
விகடன் பிரஸ்மீட்: “பீப் சாங் தப்பில்லை!” - சிம்பு
“சிம்புவோட பலம் ரசிகர்கள்னு எல்லாருக்கும் தெரியும். உங்களோட பலவீனம் காதலா, காதலிகளா, இல்லை வேற எது உங்களோட பலவீனமா நீங்க நினைக்கிறீங்க..?”
- பரிசல் கிருஷ்ணா

“நான் எல்லா விஷயத்தையும் பாசிட்டிவ்வா எடுத்துக்கிறவன். எதையும் நெகட்டிவ்வா எடுத்துக்கிட்டது கிடையாது. எல்லாரும், ‘உங்களுக்கு நிறைய பிரச்னைகள் வருது, எப்படி அதையெல்லாம் சமாளிக்கிறீங்க?’னு கேட்பாங்க. எனக்கு மட்டும்தான் பிரச்னைகள் வருமா? எல்லாருக்கும் பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதைப் பிரச்னையா நீங்க எடுத்துட்டா மட்டும்தான் அதைச் சமாளிக்கணும்னு நினைக்கணும். நான் என்னைக்கும் பிரச்னைகளைப் பிரச்னைகளா எடுத்துக்க மாட்டேன். அப்போ அது எனக்குப் பிரச்னையாவே தெரியாது.’’
“உங்கள் வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலையில் உங்க அம்மாவோட ரோல் எப்படிப்பட்ட ஒண்ணா இருந்திருக்கு?”
- ஸ்ரீராம்
“எந்த இடத்திலும் என் அம்மா என்னை விட்டுக்கொடுத்தது இல்லை. பீப் சாங் பிரச்னை வந்தபோது எனக்கு ஆதரவா குரல் கொடுத்தாங்க. இந்த உலகமே நான் செஞ்சது தப்புனு சொன்னப்போ எனக்காக முன்னே நின்னாங்க. இப்படிப்பட்ட மனுஷிக்குப் பையனா பிறந்திருக்கோம்னு அந்தச் சமயத்தில் சந்தோஷப்பட்டேன்!”
“ ‘செக்கச் சிவந்த வானம்’ பற்றிச் சொல்லுங்க...”
- மா.பாண்டியராஜன்
“சமீபத்திய மணி சார் படங்களெல்லாம் ரொம்ப சாஃப்ட்டான படமா இருக்கும். ஆனா, ‘நாயகன்’, ‘தளபதி’ படமெல்லாம் ஹார்டுகோர் படமா இருக்கும். சீட் நுனியில் உட்கார்ந்து பார்த்திருப்போம். அடுத்து என்ன நடக்கப்போகுதுனு ஒரு எக்ஸைட்மென்ட் இருக்கும். அதே மாதிரிதான் ‘செக்கச் சிவந்த வானம்’ படமும் செம ஹார்டுகோர் படம். அடுத்து என்ன நடக்கப் போகுதுங்குற ஆவலைத் தூண்டும். ‘படத்தில நான் நடிக்கிறேன், இல்லைங்குறதையும் தாண்டி, படமா ரொம்பப் பிடிச்சிருக்கு சார். திரையில் பார்க்க ஆர்வமா இருக்கேன்’னு அவரிடம் சொன்னேன். படத்துல நாலு ஹீரோக்கள் இருந்தாலும் எல்லாருக்கும் சமமான காட்சிகள் இருக்கும்!”

“உங்க அப்பாவின் அரசியல் செயல்பாடு பற்றி உங்கள் கருத்து? அப்பாவுடைய ப்ளஸ் மைனஸ் என்ன?”
- பிரேம்
“நல்ல விஷயங்கள் செய்ய அரசியல் தலைவராக இருந்தால் மட்டுமே செய்ய முடியும்னு அப்பா நினைக்கிறார். ஆனால் அதை மாத்தணும்னு நான் நினைக்குறேன். ஒருமுறை நான் மாத்திட்டா... அப்பாவும் மாத்திக்குவார். எனக்கு அரசியல் பிடிக்கலை என்பதற்காக, ‘நீங்க ஏன் அரசியல் கட்சி வெச்சிருக்கீங்க’னு அவரிடம் கேட்க முடியாது. மக்களுக்கு நல்லது பண்ணணும்னு நினைக்கிறது அப்பாவோட ப்ளஸ். அதை அரசியலில் பண்ணணும்னு நினைக்கிறது அவருடைய மைனஸ்.”
“தூத்துக்குடிப் போராட்டம் நடக்கும்போது சமூக விரோதிகள் நுழைந்துவிட்டதாக ரஜினி சொன்னார்.அதே மாதிரி, எட்டுவழிச்சாலைக்கும் ஆதரவு தெரிவிச்சிருக்கார். இவை பற்றிய உங்கள் கருத்து என்ன?”
- ஆர்.சரண்

“எட்டுவழிச்சாலை எந்த ஏரியாவுல வருதுன்னுகூட எனக்குத் தெரியாது. சிலர் மட்டும் போராடுறாங்க என்பதற்காக இந்த எட்டுவழிச்சாலை வருவது யாருக்கும் பிடிக்கலைனு எடுத்துக்க முடியாது.
தூத்துக்குடிப் போராட்டத்தில் எத்தனையோ மக்கள் வந்து போராடினாங்க. அதை மதிக்கணும். அதே நேரத்தில் சமூக விரோதிகள் வந்தார்களானு நமக்குத் தெரியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரஜினி சார் சமூக விரோதிகள்னு சொன்னது கஷ்டமாதான் இருக்கும்!”
“தமிழ்நாட்டில் தாமரை மலருமா, மலராதா..?’’
- சுஜிதா சென்

“தாமரைனு நீங்க பொதுவா கேட்டீங்கன்னா... தாமரை, தண்ணி ஊத்துனா மலரும். தமிழ்நாட்டுல மலருமா மலராதான்னா, தமிழ்நாட்டுல தண்ணிய ஊத்தினாங்கன்னா மலரும்.’’
“பீப் சாங் பண்ணியது தப்புனு நீங்க உணர்ந்ததுண்டா?”
- ஜார்ஜ்
“பீப் பாட்டு பண்ணியது தப்புனு நான் ஏத்துக்க மாட்டேன். ஆனா, இந்தப் பாட்டு பலரிடம் தப்பான முறையில் சேர்ந்திருக்கேனு வருத்தப்பட்டதுண்டு.”
“உங்க வீடுதான் பிக் பாஸ்னா யாரெல்லாம் ஹவுஸ்மேட்ஸ்?”
- நிவேதா

“என்னோட வாழ்க்கையே பிக்பாஸ்தாங்க. என் வாழ்க்கையில் மறைக்கி றதுக்கு ஒண்ணுமே இல்லை.”
* “நீங்க நடிச்சதிலேயே ‘ஏன்டா இந்தப் படத்துல நடிச்சோம்’னு நினைச்சு ஃபீல் பண்ணுன படங்கள் என்னென்ன?”
* “ ‘சிம்பு லேட்டாதான் ஷூட்டிங் வருவார்’னு சொல்றாங்களே?”
* “பீப் சாங் பிரச்னை வந்தபோது உங்க பெண் தோழிகளின் ரெஸ்பான்ஸ் என்ன?”
- அடுத்த வாரம்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ், க.பாலாஜி