மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு

விகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு

விகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு

“நீங்க நடிச்சதிலேயே ‘ஏன்டா இந்தப் படத்துல நடிச்சோம்’னு நெனச்சு ஃபீல் பண்ணுன படம் எது?”

- கானப்பிரியா

விகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு

“அப்படிப் பார்த்தா நடிக்கவே வந்திருக்கக் கூடாது. எல்லாக் கதைகளிலும் பிடிச்சுதான் நடிச்சேன். ‘AAA’ படத்தை நாங்க எப்படி எடுக்கணும்னு நினைச்சோமோ, அப்படி எடுக்கலை. புரொடக்‌ஷன்ல அதிக காசு செலவானதால் சில பிரச்னைகள் ஏற்பட்டுச்சு. நிறைய சிரமங்கள் இருந்ததால அதை இரண்டு பார்ட்டா பிரிச்சு எடுக்கலாம்னு முடிவு பண்ணுனோம். அதனால சில விஷயங்கள் தப்பா இருந்தது. மத்தபடி அந்தப் படத்துல நடிச்சதுக்காக நான் வருத்தப்படலை.”

“நீங்க நடிக்க வரலைனா இப்போ எந்தத் துறையில சிம்புவைப் பார்க்கலாம்?”

- கானப்பிரியா

“கிரிக்கெட்.”

விகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு

“நீங்க சொல்ல வந்த கருத்துகள் தவறா போய்ச் சேர்ந்திருக்கு என்று வருத்தப்பட்டதுண்டா, அல்லது இந்தக் கருத்தை இப்படி மாத்திச் சொல்லியிருக்கலாமேனு நினைத்ததுண்டா?”

-பரிசல் கிருஷ்ணா

“எப்படிச் சொன்னாலும் புரியணும்னு நினைக்கிறவங்களுக்குப் புரியும். புரியக் கூடாதுனு நினைக்கிறவங்களுக்குப் புரியாது. அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்.”

“சிம்பு லேட்டாதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவார்னு சொல்றாங்களே...”

-நந்தினி 

விகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு

“ஆமா, லேட்டாதான் வருவேன். நான் இல்லைனு சொல்லலையே. அதுக்கு காரணம் என்னைச் சுத்தி நிறைய விஷயங்கள் எப்போதும் நடந்துகிட்டே இருக்கும். செட்டுக்குள்ள போகும்போது நடிக்கிறதுக்கான ஒரு மைண்ட்-செட் இருந்தா மட்டும்தான் அதற்கான வேலைகளை ஒழுங்கா பார்க்க முடியும். சும்மா ஒரு கமிட்மென்ட் கொடுத்துட்டோம்ங்கிறதுக்காக நடிக்க முடியாது. நடிப்பை சீரியஸா பார்க்கணும். அதனாலதான் நான் ஒழுங்கா நடிக்கிறேன்னு நெனைக்கிறேன். நான் லேட்டா வர்றதுனால நிறைய பேர் பாதிக்கப்படுறாங்க. இனி அதைச் சரிசெய்ய முயற்சி பண்றேன்.”

``பாலாஜி- நித்யா, நவீன் - கிருஷ்ணகுமாரி இப்படி நீங்க சமாதானப்படுத்த நினைக்கிறவங்க நிறையபேர் தமிழ்நாட்டுல இருக்காங்களே... இப்படி திடீர்னு குடும்ப ஆலோசகரா மாற காரணம் என்ன?’’

-கானப்ரியா

விகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு

``பிரிச்சுவைக்க நிறையபேர் இருக்கும்போது சேர்த்துவைக்க யாராவது இரண்டுபேர் வேணாமா, அதான். கண்ணுக்கு முன்னாடி ஒரு விஷயம் தெரிஞ்சுது. அதான்  சேர்த்து வைக்கலாமேனு.மற்றபடி ஒண்ணுமில்லை.’’

``காவிரி பிரச்னைக்காக நீங்க சொன்ன மாதிரி எத்தனை பேர் உங்களுக்குத் தண்ணீர் பாட்டில் அனுப்பினாங்க, என்ன ரெஸ்பான்ஸ்?’’

- மா.பாண்டியராஜன்

“எனக்கு போன் பண்ணி நிறைய பேர் நல்ல முயற்சின்னு பேசினாங்க. அந்தச் சூழ்நிலையில அங்கே வாழக்கூடிய தமிழர்களுக்கு பயம் இருந்திட்டே இருந்திருக்கு. இப்போ அந்த பயம் இல்லாமல் சந்தோஷமா இருக்கு. அதுக்காக நன்றினு அவங்க சொன்னபோது ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது.”

``பல படங்கள்ல அஜித் ரசிகரா உங்களைக் காட்டிக்கிறீங்க. பல இடங்களில் விஜய் பத்தி பேசியிருக்கீங்க. என்ன காரணம்?’’

- இரா.கலைச்செல்வன்

விகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு

“எனக்கு விஜய் அண்ணாவை பர்சனலாத் தெரியும், பிடிக்கும். சினிமாவில் எனக்கு அஜித் சாரைப் பிடிக்கும். நான் எப்பவும் வெளிப்படையா இருந்திருக்கேன். அந்த விஷயத்தை விஜய் அண்ணா தப்பா எடுத்துக்கிட்டதில்லை. அவருக்கு நான் உண்மையாதான் இருக்கேன். அது அவருக்குப் பிடிக்கும்.”

``உங்களுக்கும் விஜய்க்குமான பழக்கத்தைப் பத்தி சொல்லுங்க. அவர் அரசியலுக்கு வரும் பட்சத்தில் உங்க கருத்து என்னவா இருக்கும்?’’

-தமிழ்ப்பிரபா 

விகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு

“நீங்களே கூட்டிட்டு வந்திருவீங்க போல இருக்கே. நல்லா நடிச்சிட்டு இருக்கார். சமுதாயத்து மேல அக்கறை இருக்கு. பின்னாடி அவர் அரசியலுக்கு வரவும் வாய்ப்பு இருக்கு. நான் எப்பவும் அவர்கிட்ட தம்பியா பழகியிருக்கேன். அவர் அப்போ யார்கிட்டேயும் அவ்வளவா பேசமாட்டார். நிகழ்ச்சிகள்ல பார்த்தா நான் மட்டும் அவர்கிட்ட போய்ப் பேசுவேன். அப்புறம் ரெண்டு பேரும் பிஸியாகிட்டதுனால அவ்வளவா நெருக்கமாகலை. ஆனா, எப்போவும் அவர் எனக்கு அண்ணன் மாதிரிதான்.”

விகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு

``பீப் சாங் பிரச்னை வந்தபோது உங்க பெண் தோழிகளின் ரெஸ்பான்ஸ் என்ன?’’

-சனா

விகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு

“என்னை யாருமே திட்டலை. அந்தப் பிரச்னைக்கு அப்புறம் ரிலீசான ‘இது நம்ம ஆளு’ படத்துக்குப் பெண்கள்தான் நிறைய பேர் வந்தாங்க. நான் எழுதினது சரினு நான் சொல்ல வரலை. அப்படி தப்பா இருந்தா நான் மன்னிப்பு கேட்டுப்பேன். பெண்களை இழிவுபடுத்தணும்கிறது என் நோக்கம் இல்லை.’’

விகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு

``உங்க அப்பா படத்துல ஹீரோவா அறிமுகமான நீங்க, அதற்குப் பிறகு அவர் படத்துல நடிக்கவே இல்லையே. என்ன காரணம்?’’

- சுஜிதா சென் 

“அவர் படத்துலதான் அறிமுகமாகணும்ங்கிறது என் மைண்ட் செட்டா இருந்தது. அதுக்கு அப்புறம் ஏன் நடிக்கலைன்னா, அவரே என்னைத் தூக்கிவிட முயற்சி பண்றார்னு ஒரு இமேஜ் உருவாகிடக் கூடாதுன்னு தெளிவா இருந்தேன்.’’

விகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு

``காவிரிப் பிரச்னைக்கு நீங்க ஒரு ஐடியா சொன்னமாதிரி எட்டு வழிச்சாலைக்கு என்ன ஐடியா வெச்சிருக்கீங்க?’’
 
- மா.பாண்டியராஜன்

 “எல்லாருக்குமே இருக்கிற உணர்வுதான் எனக்கும் இருக்கு. எப்போவாவது இப்படித் தோணும். அதுக்காக, எல்லாத்துக்கும் இப்படி ஏதாவது சொல்லவா கடவுள் என்னை அனுப்பியிருக்கார்?”

விகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு

`` ‘வல்லவன்’ படத்துல வர்ற சந்தியா மாதிரி உங்களுக்கு நெருக்கமான தோழிகள் இருக்காங்களா? அவங்க யார்?’’ 

-சனா

“த்ரிஷா, பிந்து மாதவி, தான்யானு இன்டஸ்ட்ரியிலேயே நிறைய பேர் இருக்காங்க. சினிமாவுல இல்லாதவங்களும் இருக்காங்க. பொண்ணுங்களுக்கு நான் எதிரானவன்னு நினைக்கிறாங்க. அப்படி இல்லை. நான் பெண்களை மதிக்கிறவன்.”

படங்கள்: ஜெ.வேங்கடராஜ், க.பாலாஜி