அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

வைரல்: தீபிகா படுகோன் விழாக்களுக்கு வித்தியாசமாக உடை அணிந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தீபிகா படுகோன் அணிந்து வந்த உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘பிங்க் பீக்காக்’ என கமென்ட் போட்டு ஆராதிக்கிறார்கள் ரசிகர்கள். அந்த உடையில் தீபிகா இருக்கும் போட்டோ, இணையத்தில் செம வைரல்.

மிஸ்டர் மியாவ்

• லவ்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த தமன்னாவுக்கு ‘பாகுபலி’ படம் அழுத்தமான கேரக்டரைக் கொடுத்தது. இப்போது, ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் வீராங்கனையாக நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் சொல்கிறார் தமன்னா. 

மிஸ்டர் மியாவ்

• ஹோம்லியான உடை அணிவதில் கவனம் செலுத்திவந்த அமலாபால் இப்போது கவர்ச்சிக்கு மாறிவிட்டார். தான் கவர்ச்சி உடையில் இருக்கும் போட்டோக்களை அடிக்கடி இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

கேள்வி: ரஜினியும் கமலும் அரசியல் பிரவேசம் செய்வதையே பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி, ஜூலி உள்ளிட்டோரும் அரசியலுக்கு வருவதாகப் பேச்சு. எல்லோரும் வேட்பாளர் ஆகிவிட்டால், வாக்காளர்கள் யார்?

மிஸ்டர் மியாவ்

• சாய் பல்லவி இப்போது சர்வானந்த் ஜோடியாக ‘பாடி பாடி லீஷ் மனசு’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். நிஜ வாழ்க்கையில் டாக்டரான சாய் பல்லவிக்கு படத்திலும் மருத்துவ மாணவி வேடம்தானாம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் சாய் பல்லவி வங்காளப் பெண் தோற்றத்தில் இருப்பதால், அவரின் ரசிகர்கள் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

• ‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்திரியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷை ஒட்டுமொத்தத் திரையுலகமும் பாராட்டி வருகிறது. மோகன்லால், கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களின் வாழ்த்துகளைப் பெற்றதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் கீர்த்தி.

• ‘‘படத்தில் நானும் இருந்தேன் என்பது மாதிரி கதைகள் இனிமேல் தேவையில்லை. நல்ல கதை, திருப்தியான கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன். அதற்காகத்தான் படங்களைக் குறைத்துள்ளேன்’’ என்கிறார் ஸ்ருதி ஹாசன். 

மிஸ்டர் மியாவ்

ஹைலைட்: சூர்யா - கே.வி.ஆனந்த் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தில் முக்கியமான ரோலில் மோகன்லால் நடிக்கிறார். ‘ஜில்லா’ படத்துக்குப் பிறகு தமிழில் மோகன்லால் நடிப்பதால், இந்தப் படத்தில் அவருக்கு என்ன ரோலாக இருக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.