பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

யன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்.  இந்நிறுவனத்துக்கு ‘ரவுடி புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரைப் பரிசீலித்துக்கொண்டிருக்கிறார்.  முதல் படமாக அதர்வா நடிக்க ‘இதயம் முரளி’ என்ற படத்தை  தயாரிக்க இருக்கிறாராம். நயனும் ரவுடிதான்!

ராமானுஜத்தின் கணிதப்புதிர்கள் போலவே ஐசக் நியூட்டன் சமன்பாடுகள் பலவும் 350 வருடங்களைத்தாண்டியும் தீர்வு காணப்படாமலே இருக்கின்றன.  ஜெர்மனியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவன் சௌரியா ரே, அப்படியான நியூட்டன் சமன்பாடுகள் இரண்டைத் தீர்த்துவைத்து ஆச்சரியம் தந்திருக்கிறான். `அடுத்த ஸ்ரீனிவாச ராமானுஜன் வந்தாச்சு’ என கணித உலகமே கொண்டாட, சௌரியா ரே தம்ஸ்-அப் காட்டிச் சிரிக்கிறார். குட்டிப்புலி

இன்பாக்ஸ்

பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனஸும் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்பதுதான் பாலிவுட்டின் சமீபத்திய வைரல் கிசுகிசு. நிக் ஜோனஸுக்குப் பிரியங்காவைவிட 10 வயது குறைவு. இருவரும் அடிக்கடி டேட்டிங் போவதால் கிளம்பிய வதந்தி இது. எனினும் பிரியங்காவின் அம்மா மது சோப்ரா, `அயல் நாட்டுக்காரர் தங்கள் வீட்டு மருமகனாய் வருவதை ஏற்க மாட்டேன்’ என ஸ்ட்ரிக்டாகக் கூறியுள்ளார். எதிர்ப்புகள் இல்லாமல் காதலா?

இன்பாக்ஸ்

யக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கி ரன்பீர் கபூர் நடிக்கும் ‘சஞ்சு’ படத்துக்காக நகம் கடித்துக் காத்திருக்கிறார் சஞ்சய் தத். அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படம் ஆச்சே! படம் ரிலீஸ் ஆகும் முன்பே, ட்ரெய்லரில் ரன்பீர் அடி வாங்கும் காட்சிக்கு சஞ்சய்தத் வீட்டில் பலத்த எதிர்ப்பாம். சஞ்சய்தத் மிரட்டல் வில்லனாக நடித்தபோதெல்லாம் ஒன்றும் சொல்லாத குடும்பம் இப்படி அடி வாங்கும் காட்சிக்கு எதிர்க்கிறார்களே என நொந்து போயிருக்கிறார் சஞ்சு. `குடும்பத்தினருக்கு இந்தப் படத்தை தியேட்டரில் கூட்டிச் சென்று காட்டப்போவதில்லை’ என்று பேட்டி கொடுத்திருக்கிறார். சஞ்சு தாதா!

இன்பாக்ஸ்

ட்விட்டரில் 18 மில்லியன் விசிறிகள் பின் தொடர்வதைப் பார்த்ததும் லேடி காகா, புது முயற்சியாய் தனது ரசிகர்களுக்கு என்றே பிரத்யேகமாய் ஒரு சமூக வலைதளத்தை `லிட்டில் மான்ஸ்டர்ஸ்’ என்ற பெயரில் ஏற்படுத்துகிறார். லேடியின் இந்த அதிரடி முயற்சி பாதிப்பில் மடோனா உள்ளிட்ட பிற பெண் இசை பிரபலங்களும் இதே பாணியில் இறங்கியிருக்கிறார்கள். புது ட்ரெண்ட்!

‘காலா’வுக்குப் பிறகு இரஞ்சித் இந்திப்படமொன்றை இயக்கும் முனைப்பில் இருக்கிறார். அண்மையில் அமீர்கானோடு ஒரு சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறார். அநேகமாக அமீர்கான் - பா.இரஞ்சித் கூட்டணி விரைவில் இந்திப்படமொன்றில் இணையலாம் என்ற பேச்சு பாலிவுட்டையும் தாண்டி கோலிவுட்டைச் சுற்றியடிக்கிறது. மும்பை அதிரட்டும்!

இன்பாக்ஸ்

பாலிவுட் மசாலா டைப் ஸ்பானிய மொழிப் படங்களால், லத்தின் அமெரிக்க நாடுகளைக் கலக்கிவரும் இந்திய நடிகர், பிரபாகர். பீகாரில் பிறந்து வளர்ந்த இவர், மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவில் உயர்  படிப்பை மேற்கொண்டார். பின் பாலிவுட் படங்களை விநியோகித்து வந்த பிரபாகர், தானே நடித்து ஸ்பானிய மொழியில் இயக்கிய ‘enredados:la confusion’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இதனையடுத்து பிரபாகர் லத்தீன் அமெரிக்கா நாடுகளின் ராக் ஸ்டார் ஆகியுள்ளார். இந்தியன்டா!

இன்பாக்ஸ்

லையாள ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போவது மோகன்லால்தான். இதற்காக நடிப்புக்கு சிறிய இடைவெளி விட்டிருக்கிறார் பிஸி ஸ்டார். ‘பிக்பாஸ்’ ஷூட்டிங் தொடங்கு வதற்கு முன்பாக, ஏற்கெனவே கெஸ்ட் ரோலில் கமிட் ஆகியிருந்த `காயங்குளம் கொச்சுண்ணி’ படத்தை ஒரு ஷெட்யூலில் முடித்துக்கொடுத்திருக்கிறார். `ஈ லோகத்தில் லாலேட்டன் போல வல்லிய ஆக்டரெ ஞான் கண்டில்லா’ என ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளி பேட்டிகொடுத்திருக்கிறார் க.கொ படத்தின் ஹீரோ நிவின் பாலி. ஞான் நோக்கும்!