்டு தேசிய விருதுகள் வாங்கியிருக்குறதுல, ரொம்பப் பெருமையா இருக்கு. ‘ரோஜா’ படத்துக்காக தேசிய விருது வாங்கியப்போ, ‘இது உனக்கு ரொம்ப சீக்கிரம் இல்லையா’னு சிலர் கேட்டாங்க. இப்போ சொல்றேன், ‘அந்த விருது எனக்கு சீக்கிரமா கெடச்சிருச்சுனு நான் நெனைச்சதில்லை” - விருது கிடைத்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

“6 தேசிய விருதுகள், 6 டாக்டர் பட்டங்கள், 2 ஆஸ்கர் விருதுகள், கிராமிய விருது, பாஃப்தா விருது... விருதுகள் உங்களுக்கு புதுசு இல்லை. எதை நோக்கி தொடர்ந்து பயணிக்கிறீங்க?”

“நம் எல்லாருக்குள்ளயும் ஒரு குழந்தைத்தனம் இருக்கு. ஒவ்வொருமுறை விருது வாங்கும்போதும் அதுதான் நம்மளை சந்தோஷப்படுத்துது. அடுத்தடுத்து விருது வாங்கணும்னு ஆசைப்படவும் வைக்குது. அதனாலதான் இரவுப் பகலா குறிக்கோளை நோக்கி ஓடிட்டே இருக்கோம். ஒரு இசையமைப்பாளன் காலத்துக்கு ஏற்றமாதிரி அப்டேட் ஆகணும். கோபம், வெறுப்பு மாதிரியான எதிர்மறை உணர்ச்சிகளுக்கு இசைதான் ஒரே தீர்வு. ஒரேயொரு பாடல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம், நம்மை ஊக்கப்படுத்தலாம்னு தீர்க்கமான நம்புறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே.”

“இசைதான் ஒரே தீர்வு!”

“இது, மணிரத்னம் படத்துக்காக உங்களுக்கு கிடைச்ச மூன்றாவது விருது. அவர் பட கம்போஸிங் தருணங்களை பகிர்ந்துக்கங்க?”

“அவர், திறமைசாலிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்தித் தர்றதுல வல்லவர். அவரை ‘ஐடியாக் கடவுள்’னுகூட சொல்லலாம். க்ரேஸியான எந்த ஒரு ஐடியா கொடுத்தாலும் அதை பயனுள்ளதா மாத்துறதுதான் அவரோட ஸ்பெஷல். வெகுசில இயக்குநர்கள் மட்டும்தான் இசையைப் சரிவர புரிஞ்சுப்பாங்க. அதில் என் அண்ணன் மணிரத்னம் மிகவும் முக்கியமானவர். தன் கருத்துக்களைக்கூட அழுத்தமா மத்தவங்கக்கிட்ட திணிக்கமாட்டார். ‘இப்படி பண்ணலாம்’னு சஜஷனாதான் சொல்லுவார். அந்தவொரு நம்பிக்கையே நம்மை கடின உழைப்பில் ஈடுபடுத்தும். ‘காற்று வெளியிடை’க்காக வேலைபார்த்த வைரமுத்து சார், கார்க்கி, பாடகர்கள் எல்லாருக்கும் நன்றி.”

“ ‘மாம்’ படத்துக்கு இசை நீங்கதான். ஸ்ரீதேவி பத்தின நினைவுகள்..?”

“ஸ்ரீதேவி மேடம் சென்னைக்கு என்னைத் தேடிவந்து ‘மாம்’ படத்துல கமிட் பண்ண வெச்சாங்க. பாதிக்கப்பட்டவங்க அவங்க பக்கம் உள்ள நியாயத்தை சரியா வெளிப்படுத்துற படம்தான் அது. இந்த மாதிரியான ஒரு வித்தியாசமான படத்துக்கு நான் இதுவரை இசையமைச்சதே இல்லை. ஸ்ரீதேவி-போனி கபூர் இருவரோட தைரியத்தாலதான் அந்தப்படம் சாத்தியமாச்சு. ஸ்ரீதேவி மேம் இப்ப நம்மகூட இல்லைனாலும், அவங்களோட ஆன்மா என்னைக்குமே நம்மக்கூட இருக்கும். அசாதாரணமான அழகு, இரக்க குணம் எல்லாத்தையும் தாண்டி அவங்க மிக உன்னதமான மனிஷி.”