
சைபர் ஸ்பைடர்
facebook.com/adithya.m
இந்தியாவில் டென்னிஸ் பால்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கே தயாரிக்கப்படுகின்றன.
facebook.com/jvp.sachin
மணிரத்னம், அவரது பார்வையில் ஒரு ராமாயணக் கதையைச் சொன்னார். இரஞ்சித், அவரது பார்வையில் ஒரு ராமாயணக் கதையைச் சொன்னார். எடப்பாடி பழனிசாமியும் சேக்கிழார் எழுதிய ஒரு ராமாயணக் கதையை அவரது பார்வையில் சொல்ல வந்தார். அது என்னவென்பதைக் கேட்காமலேயே அவரைப் புறக்கணித்துவிட்டது இச்சமூகம்.

facebook.com/puthiyaparithi
‘காலா’ படம் பாத்தவங்க எல்லாம் நானா படேகர்தான் ரஜினினு சொல்லிட்டு இருக்காங்க. ஆனா நானா படேகர் இஸ் மோடிஜி. உண்மையில் சாயாஜி ஷிண்டேதான் ரஜினி. ‘குமாரு.. யாரு இவரு?’. இரஞ்சித்தின் தீர்க்க தரிசன ‘சம்பவம்.’
facebook.com/dirdino
போனை சார்ஜர்ல போட்டுட்டு சுவிட்ச் ஆன் பண்ணாம தூங்கிட்டு, காலையில எந்திருச்சு உக்காந்து இருக்கிற மனநிலையை விடவா, லவ் ஃபெய்லியர் ஏமாற்றம் தந்திடப்போகுது?

facebook.com/iam.suriyaraj
எஸ்.வி.சேகர் மரு வெச்சுக்கிட்டு சுத்தினாகூட மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்!
facebook.com/pradeepkrishna.m5
எல்லார் வாழ்க்கையிலும் ‘சரினா’க்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை நினைக்கும்போதும் பார்க்கும்போதும், சந்தோஷப்படத்தான் எல்லோராலும் முடிவதில்லை.

twitter.com/HAJAMYDEENNKS
ஞாயிற்றுக்கிழமை தேதியைக் கிழிக்க மனம்வருவதில்லை, காலண்டரில் !
twitter.com/kumarfaculty
போன் பேசுபவர்கள் இருவகை. ‘வீட்டில் இருக்கிறேன் ஆபீஸ் போய் பேசுகிறேன்’, ‘ஆபீஸில் இருக்கிறேன். வீட்டிற்குப் போய் பேசுகிறேன்’.
twitter.com/Akku_Twitz
“தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு எதிர்கட்சிகளே இல்லை” - அமைச்சர் ஓ.எஸ். மணியன். தமிழகத்தின் எதிரி கட்சியே அ.தி.மு.க.தான்

twitter.com/SelvaBSctwitz
டேய்.. ‘கடவுள் எல்லாத்தையும் பார்த்துட்டுதான் இருக்கான்’ is a word. ‘கடைசி வரையும் கடவுள் பார்த்துக்கிட்டேதான் இருப்பான்’ is a emotion...!
twitter.com/Suba_Vee
50 நாள்களைக் கடந்தும் தலைமறைவாக இருக்கும் எஸ்.வி.சேகருக்குத் தமிழக அரசும், காவல் துறையும் இணைந்து ஒரு பாராட்டு விழா நடத்தினால் என்ன!

twitter.com/amuduarattai
உங்கள் சின்னச் சின்ன கோபங்களைச் சேர்த்து வையுங்கள். அது ஒரு நாள், உங்களை சொரணை கெட்டவனாக்க உதவும்.
twitter.com/abuthahir707
இந்த இணைய காலத்தில் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் தமிழ் ராக்கர்ஸுக்கே முதலிடம்
facebook.com/rajeev.rajamani.9
கடவுள் 250ரூபாய்க்கு ‘பளிச்’னும், 100ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்துக்கு மங்கலாகவும் காட்சி தருகிறார்.

facebook.com/umanathselvan
வீட்டைக்கட்டிப்பார். கல்யாணம் செய்துபார்
ரெண்டு பசங்களைப் பள்ளிக்கு கிளப்பிப்பார்!
facebook.com/boopath23
எனது பொறுமைக்கு, சின்ன வயசுல தூர்தர்ஷன் டிவி பார்த்ததும் ஒரு காரணம்தான்!