Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிழில் பல பாடல்களை எழுதிப் பாடியுள்ளார் சிம்பு. இப்போது முதன்முறையாகக் கன்னடப் படத்தில் பாட இருக்கிறார். ‘காவிரி விவகாரத்தில் கன்னட மக்களுக்கு சிம்பு வைத்த கோரிக்கை இந்த ரூபத்தில் உருமாறி வந்துள்ளது’ என கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

‘ப
ண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி படத்தை மீண்டும் இயக்குகிறார், இயக்குநர் அருண்குமார். அஞ்சலி ஹீரோயினாக நடிக்கும் இந்த ஆக்‌ஷன் படத்துக்குத் தாய்லாந்திலிருந்து ஸ்டன்ட் கலைஞர்களை இறக்கியிருக்கிறார் அருண்குமார்.

மிஸ்டர் மியாவ்

வைரல்

.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘விஜய் 62’ படத்துக்காக, பல இளைஞர்களுடன் விஜய் பைக்கில் ஊர்வலம் போவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியை யாரோ ஒருவர் வீடியோ எடுக்க, அது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

ஹாட் டாபிக்

.எல்.விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘தியா’. முதலில் ‘கரு’ எனப் பெயரிடப்பட்டிருந்த இந்தப்படம், டைட்டில் ரைட்ஸ் காரணமாக ‘தியா’ என்ற பெயரில் வெளியானது. திடீரென்று ‘‘அது என்னுடைய கதை. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன’’ என உதவி இயக்குநர் சந்திரகுமார் என்பவர் கூறியிருக்கிறார். ஆனால், ‘‘இந்தக் கதை நான் எழுதியதுதான். கதையையும் தலைப்பையும் 2013-ம் ஆண்டே  நான் லைகாவிடம் சொல்லிவிட்டேன். சந்திரகுமார்மீது அவதூறு வழக்கு தொடர இருக்கிறேன்” என்கிறார் விஜய். தவிர, ‘தி அன்பார்ன் சைல்ட்’ என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் இது எனவும் பேசப்பட்டு வருகிறது.

ஹைலைட்

‘த
ரமணி’ படத்தைத் தொடர்ந்து, ‘கா’ என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஆன்ட்ரியா. க்ரைம் த்ரில்லரான இந்தப் படத்தில், வைல்டுலைஃப் போட்டோகிராபராக வருகிறார் ஆன்ட்ரியா. அறிமுக இயக்குநர் நாஞ்சில் இயக்க, ‘மைனா’ படத்தைத் தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கேரளா மற்றும் அந்தமான் காடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது. 

மிஸ்டர் மியாவ்

சாம் மாநில சுற்றுலாத் தூதராக ப்ரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார். பாலிவுட், ஹாலிவுட் என பிஸியாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா அசாமில் பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து அம்மாநிலத்தின் பாரம்பரிய நடனம் ஆடிய வீடியோவை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு லட்சக்கணக்கான லைக்ஸ் குவிகின்றன.

மிஸ்டர் மியாவ்

னது ரஷ்யக் காதலரைத் திருமணம் முடித்து ரஷ்யாவிலேயே செட்டிலாகிவிட்டார் ஸ்ரேயா. திருமணத்துக்குப் பின் எந்தப் படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில், இவர் நடிப்பில் உருவான ‘பாமவுஷ்’ என்ற ஹிந்தி படம் ஜூன் மாதம் ரிலீஸாகிறது. அந்தப் படத்துக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே மீண்டும் நடிக்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வாராம் ஸ்ரேயா.

மிஸ்டர் மியாவ்

‘காலா’ படத்தில் வரும் ஒரு பாடல், ஒரு மில்லியன் குரல்களை வைத்துப் பாடப்பட்டிருக்கிறது. ‘‘ஒரு பாட்டுக்கு ஒரு மில்லியன் குரல்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது என் நீண்டகாலக் கனவு. அது ‘காலா’ படத்தில்  நிறைவேறியுள்ளது. அனைத்து தரப்பு மக்களின் குரலையும் பதிவுசெய்திருப்பதில் மகிழ்ச்சி’’ என்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்