
சனா
“நான் சென்னைப் பொண்ணுதாங்க. நெறைய தெலுங்கு படத்துல நடிச்சதால, நான் ஏதோ ஆந்திராப் பொண்ணுன்னு எல்லாரும் நினைச்சிட்டிரு க்காங்க’’ - சுத்தமான தமிழ் பேசி அதிர வைக்கிறார் ரெஜினா கசாண்ட்ரா. விரைவில் பாலிவுட்டுக்கும் பறக்கவிருக்கிறது இந்தப் பச்சைக்கிளி.
`` ஃபர்ஸ்ட் டைம் இந்தியில் நடிக்கப்போறேன். ரொம்ப ஹேப்பியா இருக்கு. படத்தோட இயக்குநர் ஷெல்லி சோப்ரா. நேரா சென்னைக்கு வந்து என்கிட்ட படத்தோட கதை சொன்னார். என் கேரக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்துச்சு. அதனால் எனக்கே கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு. ஆனா, ‘இந்த கேரக்டர் நீங்கதான் பண்ண முடியும்’னு இயக்குநர் உறுதியா இருந்தார். படத்துல என் கேரக்டர் பேர் குகூ. பஞ்சாபி பொண்ணு வேஷம். இந்தி நடிகை சோனம் கபூரும் நடிக்குறாங்க. இந்தப் படத்தோட பெயரே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அனில் கபூருடைய பாட்டு வரிதான் படத்தோட பேர். ‘ஏக்கு லடுக்கீ கோ... தேகா தோ கெய்சா லகா’ ’’

“தெலுங்கில் ஓரினச் சேர்க்கையா ளர்களை பற்றிய ‘ஆவ்’ படத்துல நடிச்சிருந்தீங்களே...”
`` `ஆவ்’ல நடிச்சது எனக்கு ரொம்ப நல்ல அனுபவம். ஏன்னா, நானே எனக்கான கெட்டப் மாற்றினேன். என் தலைமுடியில் பாதியை ஷேவ் பண்ணினேன். அது இப்போ தான் வளர ஆரம்பிக்குது. நெறைய டாட்டூஸ் போட்டேன். படத்துல என்கூட நித்யா மேனன், காஜல் அகர்வால் நடிச்சிருந்தாலும் எங்க மூணு பேரையும் ஸ்க்ரீனில் ஒண்ணாவே பார்த்திருக்க முடியாது. இது மாதிரி நிறைய வித்தியாசமான கேரக்டர்கள் பண்ணணும்னு ஆசைப்ப டுறேன்.’’
“ ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்னாச்சு?”
``செல்வராகவன் சார் படத்துல கமிட் ஆனப்போ அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு சொன்னாங்க. பட், அபாரமான இயக்குநர் செல்வா சார். கதையைச் சொல்ற விதமா இருக்கட்டும், நடிப்பை வாங்குறதா இருக்கட்டும் எல்லாத்துலயும் செல்வா சார் அருமையான ஆள். இப்போதைக்கு உங்களை மாதிரியேதான் நானும் படம் எப்போ ரிலீஸாகும்னு எதிர்பார்த்துக்கிட்டே இருக்கேன்”

“தமிழில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற கேரக்டரில் நடிக்கலைனு ஆதங்கம் இருக்கா?”
``தமிழ், தெலுங்குனு ரெண்டு மொழிப் படங்களிலும் நான் பண்ணின கேரக்டர்கள் எல்லாமே நானே விரும்பிப் பண்ணினதுதான். அந்த வகையில் நான் சந்தோஷ மாத்தான் இருக்கேன். கொஞ்சம் டைம் ஆனாலும், இன்னும் வெயிட்டான கேரக்டர்கள் என்னைத் தேடி வரும்னு நம்பிக்கை இருக்கு. அதுக்காக வெயிட்டிங்.’’
“சினிமாத்துறையில் பாலியல் தொல்லை இருப்பதாக நினைக்கி றீங்களா?”
“நான் ரொம்ப வருத்தப்படுறேன். ஒரு நடிகை லைம் லைட்டுல இருக்குற னால்தான் இந்த மாதிரிப் பேச்செல்லாம் வெளியே வருது. சினிமாவுக்கு வெளியே இருக்குறவங்களுக்கு சினிமா துறையில இருக்குறவங்க மேலே எப்பவும் ஒரு கண்ணு இருக்கும். குறிப்பாக நடிகைகள் மேல. பாலியல் தொல்லை சினிமாவில நிச்சயமா இருக்குங்க. சில பேர் வாய்ப்புக்காக அட்வான்ட்டேஜ் எடுத்துக்கு றாங்க. அப்படி யாராவது அட்வான்ட்டேஜ் எடுத்துப் பேசினா, அதை நாமதான் எதிர்கொள்ளணும். எந்தத்துறையில் வேலை செய்ற பெண்ணா இருந்தாலும் அதுமாதிரி சந்தர்ப்பத்துல எதிர்த்து நிற்கணும். வெளியே சொல்லவும் தயங்கக் கூடாது. துணிச்சலா எதிர்க்கணும்.’’