மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் பிரஸ்மீட்: “எங்கப்பா மாதிரி இருக்கக்கூடாதுன்னு நெனச்சேன்!” - சிம்பு

விகடன் பிரஸ்மீட்: “எங்கப்பா மாதிரி இருக்கக்கூடாதுன்னு நெனச்சேன்!” - சிம்பு
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் பிரஸ்மீட்: “எங்கப்பா மாதிரி இருக்கக்கூடாதுன்னு நெனச்சேன்!” - சிம்பு

விகடன் பிரஸ்மீட்: “எங்கப்பா மாதிரி இருக்கக்கூடாதுன்னு நெனச்சேன்!” - சிம்பு

“கமல் ரஜினியோட அரசியல் என்ட்ரி பற்றி உங்க கருத்து என்ன..? யாரோட அரசியல் கருத்துகள் உங்க ஐடியாலஜியோட பொருந்திப்போகுது?”  

- பரிசல் கிருஷ்ணா

விகடன் பிரஸ்மீட்: “எங்கப்பா மாதிரி இருக்கக்கூடாதுன்னு நெனச்சேன்!” - சிம்பு

“என்னோட ஐடியாலஜி யாரோடும் பொருந்திப்போகாது. அப்படித்தான் நான் நினைக்கிறேன். ஒவ்வொருத்தவங்க ஐடியாவும் வேற வேற மாதிரி இருக்கும். எனக்கு அரசியல் குறித்த கருத்துகள் இல்லை; சமூகத்தைக் குறித்துதான் சில கருத்துகள் இருக்கு. ரஜினி சார், கமல் சார் மற்றும் இப்போ இருக்குற மற்ற அரசியல்வாதிகள் யாரோடும் என்னோட ஐடியாலஜி பொருந்திப்போகாது. ஏன்னா, நான் இந்த சிஸ்டம் சரியில்லைனு சொல்ற ஆள் இல்லை, இந்த சிஸ்டமே தேவை இல்லைனு சொல்ற ஆள். ராஜா காலத்தில் என்ன இந்த சிஸ்டமா இருந்துச்சு. இந்த அரசியல் கட்சிகள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சினு சொல்லிக்கிற இந்த சிஸ்டம் இனி எடுபடாது.’’

“அரசியல் கட்சிகளே தேவையில்லை, தேர்தலே தேவையில்லைனு சொல்றீங்க. உங்க அப்பாவும் ஒரு அரசியல் கட்சி வெச்சிருக்கார். அவரிடம் இதைச் சொல்லியிருக்கீங்களா?”

- ரீ.சிவக்குமார்


“எல்லாரும் மக்களுக்கு நல்லது பண்ணணும்னுதான் அரசியலுக்கு வர்றாங்க. நல்லது பண்றதுக்கு அரசியல்தான் சரியான களம்னு நினைக்கிறார் என் அப்பா. ஆனால், அது சரியான களம் இல்லைனு நான் நினைக்கிறேன். அவரிடம் என்னோட கொள்கையைச் சொல்றதைவிட அதைச் செய்து காட்டினால் அவருக்கே புரியும்னு நினைக்கிறேன்.’’

“அப்பா ஹீரோயின்களைத் தொட்டு நடிக்காதவர். ஆனா அதுக்கு நேரெதிர் நீங்க. உங்களை ஹீரோவா அறிமுகப்படுத்தும்போது அப்பா சொன்ன அட்வைஸ் என்ன?”

- தமிழ்ப்பிரபா  

விகடன் பிரஸ்மீட்: “எங்கப்பா மாதிரி இருக்கக்கூடாதுன்னு நெனச்சேன்!” - சிம்பு

“அவர் எந்த அட்வைஸும் சொல்ல மாட்டார். அவரை மாதிரி நான் இருக்கக்கூடாதுனு முதலிலேயே முடிவு பண்ணிட்டேன். அவரோட திறமையை வைத்து நான் அந்த முடிவை எடுக்கலை; அவர் ஹீரோயினைத் தொடாமல் நடிச்சார்னா, அவர் மாதிரி நான் பண்ணக்கூடாதுனு நினைச்சேன்.’’

“ஸ்ஃபூப் பற்றி, தனிநபரை ட்ரோல் செய்வது பற்றி என்ன நினைக்கிறீங்க..? ‘தமிழ்ப்படம் 2’-ல் உங்களைக் கலாய்ச்சிருந்ததை எப்படி எடுத்துக்கிறீங்க..?”

 - ம.குணவதி


“உங்களை உங்க ஃப்ரெண்ட்ஸ் கலாய்ப்பாங்கதானே. அதை நாம சீரியஸா எடுக்கக்கூடாது. அப்படித்தான் இதைப் பார்க்கணும். ஆனால், வேணும்னே கேரக்டர் பற்றி, ஃபேமிலி பற்றி தப்பாப் பேசுறது இருக்கக்கூடாதுனு நினைக்கிறேன். மத்தபடி இந்த மாதிரி கலாய்க்கிறதை எல்லாம் சிரீயஸா எடுத்துக்க மாட்டேன். அவங்க கலாய்க்கிறனால பாதிப்பு வரும்னு பயப்படுறவங்களுக்குதான் கஷ்டமா இருக்கும். என்னைக்குமே அதை நான் பாதிப்பா நினைச்சது இல்லை; என்னைக் கலாய்க்கும்போது உடைஞ்சுபோனதில்லை. என் கேரக்டரைப் பற்றித் தப்பா, நான் பண்ணாத ஒரு விஷயத்தை பண்ணினதா சொல்லும்போதுதான் வருத்தமா இருக்கும்.’’

“அன்புமணியிடம் பேசினீங்களா? விவாதிக்கத் தயார்னு சொன்னப்போ அவருடைய தரப்பில் இருந்து எந்த மாதிரி ரியாக்‌ஷன் வந்துச்சு? ‘சர்கார்’ படத்தோட சர்ச்சை குறித்து உங்கள் கருத்து என்ன?”

- நா. சிபிச்சக்கரவர்த்தி


“அன்புமணி தரப்பில் இருந்து அசிங்கம் அசிங்கமா திட்டு வந்துச்சு. திட்டுனாங்க. ஆனா,  பேசினாதான் ரெண்டு பேரும் என்ன சொல்ல வர்றோம்கிறதே புரியும். சினிமாவை அதோட போக்கில் விட்டுருங்க என்பதுதான் என்னோட கருத்து.”

“நீங்க பேசிய வசனங்களிலேயே  உங்களுக்கு ரொம்பப் பிடித்தது?”
 
- சக்தி தமிழ்ச்செல்வன்


‘`ஃபர்ஸ்ட் யார் முன்னாடி வர்றாங்கங்கிறது முக்கியம் இல்லை. கடைசியில யார் ஃபர்ஸ்ட் வர்றாங்கங்கிறதுதான் முக்கியம்’’.

விகடன் பிரஸ்மீட்: “எங்கப்பா மாதிரி இருக்கக்கூடாதுன்னு நெனச்சேன்!” - சிம்பு

“சின்ன வயசுல நீங்க நடிக்க வந்துட்டதனால நீங்க ஒரு ‘SPOILED KID’ னு நினைக்குறேன். அதனாலதான் சின்ன வயசுலேயே ரொம்ப மெச்சூரிட்டியா பேசுறீங்களா?
 
- ஆர்.சரண்


“முதலில், சின்ன வயசுல மத்த பசங்க செஞ்ச காரியமெல்லாம் நான் எதுவுமே பண்ணலை, அனுபவிக்கலை என்ற வருத்தம், ஏக்கம் எனக்குள்ளே இருக்கு. ஏக்கம் இருந்தனாலதான் சின்ன வயசுலேயே மெச்சூரிட்டியா பேசுறேன். செயல்படுறேன். இதற்காக சந்தோஷப்படுறேன்.”

“ஒரு ரசிகரா ரஜினியைச் சந்திச்ச தருணங்கள், அப்போ அவர் பேசிய விஷயங்களைப் பற்றிச் சொல்லுங்க...”

 - கே.ஜி. மணிகண்டன்

``நான் ‘ஆஸ்ரம்’ ஸ்கூலில் படிக்கும் போது பாதி நேரம் அவர் வீட்டுலதான் இருப்பேன். அவருக்கு வரும் போன் கால்களை கனெக்ட் பண்றது; அவருக்கு சாப்பாடு பரிமாறுறதுனு நிறைய வேலைகள் பண்ணியிருக்கேன். அந்த வாய்ப்புகள் எனக்குக் கிடைச்சதை என் வாழ்க்கையில் எப்போதும் மறக்க மாட்டேன். ஏன்னா, நிறைய விஷயங்கள் அவரிடமிருந்து கத்துக்க முடிஞ்சது. அது இன்னைக்கு வரைக்கும் எனக்கு யூஸ் ஆகுது. அதுக்காக நான் இறைவனுக்கும் ரஜினி சாருக்கும் நன்றி சொல்லணும்.’’

“சிம்புவோட பலம் ரசிகர்கள்னு எல்லோருக்கும் தெரியும். சிம்புவின் பலவீனம் காதல் மற்றும் காதலிகளா, இல்லை, வேற எதை உங்களோட பலவீனமா நீங்க நினைக்கிறீங்க?”

“தமிழ்நாட்டுல தாமரை மலருமா, மலராதா?”

``பீப் பாட்டு பாடியது தப்புனு நீங்க உணர்ந்தது உண்டா?’’

(அடுத்த வாரம்)


படங்கள்: ஜெ.வேங்கடராஜ், க.பாலாஜி