
வாரா வாரம் வெச்சு செய்வோம்!கற்பனை: கொஸ்டின்குமார் - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

நிருபர் : மேடம் வணக்கம். ‘என்னதான் அழுதாலும் தமிழ்நாட்டுக்குக் காவிரித் தண்ணீர் கிடைக்காது’ன்னு சுப்பிரமணியன் சுவாமி சொல்றாரே?
தமிழிசை : அது அவரோட சொந்தக் கருத்து!

நிருபர் : பெரியார் சிலையை உடைக்கணும்னு ஹெச்.ராஜா சொன்னது...?
தமிழிசை : அது அவரோட சொந்தக் கருத்து!
நிருபர் : திங்கக்கிழமைக்கு அப்புறம்தான் செவ்வாய்க்கிழமை வரும்னு பொன்.ராதாகிருஷ்ணன் சொல்றாரே?
தமிழிசை : அது அவரோட சொந்தக் கருத்து!
நிருபர் : எஸ்.வி.சேகர் ஃபேஸ்புக்கில் எழுதினது...?
தமிழிசை : அது அவரோட சொந்தக் கருத்து!
நிருபர் : போலீஸ் அவர்மீதான புகார்ல எந்த நடவடிக்கையும் எடுக்கலை. ஆனா அவர் திருப்பதிக்குப் போயிருக்காரே?

தமிழிசை :அது திருப்பதியோட கருத்து!
நிருபர் : மேடம்....?
தமிழிசை : ஸாரி ஸாரி, அது உங்க கருத்து!
நிருபர் : ‘தமிழர்கள் நீர் மேலாண்மையில் சிறந்தவர்கள்’னு மோடி சொல்லியிருக்காரே?
தமிழிசை : பாராட்டப்பட வேண்டிய விஷயம்தானே, அது பிரதமர் மோடிஜி கருத்து!
நிருபர் : ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் பற்றி அவர் ஒரு கருத்தும் சொல்லலையே?
தமிழிசை : ஏதாவது சொன்னா ‘அது அவர் கருத்து’ன்னு சொல்லலாம். ஒண்ணுமே சொல்லலையே?

நிருபர் : அதைத்தான் மேடம் கேட்கிறேன். மோடி வாயைத் திறக்காம இருக்கிறதைப் பத்தி உங்க கருத்து...?
தமிழிசை : நோ கமென்ட்ஸ், அதாவது ‘கருத்து இல்லை’னு எழுதிக்கங்க!
நிருபர் : ‘மகாபாரதம் காலத்திலேயே இன்டர்நெட் இருந்தது’ன்னு உங்க திரிபுரா பா.ஜ.க. முதல்வர் சொன்னாரே?
தமிழிசை : அது அவரோட சொந்தக் கருத்து!
நிருபர் : ‘ரேப் நடக்கிறதெல்லாம் சாதாரணம்தான். இதெல்லாம் பெரிசுபடுத்தக்கூடாது’ன்னு ஒரு பா.ஜ.க. பிரமுகர் சொல்லியிருக்காரே?
தமிழிசை : அது அவரோட சொந்தக் கருத்து!

நிருபர் : ‘குழந்தைகளை ரேப் பண்றாங்கன்னா பெற்றோர்கள்தான் எச்சரிக்கையா இருக்கணும்’ன்னு இன்னொரு பா.ஜ.க. பிரமுகர் சொல்லியிருக்காரே?
தமிழிசை : அது அவரோட சொந்தக் கருத்து!
நிருபர் : ‘தமிழகத்தில் தாமரை மலரும்’கிறது...?
தமிழிசை : அது தாமரையின் சொந்தக் கருத்து!
நிருபர் : மேடம்...
தமிழிசை : அதுவந்து...இது என்னோட சொந்தக்கருத்து!
நிருபர் : பேட்டியை முடிச்சுக்கலாமா மேடம்?
தமிழிசை : அது உங்க சொந்தக் கருத்து!