Published:Updated:

ரஜினியின் ஜோடி த்ரிஷா!

ரஜினியின் ஜோடி த்ரிஷா!
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினியின் ஜோடி த்ரிஷா!

ரஜினியின் ஜோடி த்ரிஷா!

டார்ஜிலிங் பகுதியில் உள்ள ரேஞ்சர் கல்லூரியில் ரஜினி, பாபிசிம்ஹா, மேகா ஆகாஷ்,  நரேன் ஆகியோருடன் முதல்கட்டப் படப்பிடிப்பை நடத்தி  முடித்தார் கார்த்திக் சுப்புராஜ். இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு டேராடூனில் நடந்தது. அதில் ரஜினி, சிம்ரன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆகஸ்ட் 10 முதல் சென்னையில்தான் அடுத்த ஷெட்யூல் தொடங்கி நடந்துவருகிறது.

ரஜினியின் ஜோடி த்ரிஷா!

சென்னை  ரெட் ஹில்ஸ் அருகில் ஏ.ஆர்.ரஹ்மானுக்குச் சொந்தமாக 100 ஏக்கர் நிலம் இருக்கிறது. அங்கே பிரமாண்ட ஷூட்டிங் ஃப்ளோர் ஒன்றும் சிறிய தளம் ஒன்றும் இருக்கிறது. ரஜினி படத்துக்கான பிரமாண்ட செட் அங்கேதான் போடப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ஈவிபி ஸ்டுடியோவில் மதுரைப் பின்னணி கொண்ட  பிரமாண்ட செட் போடப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் முதல்வாரத்தில் இருந்து லக்னோவில் ரஜினி, பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி நடிக்கும் காட்சிகளைப் படமாக்குகிறார், கார்த்திக் சுப்புராஜ். இப்போது அச்சு அசல் லக்னோவை ஜெராக்ஸ் எடுத்ததைப் போன்ற ஒரு செட்டை சென்னை பின்னி மில்லில் அமைத்திருக்கிறார்கள். ரஜினியின் காதலியாக நடிக்கும் சிம்ரன் காட்சிகளை டார்ஜிலிங்  பகுதியிலும், டேராடூன் பகுதியிலும் படமாக்கி னார்கள். ரஜினியுடன் சிம்ரன் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் முழுக்கப் படமாக்கி விடப்பட்டுவிட்டதாம். இனிமேல் சிம்ரன்  நடிக்க மாட்டார். அவரது கால்ஷீட் தேதிகள் முடிவடைந்து விட்டன என்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் ரஜினிக்கு ஜோடியாக இன்னொரு முன்னணி ஹீரோயினான த்ரிஷா நடிக்கிறார் என்று தகவல் வந்துள்ளது. த்ரிஷா சினிமாவுக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய்சேதுபதி என்று அனைத்து ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து முடித்துவிட்டார் த்ரிஷா. ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது த்ரிஷாவின் நீண்டநாள் கனவு. இப்போது கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் இருக்கிறார் த்ரிஷா.

ரஜினியின் காதலியாக சிம்ரன் நடிக்கும் செய்தி ஏற்கெனவே கசிந்துவிட்டதால் த்ரிஷா நடிக்கும் விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகப் பாதுகாத்து வருகிறார்கள். இந்தப் படத்தில் ரஜினிக்கு மனைவி, குடும்பம் கிடையாது; இரண்டு காதலிகள் மட்டும்தானாம்.

எம்.குணா

அடுத்த இதழ் முதல் ஆனந்த விகடன் விலை ரூ 25 என உயர்த்துவதைத் தவிர்க்க இயலாமல் உள்ளது. என்றும் போல் வாசகர்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டுகிறோம்.