சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“ஆரம்பத்தில் ஷாக் ஆகிட்டேன்!”

“ஆரம்பத்தில் ஷாக் ஆகிட்டேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஆரம்பத்தில் ஷாக் ஆகிட்டேன்!”

“ஆரம்பத்தில் ஷாக் ஆகிட்டேன்!”

‘96’படத்தில் சிறு வயது தேவதர்ஷினியாக நடித்தவர் நிஜத்தில் தேவதர்ஷினியின் மகள் நியத்தி கடம்பி என்றால் பலருக்கும் ஆச்சர்யம்தான். வீட்டிற்குள் நுழைந்த வுடனே புத்தகமும் கையுமாக இருந்தார் நியத்தி. “இது அவங்களுடைய வாழ்க்கைக்கு ரொம்பவே முக்கியமான தருணம். ஏன்னா, அவங்க பத்தாம் வகுப்பு படிக்கிறாங்க” என நியத்தியை நமக்கு அறிமுகப்படுத்தி வைத்துவிட்டுப் பேசத் தொடர்ந்தார், தேவதர்ஷினி.

“ஆரம்பத்தில் ஷாக் ஆகிட்டேன்!”

“நான் காலேஜ் படிக்கும்போது ஆங்கரிங் வாய்ப்பு வந்துச்சு. அதைத் தொடர்ந்து ‘மர்மதேசம்’ சீரியல் வாய்ப்பு வந்துச்சு. அந்நேரம் இந்த ஃபீல்டை என்னுடைய பொழுதுபோக்காக மட்டும்தான் நினைச்சேன். காலேஜ் போய்ட்டு வந்துட்டு ஃப்ரீ டைம்ல சீரியலில் நடிச்சிட்டிருந்தேன். அதுக்கப்புறம் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்து, இதுவே என்னுடைய தொழில் ஆகிடுச்சு” என்றவரை நிறுத்தி, நியத்தி தொடர்ந்தார்.

“படிப்பைத் தவிர்த்து பாட்டு, பரதம்னு பிஸியா இருக்கேன். சின்ன வயசுல இருந்தே அம்மா, அப்பாவைப் பார்த்து எனக்கும் நடிப்பு மேல ஒரு கிரேஸ் இருக்கு. இப்போ பத்தாவது படிக்கிறேங்குறதுனால முதலில் படிப்பு அப்புறம் நடிப்புன்னு அம்மா சொல்லியிருக்காங்க’’ என்றவரைக் கட்டியணைத்து, தேவதர்ஷினி தொடர்ந்தார்.

“ஆரம்பத்தில் ஷாக் ஆகிட்டேன்!”



“ விஜய், திரிஷான்னு அவங்களுடைய சின்ன வயசு கேரக்டரை டைரக்டர் செலக்ட் பண்ணிட்டார். ஆனா, என் ஜாடையில் யாருமே அமையல. ஒருநாள் நியத்தியை சூட்டிங் ஸ்பார்ட்டுக்குக் கூட்டிட்டுப் போனேன். அங்கே இவளைப் பார்த்துட்டு, ‘பேசாம உங்க பொண்ணே நடிக்கலாமே’னு சொல்லிட்டார். ஷாக்கிங்காகத் தான் இருந்துச்சு. ஆனா நல்ல படம் என்பதால் நடிக்கவெச்சேன்.

ஆரம்பத்துல நடிப்பு பற்றி அவளுக்கு எதுவுமே தெரியாது. நானும் சரி, சேத்தனும் சரி, ‘இயல்பா டைரக்டர் சொல்றதைச் செய்... அதைத் தாண்டி ஓவர் ஆக்‌ஷன் எதுவும் பண்ண வேண்டாம்’னு பல முறை சொன்னோம். மற்றபடி ஒரு அம்மாவா, செட்டுல என்ன மாதிரி நடந்துக்கணும், எப்படி இருக்கணுங்குறதைச் சொல்லிக் கொடுத்தேன். இந்தப் படத்துக்கு இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் வரும்னு நாங்க கொஞ்சம்கூட எதிர்பார்க்கல. ‘நீ ஹீரோயின் கிடையாது; கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் தான்... ஓரமாகத்தான் உன்னைக் காட்டுவாங்க... ரொம்ப எதிர்பார்க்கக் கூடாது’ன்னு பல முறை நியத்திகிட்ட சொன்னோம். ஏன்னா, அவ நினைக்கிறது ஸ்கிரீன்ல இல்லைன்னா வருத்தப்படுவான்னு நினைச்சோம். ரொம்ப இயல்பா அதைப் புரிஞ்சு ஏத்துக்கிட்டா. ஆனா, ‘96’ வந்ததுக்கு அப்புறம் எல்லோரும் நியத்தியையும் அடையாளம் வெச்சுப் பாராட்டுறது ரொம்ப ஹாப்பியா இருக்கு. இது நாங்க கொஞ்சம்கூட எதிர்பார்க்காதது தான்” என்றவரின் முகத்தில் அத்தனை பெருமிதம்!

“என் ஸ்கூல்ல எல்லோரும், நான் நடிக்கிறேன்னு சொன்னப்போ ரொம்ப ரியாக்‌ட் பண்ணலை. ஏன்னா, என் அம்மா, அப்பா ரெண்டு பேரும் நடிக்கிறாங்க. அதனால நானும் நடிக்கிறேன்னு நினைச்சாங்க. என்னுடைய பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் மட்டும் பயங்கர ஹாப்பியா ஃபீல் பண்ணாங்க. படம் ரிலீஸானதுக்கு அப்புறம் ஸ்கூல்ல எல்லோருமே என்னைக் கூப்பிட்டுப் பாராட்டுனாங்க. ஐ அம் ஸோ ஹாப்பி! செட்டுல விஜய் சேதுபதி சார், திரிஷா மேம்லாம் ஜாலியா பேசுனாங்க. விஜய் சேதுபதி சார் பர்சனலா நல்லா நடிச்சிருக்கேன்னு பாராட்டுனாங்க” என்கிறார்.

“இப்போதைக்குப் படிப்பில்தான் கவனம். படிச்சு முடிச்சபிறகு எதிர்கால வாழ்க்கையை நியத்திதான் தேர்ந்தெடுப்பாங்க” என்று தேவதர்ஷினி சொல்ல, ஆறுதலாகத் தோளில் சாய்கிறார் செல்ல மகள்.

வெ.வித்யா காயத்ரி / படம்: தி.குமரகுருபரன்