Published:Updated:

பியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்

பியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
பியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்

பியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்

‘ஜஸ்ட் ஃபார் லவ்’ பையனும், ‘ஜஸ்ட் ஃபார் ஃபன்’ பொண்ணும் காதலில் விழுந்தால் என்னவாகும்? அதுவே ‘பியார் பிரேமா காதல்’.

பியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்

காதல் - மோதலைச் சொல்லும் டெம்ப்ளேட் கதைதான். ஆனால், அதை ஃபிசிக்கல் அட்ராக்ஷனும் கெமிக்கல் ரியாக்ஷனும் கலந்த இன்றைய இணைய யுகத்துக் காதலாகத் தந்திருப்பதில் கவனிக்க வைக்கிறார் அறிமுக இயக்குநர் இளன். 

பியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்

ஸ்ரீகுமார் பாத்திரத்தில் மிடில் க்ளாஸ் பையனைக் கண்முன் கொண்டுவருகிறார் ஹரீஷ். காதலில் உருகித் தவிக்கும்போதும், பின்பு கல்யாணத்துக்காக  ரைஸாவிடம்  கெஞ்சும்போதும் க்ளாஸ் ப்ரோ!

ரைஸா... அட்டகாச அறிமுகம். மொத்தக் கதையும் இவரை மையப்படுத்தியே சுழல்வதை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் தடுமாறுபவர், பின்பு அனல் கிளப்புகிறார். அந்த மேக் அப்தான் கொஞ்சம்... ப்பா!

பசங்களுக்கு மொக்கை ஐடியா கொடுக்கும்  சீனியர் ரோலில் முனீஸ் காந்த், பட்டனுக்கேத்த காஜா. மாடர்ன் அப்பா ஆனந்த் பாபுவும், ஹரீஷின் பெற்றோர்களாக ரேகாவும், `ராஜா ராணி’ பாண்டியனும் கச்சிதம்.  ஹரீஷின் நண்பன் சதீஷாக வரும் தீப்ஸ் நல்ல தேர்வு.
  
படத்தின் இன்னொரு ஹீரோ யுவன். பாடல்களில் ஏற்கெனவே வசியப்படுத்தியவர் பின்னணி இசையில் கூடுதல் ஸ்வீட் சேர்த்து வசீகரிக்கிறார். ராஜா பட்டாச்சார்யாவின் `பிக்ஸல் பெர்ஃபெக்ட்’ ஒளிப்பதிவு, படத்தை எந்த ஃப்ரேமில் நிறுத்திப் பார்த்தாலும் க்ரீட்டிங் கார்டைப் பார்த்த உணர்வைத் தருகிறது. மணிக்குமரன் சங்கராவின் ‘நறுக்’ எடிட்டிங்கும், தியாகராஜனின் கலை இயக்கமும் படத்தை ரிச் லுக்கில் காட்ட உழைத்திருக்கின்றன.

பியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்

கொஞ்சம் பிசகினாலும் தடுமாறும் கதையை நேர்த்தியாகக் கையாண்டி ருக்கிறார் இயக்குநர்.  லிவ் இன் ரிலேஷன்ஷிப், பிரேக்-அப், லட்சியம், திருமணம் பற்றிய யூத்துகளின் பார்வையை, `பல்ஸ்’ பார்த்துப் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

ஆரம்பக் காட்சிகளின் ஸ்லோவை சரி செய்திருக்கலாம். அதேபோல, தன் மகளின் லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு அப்பாவே பால் காய்ச்சி `என்ஜாய்’ சொல்லி வாழ்த்துவதெல்லாம் டுட்டுடூமச்! 

மில்லேனியல்களின் காதல் க்யூட்டாக இருந்தாலும் மிரளவும் வைக்கிறது!

- விகடன் விமர்சனக் குழு