
சைபர் ஸ்பைடர்
facebook.com/Karl Max Ganapathy:
போராளிகள் இங்கு அனலாகக் கக்கும்போது, அந்த வெம்மையிலிருந்து தப்பிக்க சில நண்பர்களின் பக்கங்களுக்குப் போய்க் குத்தவைப்பது வழக்கம். இப்போது அத்தகைய நண்பர்கள் அருகிக்கொண்டே வருகிறார்கள். மாற்று முயற்சியாக ஃபேக் ஐடியைத் தூசுதட்டிக் கிளம்பினால், சக ஃபேக் ஐடிகளும் களத்தில் உக்கிரமாகவே இருக்கிறார்கள்.

facebook.com/Ramya Leela:
எல்லா வெற்றிடங்களும் யாரோ ஒருவரால் நிரப்பத்தான்படுகின்றன. என்ன, அதே அளவு இல்லாமல் கொஞ்சம் மேடு பள்ளங்களாக...!
facebook.com/Abdul Hameed Sheik Mohamed
இந்திய வரலாற்றில் தமிழக சாலைகளில் நுழைய முடியாத முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார் மோடி.

twitter.com/Kozhiyaar
ஓட்டு போடும்போது மட்டும்தான் மூளையைக் கழட்டிவெச்சுடுவோம். மத்தபடி நாங்க அறிவாளிங்கதான்!
twitter.com/Kadharb32402180
மார்க்கெட் இல்லாத இயக்குநர்லாம் போராட வந்துட்டாங்களாம்! சரி, நீங்க என்னண்ணே பண்றீங்க?நாங்க, நோட்டாகூட போராடிட்டு இருக்கோம்.

twitter.com/Kozhiyaar:
சொன்னாக் கேட்க மாட்டோம், செருப்பைத் தூக்கிப் போட்டால்தான் திரும்பிப் பார்ப்போம் என்றால், தவறு யார் மீது?!
twitter.com/amuduarattai:
``உங்க அப்பாவுக்கு ஒண்ணும் தெரியாது” என்பதில் தொடங்கி ``உங்களுக்கு ஒண்ணும் தெரியாதுப்பா” என முடிகிறது நம் வீடுகளில்.

twitter.com/manipmp:
பத்து பேய்ப்படம் பார்த்த த்ரில்லைத் தருவது... தலை துவட்டிய டவலில் உதிர்ந்த நம் முடிகள்.
twitter.com/mekalapugazh:
இணையம் கண்டுபிடிக்கப்பட்டதால் நம்முடைய நேரம் மிச்சமாகும்னு எப்படி நம்பப்பட்டதோ, அப்படித்தான் மதங்கள் தோன்றியபோது குற்றங்கள் குறையும் என நம்பப்பட்டிருக்கும்போல. இரண்டுமே பொய்யாய்ப்போனதே கசக்கும் உண்மை.
twitter.com/manipmp:
ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும். அன்பே, நீ உப்புமா செய்திருந்தால்!

twitter.com/Thaenmittai1910:
Youtube-ல மட்டும் அஞ்சு நிமிஷத்துல சமையல் செஞ்சு முடிச்சிடுறாங்க.
நமக்கு, சமையல் அறையில் லைட்டர் தேடவே அஞ்சு நிமிஷம் ஆகுது.

twitter.com/thoatta:
`IPL இடம் மாற்றத்தினால் காவிரி மேலாண்மை வாரியம் வந்திடும்ல’னு நக்கலடிக்கிற இதே வாய்தான், பணமதிப்புநீக்க சமயத்துல `ஒருநாள் பொறுத்துக்குங்க, எல்லாம் சரியாகிடும்; கறுப்புப் பணம் ஒழிஞ்சுடும்; இந்தியா 2020-ல வல்லரசாகிடும்’னு ஊளைவிட்டுச்சு. இப்ப வல்லரசாகிட்டு இருக்கோமா?

twitter.com/raajaacs:
நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகின்றன கண்கள். சுற்றிவளைத்து வருகின்றன சொற்கள்.
twitter.com/kathir_twits:
ரஜினி, போருக்குத் தயாரோ இல்லையோ, கோடை விடுமுறையில் குழந்தைகளைச் சமாளிக்கும் போருக்குத் தயாராகிவிட்டனர் பெற்றோர்கள்!

facebook.com/karthikeyan maddy:
எனக்கு லோன் கூட வேணாம்டா..
தயவுசெஞ்சு வடநாட்டுலருந்து போன் பண்ணி “ஹலோ மிஸ்டர் கார்த்திகீயான்”னு மட்டும் கூப்புடாதீங்கடா!