சினிமா
Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் கவர்ச்சிப் புயலாய் நடித்த வித்யா பாலனுக்கு மிகவும் பிடித்த உடை என்னவோ, காஞ்சிபுரம் பட்டுச்சேலைதானாம். ஆடைகள் வாங்கக் கடைகளுக்குச் சென்றாலே மூட்டை நிறைய புடவையைத்தான் வாங்குவாராம்.

சேலை கட்டும் பெண்ணுக்கொரு....

பிட்ஸ் பிரேக்

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் `தடக்’ எனும் படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி ஆகவுள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜான்வியின் காஸ்ட்யூம், எளிமையான பச்சைவண்ண சல்வார் கமீஸ். தன் தாயின் ஃபேவரிட் டிசைனரான மனிஷ் மல்ஹோத்ரா கைவண்ணத்தில் உருவான இந்த உடைக்கு மேட்சாக, ஜிமிக்கியும் கையில் மோதிரங்களும் மட்டுமே அணிந்திருந்தார். சிம்பிள்!

பிட்ஸ் பிரேக்

`நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்திரியாக வாழ்ந்த கீர்த்தி சுரேஷின் ஆடைகளை வடிவமைக்க சுமார் ஒரு வருடம் ஆனதாம். மொத்தம் 110 ஆடைகளை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் கவுரங் ஷா, 200 உள்ளூர் கைவினைஞர்களைக்கொண்டு முற்றிலும் கைத்தறியால் உருவாக்கினார்.

பிட்ஸ் பிரேக்

ரீனா கபூர், சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் இணைந்து நடித்துள்ள `வீரே டி வெட்டிங்’ திரைப்படத்தில் வரும் அனைத்து ஆடைகளும் புது ரகம். 2001-ம் ஆண்டு வெளிவந்த `தேவதாஸ்’ படத்தில் ஆடை வடிவமைப்புக்காக தேசிய விருது தட்டிச்சென்ற ரியா கபூர், சந்தீப் கோஸ்லா கைவண்ணத்தில் உருவான இந்த ஆடைகள்தான், இப்போது `டாக் ஆஃப் தி பாலிவுட்’. நிச்சயம் இது வித்தியாசத்தை விரும்பும் மணப்பெண்ணுக்கானது!

பிட்ஸ் பிரேக்

குறுகிய தோள்பட்டை, அகன்ற இடை கொண்டிருப்பவர்கள் `பியர்’ (Pear) உடலமைப்புக்கொண்டிருப்பவர்கள். இவர்கள், உடலை ஒட்டியிருக்கும் உடைகளைத் தவிர்ப்பது நல்லது. கழுத்துப் பகுதியில் அதிக வேலைப்பாடுகள் நிறைந்த உடைகள் இவர்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். சிம்பிளா சொல்லணும்னா, இலியானாவோட ஸ்டைலைப் பின்பற்றினாலே ஸ்டைலிஷ் லுக் நிச்சயம்!

தொகுப்பு: கானப்ரியா