அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

கேள்வி கார்னர்

அஜய் தேவ்கனுடன் ஆக்‌ஷன் காட்சிகளில்நடிக்க எப்படித் தயாரானீர்கள்? 

குல் ப்ரீத் சிங்: சூப்பரான அனுபவமா இருந்தது. நான் எப்பவும் ஜிம்முக்கு சரியான நேரத்துக்குப் போய் வொர்க் அவுட் பண்ணுவேன். அஜய் தேவ்கன் சார் படத்துல ஆக்‌ஷன் சீக்வென்ஸ் இருக்கிறதால, ஜிம்ல அதிக நேரம் இருந்தேன். சண்டைக் காட்சிகளுக்காக ஸ்பெஷலா வொர்க் அவுட் செய்ததை என் இன்ஸ்டாகிராம் பக்கத்தில அப்லோடு பண்ணியிருந்தேனே, நீங்க பார்க்கலையா?

• தெலுங்கில் டாப்ஸி நடித்த ‘ஆனன்டோ பிரம்மா’ எனும் ஹாரர் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தின் நடிகர், நடிகைகளுக்கான தேடல் நடைபெற்று வருகிறது.

• ஸ்ரத்தா கபூர் நடித்து சமீபத்தில் வெளியான ‘ஸ்திரி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை, தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

• தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால், மற்ற மொழிப் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் இனியா. கன்னடத்தில் சிவராஜ்குமார் இப்போது நடித்துவரும் ‘ட்ரோனா’ படத்தில் மூன்று ஹீரோயின்கள். மூவரில் ஒருவர், இனியா.

• ‘டார்லிங்’, ‘மேகா’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. ஒவ்வொரு படத்தையும் கவனமாகத் தேர்ந்தெடுக்கும் ஸ்ருஷ்டி,
இப்போது ஒரு புதுமுக ஹீரோவுடன் ‘அர்ஜுனா’ என்ற படத்தில் கமிட்டாகி உள்ளார்.

மிஸ்டர் மியாவ்

• ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஜோடிக்கு நவம்பரில் திருமணம். தீபிகாவுக்காக தன் வீட்டைப் புதுப்பித்து வருகிறார் ரன்வீர். அதுவரை ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருக்கிறாராம்.

மிஸ்டர் மியாவ்

போட்டோ ஷாப்

சனுஷா:
எனக்கு என் தம்பினா ரொம்ப பிடிக்கும். எப்போ எல்லாம் மனசு கஷ்டமா இருக்கோ, அப்போ இந்த போட்டோவைத்தான் பார்ப்பேன். நான் அவன்கூட இருந்தா எவ்வளவு சந்தோஷமா இருப்பேன்னு இந்த போட்டோவை வெச்சு தெரிஞ்சுக்கலாம். என் ஆல் டைம் ஃபேவரைட், என் தம்பிகூட இருக்கிற இந்த போட்டோதான்!

சைலன்ஸ்

‘பு
கழ்’ நடிகையின் பாப்புலாரிட்டி நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போவதைப் பார்த்து, முன்னணி நடிகைகளின் வயிற்றில் ஃபயர். ‘புகழ்’ நடிகை தளபதியுடன் நடித்த படமும், சன் நடிகருடன் நடித்த படமும் சரியாகப் போகவில்லை. இதைச் சுட்டிக்காட்டி, ‘ராசியில்லாத நடிகை’ என தகவல் பரப்பிக்கொண்டிருக்கிறார்களாம்.

மு
திர் கன்னி வயதைக் கடந்தும், இன்னும் யோகா நடிகைக்கு கல்யாணத்தின்மீது பிடிப்பு இல்லாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறாராம். அந்த உயரமான நடிகையின் ரகசியத் தோழியிடம் விசாரித்தால், ‘தன்னைவிட வயது குறைந்த கண்ணாளனைத் தேடிவருகிறார்’ என்று அர்த்த புஷ்டியுடன் கண் சிமிட்டுகிறார்.

மிஸ்டர் மியாவ்

• ‘8 தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்க உள்ளார்.

மிஸ்டர் மியாவ்

• ‘அறம்’ படத்தைத் தொடர்ந்து கோபி நயினார் இயக்க இருக்கும் புதிய படத்தில், ஹீரோவாக ஜெய்யும் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷும்  நடிக்கின்றனர்.