Published:Updated:

`சீனியர் போராளிகள், ஜூனியர் போராளிகள் ஒன்றிணைந்துட்டோம்!' - திருநங்கை கிரேஸ் பானு

ன்று, ஜிப்ஸி படத்தின் புரமோஷனல் பாடலுக்கான புகைப்படம் வெளியாகியிருக்கின்றது. அதில் சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கெடுத்திருக்கிறார்கள். மூத்த அரசியல்வாதி 'நல்லகண்ணு'  உட்பட முக்கியமான சமூகப் போராளிகளை வைத்து அந்த புரொமோஷனல் பாடலை உருவாக்கியிருக்கிறார், இயக்குநர் ராஜூமுருகன். இதில் நடித்துள்ள திருநங்கை கிரேஸ் பானுவிடம் பேசினோம்.

`நேத்துதான் இந்தப் பாடலை ஷூட் பண்ணாங்க. இது புரொமோஷனலுக்கான பாடல்தான் என்றாலும், அங்கே முக்கியமான சமூக ஆர்வலர்கள் எல்லோரும் ஒன்றுகூடியிருந்தது உண்மையாகவே சந்தோஷமான, நெகிழ்ச்சியான தருணம். நாங்க எல்லோரும், இப்போ சமூகத்தில் என்ன மாதிரியான பிரச்னைகள் நடந்துட்டு இருக்கு அதுக்கு நாம எப்படி நம்மளோட எதிர்ப்பைத் தெரிவிக்கணும்னு பேசிட்டு இருந்தோம். இளைய தலைமுறை போராளிகள், மூத்த தலைமுறை போராளிகள் ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பல விஷயங்களைப் பகிர்ந்துகிட்டோம். இனி, எங்களுக்கு ஏதாவது பிரச்னைன்னா நீங்க குரல் கொடுங்க.. உங்களுக்கு ஏதாச்சும்னா நாங்க குரல் கொடுக்கிறோம். ஒருத்தருக்கொருத்தர் என்ன பிரச்னைங்குறதைப் பகிர்ந்துட்டு மொத்தமா ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்னு பேசினோம்.

நல்லகண்ணு, திருமுருகன் காந்தி, பாலபாரதி போன்ற பல தோழர்கள் வந்திருந்தாங்க. நாங்களே நினைச்சா கூட இப்படி ஒரு மீட்டிங் சாத்தியமாகுமான்னு தெரியலை. இப்படி ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்துகொடுத்த டைரக்டருக்கு நன்றி. இந்த புரொமோ பாட்டு வரும்போது நீங்களே நாங்க எல்லோரும் எவ்வளவு சந்தோஷமா இருந்தோங்குறதைப் பார்ப்பீங்க' என்றார்.