பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“சிவகார்த்திகேயன் எனக்கு ஸ்பெஷல்தான்!”

“சிவகார்த்திகேயன் எனக்கு ஸ்பெஷல்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சிவகார்த்திகேயன் எனக்கு ஸ்பெஷல்தான்!”

“சிவகார்த்திகேயன் எனக்கு ஸ்பெஷல்தான்!”

நூறு படங்களுக்கு மேல் இசையமைத்த இமானுக்கு, பொன்ராமுடன்  ஹாட்ரிக் புராஜெக்ட் ‘சீமராஜா.’ எப்படி வந்திருக்கிறது படமும் இசையும்?

“சிவகார்த்திகேயன் எனக்கு ஸ்பெஷல்தான்!”

“பொன்ராம் சார் படத்துல வொர்க் பண்ணும்போது ரொம்பவே கவனமா இருக்கணும். ஏன்னா, கிராமத்துப் பின்னணியில ஒரு லவ் சாங், ஓபனிங் சாங் இப்படி ஒவ்வொரு படத்துலேயும் தேவைகள் கிட்டத்தட்ட ஒண்ணாதான் இருக்கும்னு தோணும். ஆனா அதுக்குள்ள நம்ம வெரைட்டி காட்டுறதுதான் விஷயமே. அந்த சவாலை எனக்குக் கொடுத்துக்கிட்டே இருப்பார் அவர். உதாரணத்துக்கு, ‘பாக்காத பாக்காத’, ‘உன் மேல ஒரு கண்ணு’ அதே ஃபீலோட இந்தப் படத்துல ‘உன்னவிட்டா யாரும் எனக்கில்ல’ பாடல்...” உற்சாகமாக ஆரம்பிக்கிறார்.

“சிவகார்த்திகேயன் எனக்கு ஸ்பெஷல்தான்!”

“பொன்ராம்கூட மூன்றாவது படம். என்ன வித்தியாசம் ‘சீமராஜா’வுல?”

“பொன்ராம் சாருடைய முந்தைய படங்களைவிட இதுல திரைக்கதை அழுத்தமா இருக்கும். ‘சீமராஜா’ சிவகார்த்திகேயன் தம்பிக்கு மாஸ் கொஞ்சம் தூக்கலா இருக்கும். ராஜா சீக்வென்ஸுக்கு இசையமைக்கறது சவாலா இருந்தது. அதுல சிவா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன்.”  

“சிவகார்த்திகேயன் எனக்கு ஸ்பெஷல்தான்!”

 “சிவகார்த்திகேயன் படம்னா இமானுக்கு கூடுதல் ஸ்பெஷல் போலத் தெரியுதே?”

“அப்படியும் சொல்லலாம். சிவா ‘மெரினா’க்கு முன்ன இருந்தே எனக்குப் பழக்கம். போன்ல மணிக்கணக்கா பேசுவோம். ஷூட்டிங் ஸ்பாட் போனா, ‘இது ஓகேவா... இப்போ ஓகேவா’னு கேட்டுகிட்டே இருப்பார். நான் உரிமையா தம்பினு யாரையும் கூப்பிட்டது கிடையாது. அந்த வகைல தம்பி எனக்கு ஸ்பெஷல்தான்.”

“சிவகார்த்திகேயன் எனக்கு ஸ்பெஷல்தான்!”

“6 வருஷம். 12 படம். ஒரு அண்ணனா சிவகார்த்திகேயன் வளர்ச்சியை எப்படிப் பார்க்குறீங்க?” 

“கூட இருந்து பார்த்தாதான் அவரோட உழைப்பு தெரியும். என்ன மாதிரியான படங்களை அடுத்தடுத்து பண்ணணும்னு ரொம்பத் தெளிவா இருக்கார்.திட்டமிடலிலும் அதை நடை முறைப்படுத்தறதிலும் அவ்வளவு கெட்டிக்காரர்.” 

“சிவகார்த்திகேயன் எனக்கு ஸ்பெஷல்தான்!”

“நடிகர்களுக்குப் பாடணும்னு ஆசை இருந்தால் இமான்கிட்ட சொன்னா நிறைவேறிடுமாமே... அந்த எண்ணம் எப்படி வருது?”

“நான் ஆர்ட்டிஸ்டைப் பாட வெக்கணும்னு நினைக்கிற தில்லை. அவங்க ளுக்குள்ள இருக்கிற பாட கரைத்தான் பாட வெக்கணும்னு நினைக்கிறேன். இதுவரை நான் எடுத்த குரல்கள் எல்லாமே உண்மையிலே அந்தப் பாட்டுக்கு சரியா இருக்கும்னு நினைச்சுப் பண்ணுனதுதான். ஒரு சில நடிகர்களைப் பாட வெச்சு அது சரியா வொர்க் அவுட் ஆகாமல் வெளியவே சொல்லாத கதையெல்லாம்கூட இருக்கு. ஒரு நடிகரைப் பாட வெச்சுட்டா அதுக்கு ஃபோகஸ் கிடைச்சிடும். அதுல மில்லியன் ஹிட் கொடுத்திடலாம்னு நினைச்சுப் பண்ணுனதே இல்லை. அப்படித்தான் சிவகார்த்திகேயன், லக்‌ஷ்மி மேனன், ரம்யா நம்பீசன்னு பாட வெச்சேன்.”

“சிவகார்த்திகேயன் எனக்கு ஸ்பெஷல்தான்!”

``உங்க பல பாடல்கள் கேட்கறப்ப ‘இது அதுல்ல?’னு தோணுதே... அப்படித் தெரியக்கூடாதுனு மெனக்கெடுவீங்களா?”

“சிவகார்த்திகேயன் எனக்கு ஸ்பெஷல்தான்!”

“வடிவேலு சார் மாடுலேஷன்ல பதிலும் சொல்லணும்னா ‘மண்டை மேல இருக்கிற கொண்டைய மறந்துட்டேன்’ கதைதான்.  என்ன பண்ணுனாலும் அது ஏதோ ஒரு இடத்துல தெரிஞ்சிடும். ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அந்த வகையில எனக்கும் ஒரு ஸ்டைல் இருக்கு. அடுத்தடுத்து வெவ்வேற ஜானர்கள் படம் பண்ணும்போது நமக்குள்ள இருக்கிற வேற ஒரு இசை வெளியே வரும்.  என்னைக் கடைக்கோடி மக்களுக்கு எடுத்துட்டுப் போறது கிராமியப் பாடல்கள்தான்.  எனக்கான இசையில எப்படி வித்தியாசப்படுத்திக் கொடுக்க முடியும்னுதான் பார்க்கணும்.”