
சைபர் ஸ்பைடர்
www.facebook.com/karthikeyan.maddy
எடப்பாடி அங்கிள் நீங்க என்ன பண்றீங்க, சென்னையில ஒரு நாள் 144 போட்டுட்டு ஒரு டூ வீலரை எடுத்துக்கங்க. நூல் புடிச்சாமாதிரி... நேரா ஓட்டணும். போற வழியில குண்டுகுழி இருக்குன்னு ஹேண்ட்பாரைத் திருப்பாம போகணும். அப்படிமட்டும் சென்னையை ஒரு ரவுண்டு சுத்திட்டு வந்துருங்க. பாப்போம். இதுல 82வழி ரோடு போடுறாங்களாமாம்...!
twitter.com/sendil__
செய்தி: மக்களின் உடல்நலன் கருதி தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்குத் தடை - அமைச்சர் விஜயபாஸ்கர்.
சாதா சிகரெட் உடல்நலனுக்கு நல்லது போல, இத்தன நாளா இது தெரியாமப்போச்சே!

twitter.com/BlackLightOfl
இளைஞர்கள் இருக்கும் வீட்டில் ‘நைட் வாட்ச்மேன்’கள் தேவையில்லாத ஆணிதான்.எவனும் தூங்க மாட்டேங்குறான். நைட் ஃபுல்லா மொபைல்தான்!
twitter.com/manipmp
ஒருமைக்கண் ஒரு சிக்னலில் மாட்டினால், அவன் தொடர் ஏழு சிக்னலிலும் சிக்குவான்! #டிசைன்
twitter.com/mohanramko
மாதக்கடைசியில் ‘பிட்னஸ் சேலஞ்ச்’க்கு சவால் விடுகின்றன மணிபர்ஸ்கள்.
twitter.com/Thaadikkaran
தேவைப்படும், தேவைப்படும்னு எல்லாத்தையும் எடுத்து வச்சு, கடைசில பார்த்தா எல்லாம் குப்பையாதான் தெரியுது..!
twitter.com/BlackLightOfl
8 வழிச் சாலையை எதிர்ப்பவர்கள் துரோகிகள் #பொன்னார். நாட்டில் இப்போதைய கணக்கெடுப்பு இப்படி இருக்கிறது #ஆன்டி_இந்தியன்ஸ் #சமூக_விரோதிகள் #நக்சலைட்_கும்பல் #துரோகிகள் மட்டும்தான். மக்களே இல்லை போல!
twitter.com/Kozhiyaar
சாக்லெட், ஐஸ்கிரீமுக்கான முத்தத்தில் அழுத்தம் சிறிது அதிகமாக இருக்கும் என்று அப்பாக்களுக்கு நன்கு தெரியும்!
twitter.com/meenammakayal
மூன்றாவது நபரைப் பற்றிப் பேசிக்கொள்ளாமல் எவ்வளவு நேரம் உங்களால் பேச முடிகிறதோ அதுவே உரையாடல்... மிச்சதெல்லாம் நேரவிரயம்.
twitter.com/Raittuvidu
நைட் வீட்ல நுழையுறப்ப “என்னடா இன்னுமா நீ தூங்கல?”ன்னு உயரதிர்வுல ஒரு கர்ஜனை கொடுத்துக்கிட்டே நுழைவார் அப்பா. விவரம் தெரியுறவரை நம்ம மேல இவ்ளோ பாசமான்னு நெனைச்சுதான் புளகாங்கிதமடைஞ்சேன்! யோவ் டேடி!

www.facebook.com/bharathiarockiaraj
டெல்லியில் அறிவிக்கப்படாத குடியரசுத் தலைவர் ஆட்சி.- டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு.
சும்மா போவீங்களா! அறிவிக்கப்படாத ‘துணை வட்டாட்சியர்’ ஆட்சி நடைபெறும் தமிழகமே சும்மா இருக்கும்போது உங்களுக்கு மட்டும் என்ன?
www.facebook.com/karthekarna
பிக்பாஸ் வீட்ல இருக்கிற வாட்டர்கேன் நல்லாருக்கில்ல, பாப்பாக்கு அப்டி ஒண்ணு வாங்குங்க.
#வீட்ல
www.facebook.com/Sriramsathiyamoorthy2690
இது வாசல், கோலம் போடலாம்.
இது கிச்சன், சமைக்கலாம்...
அப்பறம் ஆண்டவரே... இது ஸ்மோக்கிங் ரூம் #மருத்துவ_முத்தம் கொடுக்கலாம் அதானே?!
www.facebook.com/subbusamayan
இங்கே எல்லோரும் ஒரே மாதிரி யோசிக்குற விஷயம் என்ன தெரியுமா..? `நம்மளத் தவிர இங்கே எல்லோரும் சந்தோஷமா இருக்கானுங்க’ என்பதுதான்.
www.facebook.com/hari.lifeisfun
காலைல பார்க்ல வாக்கிங் போகும் போது பார்ப்பேன், சில பேர் கையை மேல தூக்கி ஆட்டிக்கிட்டே ஓடறது, போர் விமானம் மாதிரி இரண்டு சைடுலயும் கையை திடீர்னு நீட்றது, பின்னாலயே நடக்கிறது, சைடு வாங்கினாப்ல நடக்கிறது, stretches பண்றேனு நீபா வைரஸ் வவ்வாலாட்டம் கம்பியில தொங்கறது.. Hand wheel பிடிச்சு அஜித் லாரியோட்ற மாதிரி விசுக் விசுக்குனு திருப்பிட்டு கெத்து பார்வை பார்க்கிறது,யோகா பண்றேனு எசகுபிசகா வேட்டிய கிழிச்சுக்கிறது, அறுகம்புல் ஜூஸ் விக்கிறவர்கிட்ட, ஆன்டி ஆக்ஸிடன்ஸ்னா என்னன்னு தெரியாதானு பீலா வுட்டு அஞ்சு ரூபா குறைச்சுக் கேக்கிறதுனு, சில ஃபிட்னஸ் பைத்தியங்கள் அலப்பறை சொல்லி மாளாது.. ஆனா சொல்லி வெச்ச மாதிரி இப்பெல்லாம் அத்தனை பேரும் அமைதியா வாக்கிங் போறான். ஒரு துளி அலப்பறை இல்லை...
எல்லாம் தலைவன் செய்த மாயம்.

www.facebook.com/RedManoRed
எத்தன கி.மீ தூரம்?
கி.மீ கணக்கெல்லாம் தெரியாது. ராஜா சார் பாட்டு நாலஞ்சு ஓடணும்.
www.facebook.com/iam.suriyaraj
ஃபுட்பால் வேர்ல்டு கப் பத்திப் பேச ஆரம்பிச்சதும் மெஸ்ஸி, ரொனால்டோனு மேட்ச் பண்ணிட்டு இருந்தேன்... கடைசியா, ‘இந்த வேர்ல்டு கப் நிச்சயம் பார்சிலோனாவுக்குத் தான்’னு உளறப்போய் ரொம்ப அசிங்கமாகிடுச்சு குமாரு...
www.facebook.com/srini dhoni
அம்மா: யாருடா இந்த யாஷிகா ஆனந்த், எந்தப் படத்துல நடிச்சிருக்கா?
அண்ணன்: சொல்லுடா, நீதான் தெகிரியமான ஆளாச்சே, சொல்லு.
www.facebook.com /Vijaya Lakshmi
சேகர் சார் நடிச்ச படங்கள் ஐம்பது நாள் ஓடிய காலம் போய், இப்போ அவரே ஐம்பதாவது நாளா ஓடிட்டிருக்கார்...
www.facebook.com/Santhosh Narayanan
டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறிடிச்சு. ஆனால் இன்னும் புக்குக்கு அட்டை போடச்சொல்கிற இந்தப் பாசிசக் கல்வி அமைப்பை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
www.facebook.com/ Sathya Subramani
இளையராஜா இல்லாட்டி fm-ல வேலை இல்ல. வடிவேலு இல்லாட்டி ஃபேஸ்புக்ல வேலை இல்ல.
www.facebook.com/ டி.வி.எஸ். சோமு
பலவிதமாக பிரபாகரன் துப்பாக்கி சுட தனக்குக் கற்றுத்தந்ததாக சீமான் கூறுகிறார். அப்படியே இருக்கட்டும்.யாரைச் சுடுவதற்காகக் கற்றுக் கொடுத்திருப்பார்? அவர்களில் யார் யாரை இதுவரை சீமான் சுட்டிருக்கிறார்?

www.facebook.com/ஜெ.வி. பிரவீன்குமார்
பேருந்தில் இளையராஜா பாடல்கள். பேருந்துக்குள் உள்ள அத்தனை பெண்களும் அழகாகத் தெரிகிறார்கள்.
www.facebook.com/Aadhavan Dheetchanya
முதலில் தோசைக்கல்லைச் சூடேற்ற வேண்டும். பிறகு தேவையான சைஸ் கப்பலை அதன்மீது கவிழ்த்து வேகவிட வேண்டும். சுட்ட கப்பல் ரெடி.
www.facebook.com/ரஹீம் கஸாலி
பிரியாணியில போடும் பத்து கிராம் ஏலக்காய்ல நாலு ஏலக்காய்கூட நமக்கு வந்திடுது. ஆனால், ஒரு கிலோ மட்டன் போட்டாலும் ஒரு பீஸ் கண்ணுல சிக்க மாட்டேங்குது.
www.facebook.com/Vediyappan M Munusamy
நான் : நாலுமுறை பெல்லடிச்சாதான் கதவைத் திறப்பீங்களா மேடம்?
இலக்கியா (தம்பியோட பொண்ணு ) : ஹோம் ஒர்க் பண்ணுனோம் பெரிப்பா, கையெல்லாம் வலி. அதான் வடை சாப்பிட்டிட்டிருந்தோம்.
-கேள்விக்கும் பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா பாருங்க.
www.facebook.com/மேகவண்ணன் புதியதடம்
கமல் இல்லாமல் நடத்தினால்கூட ஓவியா இல்லாமல் பிக்பாஸ் நடத்த முடியாதுபோல!
www.facebook.com/மணி அமுதன் மா.பா
வாழ்க்கைல ஒரு சரினா இருந்தா பரவால்லை...வாழ்க்கை பூரா சரினாவாவே இருந்தா எத்தன டேட்டு போட்றது நான்லாம்!