தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - சிரிச்சா போச்சு!

கலைடாஸ்கோப் - சிரிச்சா போச்சு!
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - சிரிச்சா போச்சு!

ப.தினேஷ்குமார்

பிடித்த நகைச்சுவை நடிகர்

ஈஸ்வரி ராவ், நடிகை

பார்த்தாலே சிரிப்பு வருமே... சார்லி சாப்ளின்தான் எனக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர். சாப்ளினின் அத்தனை படங்களையும் பார்த்துப் பார்த்துச் சிரிப்பது என் வழக்கம். தூர்தர்ஷன் காலத்திலிருந்து இப்போது வரை திரையில் சாப்ளினை பார்த்தாலே போதும்... நான் ரிலாக்ஸ் ஆகிவிடுவேன்.

கலைடாஸ்கோப் - சிரிச்சா போச்சு!

அவருடைய நிஜ வாழ்க்கை நிறைய துயரங்களோடு இருந்தது. அவருடைய சினிமா வாழ்க்கையோ வேறுவிதமாக இருந்தது. அவருக்குள்ளே இருந்த துயரங்களையெல்லாம் மீறி, சினிமா மூலமாக அவர் மக்களைச் சிரிக்கவைத்த அந்தப் பண்பு எனக்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிடித்த நகைச்சுவை உணர்வு கொண்ட நபர்

காயத்ரி, திரைப்பட இயக்குநர்

கலைடாஸ்கோப் - சிரிச்சா போச்சு!

யக்குநர் தரணி சீனியர் டைரக்டர் என்பதால், நானும் புஷ்கரும் அவரிடம் ரொம்ப மரியாதையா நடந்துக்குவோம். அவர் முன்னாடி சீரியஸா இருப்போம். ஆனால், பழகப் பழகத்தான் தெரிஞ்சது அவர் செம ஜாலி டைப்னு. எங்கே போனாலும், அந்தச் சூழலுக்குத் தகுந்த மாதிரி  டைமிங் ஜோக் அடிச்சுக்கிட்டே இருப்பாரு. நாம வெளியில் இருந்து பார்க்கும்போது ஒருவரைப்பற்றி ஒருமாதிரி நினைச்சுட்டு இருப்போம். பழகும்போதோ அவங்க வேற மாதிரி இருப்பாங்க. அப்படித்தான் தரணி சாரின் வெளித் தோற்றத்துக்கும் அவருடைய சீனியாரிட்டிக்கும் சம்பந்தமே இல்லாதபடி, அவர் சொல்கிற ஜோக்ஸ் மிகவும் ரசிக்கும்படியா இருக்கும்.

பிடித்த நகைச்சுவை நடவடிக்கை நபர்

ரம்யா, நிகழ்ச்சித் தொகுப்பாளினி

கலைடாஸ்கோப் - சிரிச்சா போச்சு!

ன் நண்பர் ஒருத்தர்கிட்ட சில விநோதமான பழக்கங்கள் இருக்கு. பொதுவா நாம காபி குடிக்கும்போது மட்டும்தானே ‘ஊதி’க் குடிப்போம். அவரு தண்ணீர், மோர், ஜூஸ்னு எது கொடுத்தாலுமே ‘ஊதி’தான் குடிப்பாரு. அப்புறம், அவருடைய உடலில் நாம எங்கே தொட்டாலும் சரி, அதைச் சமமாக்கும் வகையில் அவரே இன்னொரு பக்கம் தொட்டுக்குவார். அவருடைய வலது கையை நான் தொட்டேன்னா, தனது இடது கையில் அதே இடத்துல தொட்டுக்குவார். அப்படி தொடலைன்னா ஏதோ புழு, பூச்சி கடிக்கிற மாதிரி அவருக்கு உறுத்திக்கிட்டே இருக்குமாம். இந்த மாதிரி நகைச்சுவையான நடவடிக்கைகளெல்லாம் சின்ன வயசுல இருந்தே அவருக்கு இருக்காம். அவர் எதைச் செய்தாலும் செம காமெடியா இருக்கும்.

மறக்க முடியாத நோஸ்கட் வாங்கிய நகைச்சுவை

மதுமிதா, நகைச்சுவை நடிகை

மீபத்தில் விஜய் டி.வி-யில் ‘அழகோவியம்’னு ஒரு நிகழ்ச்சி பண்ணேன். அந்த ஷோ போயிட்டு இருக்கும்போது நான் ‘ரெஃப்ளெக்ஸாலஜி’ என்கிற வார்த்தையை உச்சரிக்கிற சூழல் வந்தது. எனக்கு அதைச் சரியா சொல்ல வரலை. எல்லாரும் என்னைப் பார்த்து சிரிக்கிறாங்க. எனக்கு செம இன்சல்ட்டா போச்சு. பயங்கரமா சிரிச்சு முடிச்சுட்டு, `அந்த வார்த்தை வரலைன்னா விட்டுடுங்க’ன்னு சொல்றாங்க. அதெப்படிங்க விடமுடியும்? அவங்க சிரிக்கச் சிரிக்க, எனக்குப் புது நம்பிக்கை வந்துச்சு.

கலைடாஸ்கோப் - சிரிச்சா போச்சு!

அன்னிக்கு நைட் நான் தூங்கவே இல்லை. நூறு தடவைக்கும் மேலே சொல்லிட்டே இருந்தேன். இப்போ நான் அந்த வார்த்தையை நல்லா உச்சரிக்கிறேன். இது நோஸ்கட்னுகூட சொல்ல முடியாது. அவங்க சிரிச்சதாலதான் அந்த வார்த்தையை இப்போ நான் தெளிவாக உச்சரிக்கிறேன்!

பிடித்த திரைப்பட நகைச்சுவைக் காட்சி

பனிமலர் பன்னீர்செல்வம், செய்தி வாசிப்பாளர்

னக்கு ‘வின்னர்’ பட காமெடி சீன்ஸ் ரொம்பப் பிடிக்கும். ரிலீஸான சில நாள்களிலேயே படத்தைப் பார்த்துட்டேன். இன்னிக்கு வரைக்கும் எத்தனை முறை பார்த்தேன்னு எனக்கே தெரியாது. குறிப்பா, வடிவேலு சார் ‘கைப்புள்ளை’யா பண்ற காமெடியெல்லாம் பக்கா ரணகளம் பாஸ்.

கலைடாஸ்கோப் - சிரிச்சா போச்சு!

எந்த சீனை எடுத்துக்கிட்டாலும் அல்டிமேட்டா இருக்கும். வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் அந்தப் படத்தின் காமெடியைப் பொருத்திப் பார்த்துக்கலாம். அதற்கப்புறம் எத்தனையோ வந்தாலும், இன்னிக்கும்  ‘கைப்புள்ள’ காமெடிதான் எனக்கு ஆல்டைம் ஃபேவரைட். Vadivelu For Life, பாஸ்!

பிடித்த நகைச்சுவைத் திரைப்படம்

பத்மலதா, பின்னணிப் பாடகி

கலைடாஸ்கோப் - சிரிச்சா போச்சு!

னக்குப் பொழுது போகலைன்னா உடனே நகைச்சுவைத் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பிச்சுடுவேன். பால்கி சார் டைரக்‌ஷன்ல வந்த ‘கி & கா’ படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கதைப்படி அர்ஜுன் கபூர் வீட்டைக் கவனிப்பாரு; கரினா கபூர் வேலைக்குப் போவாங்க. அவங்களுக்குள் நடக்கும் காதலையும் சண்டைகளையும் ரொம்ப வித்தியாசமா எடுத்திருப்பாங்க. காமெடிக்குத் தனி டிராக் இல்லாமல் படத்தோடு கூடிய காமெடியா இருக்கும். நான் ரொம்ப சிரிச்சுக்கிட்டே ரசிச்சு பார்த்த படம் ‘கி & கா’. தமிழில், கமல் சாருடைய காமெடி படங்களும் ரொம்பப் பிடிக்கும்.