சினிமா
Published:Updated:

“மார்க்கெட்டைக் காப்பாத்த கிளாமர் காட்டும் அவசியம் இல்லை!”

“மார்க்கெட்டைக் காப்பாத்த கிளாமர் காட்டும் அவசியம் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“மார்க்கெட்டைக் காப்பாத்த கிளாமர் காட்டும் அவசியம் இல்லை!”

சுஜிதா சென்

காற்று வெளியிடை’ படத்துக்கு அடுத்து, அதே மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அதிதி ராவைச் சந்தித்தேன்.

“சின்ன வயசுல மணிரத்னம் படங்களைப் பார்க்கும்போது அவர் படங்கள்ல நடிக்கணும்ங்கிறது என்னோட கனவா இருந்துச்சு. ‘பாம்பே’ படத்துல ‘கண்ணாளனே’ பாட்டைப் பார்க்கும்போது, இந்த ஸ்க்ரீன்ல குதிச்சு நான் ஹீரோயினா மாறிட்டா எப்படி இருக்கும்னு கனவு காண ஆரம்பிச்சேன். வாழ்க்கையில நிறைய மேஜிக் நடக்கணும்னு ஆசைப்படும் கேரக்டர் நான்.

அப்படி நடந்ததுதான் ‘காற்று வெளியிடை’ படம். இதுல நடிக்கும்போது மணி சார்தான் எனக்குத் தமிழ் கத்துக்கொடுத்தார். அவர் படங்கள்ல வேலை பார்த்த நிறைய நடிகர்கள் அவருடன் பேசுறதுக்கே நேரமில்லாம இருந்திருக்காங்க. அந்த வகையில் நான் ரொம்ப லக்கி.

“மார்க்கெட்டைக் காப்பாத்த கிளாமர் காட்டும் அவசியம் இல்லை!”

‘இப்படித்தான் நடிக்கணும்’னு யாரையும் அவர் வற்புறுத்தமாட்டார். மணி சார் படங்கள்ல நடிக்கும்போது நம்ம இயல்புல இருந்து மாறாம இருந்தாலே போதும். நான் எப்பவுமே இயக்குநரோட பேச்சைக் கேட்டு அதை அப்படியே திரையில் பிரதிபலிக்கணும்னு நெனைக்கிற நடிகை. ஆனா, மணி சார் மூலமாதான் நடிப்பு எவ்வளவு இயல்பானதுனு புரிஞ்சுக்கிட்டேன்.

‘செக்கச் சிவந்த வானம்’ படத்துல ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இருக்கு. நாங்க எல்லாருமே ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரே குடும்பம் மாதிரி உணர ஆரம்பிச்சோம். பெர்சனலைத் தாண்டி சினிமா பத்திப் பேசவே அவ்வளவு விஷயங்கள் இருந்துச்சு. தென்னிந்திய சினிமா பற்றி அதிகம் தெரிஞ்சுக்கிட்டது ‘செக்கச் சிவந்த வானம்’ செட்லதான்.”

“சமீப காலமா சினிமா சான்ஸ் கிடைக்கணும்ங்கிறதுக்காக நீங்க டாப்லெஸ் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்க என்ற பேச்சு அடிபட்டுச்சே?”

“என்னோட காஸ்ட்யூம்களை நான்தான் செலக்ட் பண்ணுவேன். அளவுக்கதிகமான கிளாமர் எனக்குப் பொருந்தாது. காஸ்ட்யூம்களை வெச்சு மதிப்பிடுற பழக்கம் இன்னும் நம்மகிட்ட இருக்கு. என் குடும்பம், நண்பர்கள் எல்லாரையும் மனசுல வெச்சுதான் காஸ்ட்யூம்களை செலக்ட் பண்ணுவேன். அதனால் கதைக்கு ஏத்த மாதிரியான உடைகளை அணியணும்னுதான் ஆசைப்படுவேன். இந்த ஆண்டு தெலுங்குப் படத்துல அறிமுகமாகி யிருக்கேன். பாலிவுட் மற்றும் கோலிவுட்ல ரெண்டு படங்கள் பண்ணிக்கிட்டிருக்கேன். எனக்கு ஒரே நேரத்துல நிறைய படங்கள்ல நடிச்சுப் பழக்கம் இல்லை. சினிமாவுல என்னோட பயணம் நிதானமாதான் இருக்கும். இன்னும் நிறைய சாதிக்க வேண்டியது இருக்குதான். அதுக்காக மார்க்கெட்டையே இழந்துட்டேன்னும், கவர்ச்சிப் படங்கள் போடறேன்னும் சொல்ல முடியாது.”

“மார்க்கெட்டைக் காப்பாத்த கிளாமர் காட்டும் அவசியம் இல்லை!”

“திருமண வாழ்க்கை மற்றும் குடும்பம் பற்றி...”

“என் வீட்டில் சினிமாத் துறையைச் சார்ந்த நபர்கள் இல்லை. உண்மையில், என் குடும்பத்தில உள்ளவங்க படம்கூடப் பார்க்க மாட்டாங்க.  பிறந்து வளர்ந்தது ஹைதராபாத். டெல்லியில காலேஜ் படிச்சேன். அப்பா எஹ்சான் ஹைதரி முஸ்லிம். அம்மா வித்யா ராவ், இந்து. எனக்கு ரெண்டு வயசு இருக்கும்போதே ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க. அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஆனா, குழந்தைகள் இல்லை. அம்மா கல்யாணம் செஞ்சுக்கலை. ஹைதரி, அப்பாவோட குடும்பப் பெயர், ராவ் அம்மாவோட குடும்பப் பெயர். ரெண்டையும் நான் என் பெயர் பின்னாடி சேர்த்துக்கிட்டேன்.

ரொம்ப சீக்கிரமே கல்யாணம் பண்ணிக் கிட்டேன். அந்தத் திருமண வாழ்க்கையும் முறிஞ்சுபோச்சு. திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கையில் நிறைய பாடங்களைக் கத்துக் கிட்டேன். இன்னொரு கல்யாணம்  பண்ணிக்கணும்னு தோணலை.”

“2007-லயே ‘சிருங்காரம்’ங்கிற தமிழ்ப் படத்துல நடிச்சிருக்கீங்க. அதுக்கப்புறம் பத்து வருஷம் கழிச்சு ‘காற்று வெளியிடை’ படத்துல நடிச்சிருக்கீங்க. ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?”

“பரத நாட்டியத்தை அஞ்சு வயசுல கத்துக்க ஆரம்பிச்சேன். கலைதான் எனக்கு எல்லாமே. அதைத் தவிர்த்து வேறெதுவும் எனக்குத் தெரியாது. நடிகையாகணும்ங்கிற கனவு சின்ன வயசிலிருந்தே இருந்துச்சு. டெல்லியில் படிப்பு முடிஞ்சதும் மும்பைக்கு வந்துட்டேன். சினிமா வாய்ப்புகளுக்கான முயற்சிகள் எடுத்தேன். கடைசியா ‘பிரஜாபதி’ங்கிற மலையாளப் படத்துல அறிமுகமானேன். என்னோட ரெண்டாவது படம் ‘சிருங்காரம்’. இது தியேட்டர்ல வெளியாகலை. இந்தப் படத்தோட இயக்குநர் சாரதா ராமநாதன் பரத நாட்டியம் தெரிந்த ஒருத்தரைத் தேடிக்கிட்டிருந்தார். அப்போ நான் காலேஜ் படிச்சுக்கிட்டிருந்தேன். இந்தப் படம் பல விருது வழங்கும் விழாக்களில் நாமினேட் ஆகியிருந்துச்சு. தியேட்டரில் ரிலீஸ் ஆகலைனாலும் நல்ல படத்துல நடிச்ச திருப்தி கிடைச்சது.”

“கல்யாணத்துல ஏற்பட்ட விரிசல், உங்கள் கரியருக்கு பாதிப்பா இருந்துச்சா?”

“நடிப்பு ஒரு தொழில். அதை பர்சனல் வாழ்க்கையோட தொடர்புபடுத்திப் பேச வேண்டிய அவசியம் இல்லை. ‘கல்யாணத்துக்குப் பிறகும் நடிக்கிறது தப்பில்லையா’னு ஒரு ஹீரோவைப் பார்த்து யாரும் கேட்குறதில்லை.  ஆனால் பெண்களிடம் இந்தக் கேள்வி கேட்கப்படுது. ஆண்களையும் பெண்களையும் பிரிச்சுப் பார்க்குற மைண்ட்-செட் நிச்சயம் மாறணும்!