அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

• ராம் சரண் - சமந்தா நடிப்பில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில், காது கேளாத மெக்கானிக்காக ராம் சரண் நடித்திருப்பதைப் பார்த்துப் பூரித்த ரெஜினா கஸான்ட்ரா, தானும் இது மாதிரியான ரோல்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையுடன் சொல்கிறார். 

மிஸ்டர் மியாவ்

• ஹிந்தியில் ‘ஜூலி 2’ படத்தில் படு கவர்ச்சியாக நடித்த ராய் லக்ஷ்‌மி, இப்போது தமிழில் ‘யார்’, ‘நீயா 2’ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தான் பிகினி உடையில் இருக்கும் போட்டோவை ‘என் உடல் சாதனை படைத்துள்ளது என என் மனம் நம்புகிறது. நீங்கள் நம்புகிறீர்களா?’ என்ற கேள்வியுடன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் செம வைரல்.

மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

காஷ்மீர் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்முறை பற்றி பலரும் பல தளங்களில் பேசுகிறார்கள். நிவேதா பெத்துராஜ், சிறுவயதில் பெண் குழந்தைகளுக்கு நேரும் பாலியல் சீண்டல்கள் பற்றி ஒரு வீடியோவைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘எனக்கும் இதுபோல சிறுவயதில் நடந்தது. பெரும்பாலும் குடும்பத்துக்கு நெருக்கமான உறவினர்களும் நண்பர்களுமே இந்தக் கொடுமையை நிகழ்த்துகிறார்கள்’’ என்று சொல்கிற நிவேதா, ‘குட் டச் பேட் டச்’ பற்றியும் அக்கறையுடன் பேசியிருக்கிறார். 

ஹைலைட் 

‘மூடர்கூடம்’ நவீன் தன் அடுத்த படத்தை ஜூலையில் தொடங்குகிறார். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தில், விஜய் ஆண்டனி ஹீரோ. அக்‌ஷரா ஹாசனை இவருக்கு ஜோடியாக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தப் படத்துக்கு முன்பே, ஃபேன்டஸி த்ரில்லர் படம் ஒன்றைத் தானே ஹீரோவாக நடித்து முடித்துவிட்டார் நவீன். அதில், நவீனுக்கு ‘கயல்’ ஆனந்திதான் ஜோடி.

வைரல்

‘காற்று வெளியிடை’ நாயகி அதிதி ராவ் பாட்டு பாடுவதில் கில்லி. மணிரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ படத்தில் வரும் ‘சண்டைக்கோழி’ பாடலின் ஹிந்தி வெர்ஷனைப் பாடித் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து லைக், ஷேர் செய்வது மட்டுமில்லாமல், அதிதியைப் பாராட்டியும் புகழ்ந்தும் கமென்ட் செய்கின்றனர்.

மிஸ்டர் மியாவ்

• ‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு தமிழில் சரியான வாய்ப்பு இல்லாததால், பாலிவுட் பக்கம் பறந்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். ஹிந்தியில் மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்கத்தில் வித்யுத் ஜம்வாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் ஸ்ருதி.

மிஸ்டர் மியாவ்

• பட வாய்ப்புக்காக நடிகைகளைத் தவறான செயல்களுக்கு அழைப்பது பற்றித் தெலுங்குத் திரையுலகில் பலர் பேசி வருகின்றனர். இந்நிலையில், ‘‘இதுவரை என்னிடம் அப்படி யாரும் அணுகியதில்லை. ஆனால், என் தோழிகள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் பிரச்னை எல்லாத் துறைகளிலும் உள்ளது. பெண்கள் தைரியமாகப் பேசி இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்று ரம்யா நம்பீசன் சொல்லியிருக்கிறார்.