சினிமா
Published:Updated:

“பாலிவுட்டைவிட தமிழ் சினிமா பெஸ்ட்!”

“பாலிவுட்டைவிட தமிழ் சினிமா பெஸ்ட்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பாலிவுட்டைவிட தமிழ் சினிமா பெஸ்ட்!”

சுஜிதா சென்

“பாலிவுட்டைவிட தமிழ் சினிமா பெஸ்ட்!”

ஹூமா, ‘காலா’வில் கவர்ந்த, ‘காலா’வைக் கவர்ந்த கண்ணம்மா.

“சமையல், ட்ராவல் ரெண்டுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கேயுமே போக நேரம் கிடைக்கலைனா பீச்சுக்குப் போவேன். ‘காலா’ படத்தோட சில காட்சிகளை சென்னையில எடுத்தப்போ, அடிக்கடி பீச்சுக்குப் போயிட்டு வர்றதை வழக்கமா வெச்சிருந்தேன்.” என்று புன்னகைத்தபடி நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார்.

“தமிழ் சினிமா என்ட்ரி எப்படி நடந்துச்சு?”

“நானும் தனுஷும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். ஒருநாள் அவர் எனக்கு போன் பண்ணி, ‘உங்களுக்கு ஒரு ஸ்க்ரிப்ட் இருக்கு நடிக்கிறீங்களா?’னு கேட்டார். நான் அவர்கூட ஹீரோயினா நடிக்கக் கூப்பிடுறார்னு நெனச்சு ஓகே சொன்னேன். அப்புறம்தான் இந்தப் படத்துல, ‘நான் ஹீரோவா நடிக்கலை. இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன். ஆனால் ஹீரோ வேற’ன்னு சொன்னார். ‘அப்படி யார்’னு கேட்டப்போதான் ரஜினி சார் படம்னு தெரிய வந்துச்சு. உடனே கிளம்பி சென்னைக்கு வந்துட்டேன். சாதாரணப் பெண் கதாபாத்திரங்களைவிட சவாலான பெண் கதாபாத்திரங்கள்ல நடிக்கிறதைத்தான் நான் விரும்புறேன். சரீனா கதாபாத்திரம் என்னை ரொம்பக் கவர்ந்ததால் அதில் நடிக்கச் சம்மதிச்சேன். இப்போ இருக்குற அரசியலை மக்களோட பார்வையில இருந்து சொல்ற இயக்குநர் இரஞ்சித் சார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மாதிரி, டீட்டெயிலிங்குக்காகத் தனியா ஆராய்ச்சிகள் பண்ணுபவர்.”

“பாலிவுட்டைவிட தமிழ் சினிமா பெஸ்ட்!”

“குடும்பம் பற்றி...”

“டெல்லியைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பத்துப் பொண்ணு நான். அப்பா சலீம் குரேஷி, டெல்லியில் நிறைய ரெஸ்டாரன்ட்களை நடத்திட்டிருக்கார். அம்மா அமீனா குரேஷி, இல்லத்தரசி. காலேஜ் வரைக்கும் டெல்லியிலதான் இருந்தேன். 2008-ல படிப்பு முடிந்ததும் சினிமாவில் நடிக்கணும்ங்கிற கனவோட மும்பை வந்தேன். 2009-ல ‘ஜங்க்ஷன்’ங்கிற இந்திப் படத்துல கமிட்டானேன். ஆனா, அந்தப் படம் பாதியிலேயே நின்னுருச்சு. அதுக்கப்புறம் ‘இந்துஸ்தான் யுனிலீவர்’ கம்பெனியோட ரெண்டு வருஷ மாடலா இருக்குறதுக்கு ஒப்பந்தம் ஆனேன். அது முடிந்ததும் ‘சாம்சங்’, ‘மாரி கோல்ட்’ போன்ற விளம்பரங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன்.”

“உங்களை முதன்முதல்ல சினிமாவுக்குக் கொண்டுவந்த அனுராக் காஷ்யப்போட இன்னமும் நட்புறவோட இருக்கீங்களா?”

“2012-ல அனுராக் காஷ்யப் இயக்கத்தில ‘கேங்ஸ் ஆஃப் வாஸிபூர்’ படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. இந்தப் படம் வெளிவரும் வரைக்கும் இவர் எந்த மாதிரியான இயக்குநர்னு என்னால புரிஞ்சுக்கவே முடியலை. இவரோட ஒவ்வொரு கதைக்குப் பின்னாடியும் ஒவ்வொரு ஆராய்ச்சி இருக்கும்.

‘கேங்ஸ் ஆஃப் வாஸிபூர்’ படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவுல திரையிட்டாங்க. கூடவே நிறைய இந்திய சினிமா விருதுகளையும் அந்தப் படம் வாங்குச்சு. எனக்கும் ஃபிலிம் ஃபேரின் ‘சிறந்த புதுமுக நடிகை’ விருது கிடைச்சுச்சு. தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரைக்கும் என்னோட முதல் படம் ‘வொயிட்’. இந்த மலையாளப் படத்தில் மம்மூட்டி சாரோட சேர்ந்து நடிச்சேன். ‘வைசிராய்ஸ் ஹவுஸ்’ங்கிற ஆங்கிலப் படத்திலும் நடிச்சிருக்கேன்.”

“எப்போதாவது உடல் பருமனால சினிமா வாய்ப்புகள் தள்ளிப் போயிருக்கா?”

“உடல் பருமனைப் பற்றி நிறைய கமென்ட்ஸ் எனக்கு வந்திருக்கு. முதல்ல அதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணிக்கிட்டிருந்தேன். ஆனா, இப்போ அதெல்லாம் வேலைக்கே ஆகாதுனு முடிவு பண்ணிட்டேன். நம் வேலைகள்தான் நம்மைப் பத்திப் பேச வைக்கும். மாடலிங் & சினிமா துறையைப் பொறுத்தவரை எல்லா விதமான ஆட்களும் நடிக்கிறதுக்குத் தேவை. எல்லாருமே ஒல்லியா, சிவப்பா இருக்கணும்னு அவசியமில்லையே!”

“பாலிவுட்டைவிட தமிழ் சினிமா பெஸ்ட்!”

“தென்னிந்தியப் படங்கள்ல நடிக்கிறதுக்கு மொழி ஒரு தடையா இருந்திருக்கா?”

“மொழி என்னைக்குமே நடிப்புக்குத் தடையா இருந்ததில்லை. இரஞ்சித் சாரும், ரஜினி சாரும் சேர்ந்து எனக்குத் தமிழ் கத்துக்கொடுத்தாங்க. மம்மூட்டி சாருடன் வேலை பார்க்கும்போது, அவர்  எனக்கு மலையாளம் கத்துக்கொடுத்தார். நிறைய மொழிகளைக் கத்துக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்பதான் சரிவர உணர்ச்சிகளைத் திரையில் வெளிப்படுத்த முடியும்.”

“கோலிவுட்டில் உங்களைக் கவர்ந்த நடிகை யார்?”

“தமிழ் நடிகைகள் எல்லாருமே திறமையானவங்கதான். அதாவது பாலிவுட்ல ஒரு நடிகைன்னா தோல் நிறத்துல ஆரம்பிச்சு உயரம் வரைக்கும் ‘இப்படித்தான் இருக்கணும்’னு நிறைய விதிமுறைகள் இருக்கு. ஆனா, தமிழ் சினிமா அப்படி இல்லை.  ரியல் கதாபாத்திரங்களைத் திரையில காட்டணும்னு  நெனைக்கிறாங்க. அதனாலதான் வர்த்தக நோக்கத்தையும் தாண்டி, தென்னிந்திய சினிமா ஒரு படி மேல இருக்கு.

அந்த வகையில் நயன்தாரா ரொம்பப் பிடிக்கும். ‘அறம்’ படத்துக்குப் பிறகு சீரியஸான கதாபாத்திரங்கள்லதான் அவங்க நடிப்பாங்கனு நாம நினைச்சுட்டிருந்தோம். ஆனா, திடீர்னு ‘கல்யாண வயசு’ப் பாட்டுல ஜாலியா நடிச்சிருந்தாங்க. மைல்ஸ் டு கோ நயன்!”

பூங்கொத்துகளைப் புன்னகையால் தெறிக்கவிடுகிறார்.