பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“பாலும் உண்டு; கள்ளும் உண்டு!”

“பாலும் உண்டு; கள்ளும் உண்டு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பாலும் உண்டு; கள்ளும் உண்டு!”

“பாலும் உண்டு; கள்ளும் உண்டு!”

‘மூன்று நிமிடத்தில் ஒரு கதை சொல்லணும்.. ஜெயிக்கிற இயக்குநருக்கு கோலிவுட்டில் ஸ்பெஷல் என்ட்ரி!’ என்ற அறிவிப்போடு ஜனவரி மாதம் தொடங்கியது, ‘மூவி பஃப்’பின் ‘ஃபர்ஸ்ட் கிளாப்’ குறும்படப் போட்டியின் இரண்டாவது சீஸன்.

“பாலும் உண்டு; கள்ளும் உண்டு!”

மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் விஷ்ணு எதவன் இயக்கிய ‘கல்கி’ குறும்படம் இந்த சீஸனின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டது. இயக்குநருக்கு மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், நடிகர் சூர்யாவிடம் கதை சொல்லும் வாய்ப்பும்  வழங்கப்பட்டுள்ளது. 

 வி.ஜி.பாலசுப்பிரமணியம் இயக்கிய ‘கம்பளிப்பூச்சி’ இரண்டு லட்சம் ரூபாய் பரிசும், ஷியாம் சுந்தர் இயக்கிய ‘குக்கருக்கு விசில் போடு’  ஒரு லட்சம் ரூபாய் பரிசும் பெற்று, முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தைப் பிடித்தன. லோகியின் ‘மயிர்’, சாரங் இயக்கிய ‘பேரார்வம்’ தலா 25,000 ரூபாய் பரிசு பெற்று கடைசி இரு இடங்களைப் பிடித்தன. 

வெற்றியாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசிய நடிகர் சூர்யா, “இது ஒரு பட்டமளிப்பு விழா மாதிரி இருக்கு. ஒரு இயக்குநர் தன் முதல் படத்தை எடுப்பதற்குள் கிட்டத்தட்ட கதை, காட்சி, கேமரா, வசனம், ஆடை, நடிகர்கள் என... எழுபதாயிரம் முடிவுகள் எடுக்க வேண்டியதா இருக்கும்னு ஒரு புத்தகத்துல படிச்சேன். 

‘நந்தா’ படம் பண்ணும்போது பாலா அண்ணன் சொன்னதுதான் ஞாபகம் வருது. ‘நாம செய்ற ஒவ்வொரு காட்சியும், படமும் ஒரு பதிவு. நம்ம காலத்துக்குப் பிறகும் அது நிலைச்சு நிற்கும். அதனால, முழுமையா உண்மையா இருக்கணும்’னு சொன்னார் அவர். குறும்படங்கள் நிறைய விஷயங்களைச் செய்யும். அதுவும் ஒரு  பதிவு. நீங்களே வேணாம்னு நினைச்சாலும், அது நம்ம வாழ்நாளைத் தாண்டி இருக்கப்போற விஷயம். அதனால, எந்த சமரசமும் இல்லாம எடுங்க. வெற்றி பெற்ற குறும்பட இயக்குநர்கள் கவனத்துக்கு, தமிழ் சினிமாங்கிற மார்க்கெட்ல நீங்க பாலும் விற்கலாம்; கள்ளும் விற்கலாம். எது வேணும்னு நீங்க முடிவு பண்ணிக்கோங்க!” என்றார்.

தெளிவான ஆள்கள் தெளிவான முடிவெடுப்பார்கள்.

அலாவுதீன் ஹுசைன் - படம்: பிரியங்கா