சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சண்டக்கோழி 2 - சினிமா விமர்சனம்

சண்டக்கோழி 2 - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சண்டக்கோழி 2 - சினிமா விமர்சனம்

சண்டக்கோழி 2 - சினிமா விமர்சனம்

`சண்டை வேண்டாம்’ என்று சிலபல சண்டைகளுக்கு மத்தியில் குரல் எழுப்பும் சமரசக்கோழி.

சண்டக்கோழி 2 - சினிமா விமர்சனம்

ஏழாண்டுப் பகையுடன் அரிவாள் தீட்டிக் காத்திருக்கிறது ஒரு கும்பல். பல ஆண்டுகளாக நடக்காத திருவிழா அமைதியாக நடக்கவேண்டும் என்று ராஜ்கிரணும் விஷாலும் மேற்கொள்ளும் முயற்சிகளே கதை.

தனக்கென  அளவெடுத்துத் தைத்த ‘பாலு’ கதாபாத்திரத்தில், அன்றும் இன்றும் அளவு  மாறாமல் கச்சிதமாய்ப் பொருந்திப்போகிறார் விஷால். ராஜ்கிரண் நல்லியெலும்பு கடிப்பதைப் பார்த்தால் நமக்குப் பசிக்கிறது. யாரையாவது அவர் தூக்கி எறிந்தால் நமக்கு வலிக்கிறது. குறும்பு காட்டி அசத்துகிறார்; அசால்ட் ஆட்டம் போட்டு மிரட்டுகிறார் கீர்த்தி சுரேஷ். வரலெட்சுமி... கண்களில்  மட்டுமே அவ்வளவு வில்லத்தனம். முனீஸ்காந்த் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். `ஜானி’  ஹரி, படம் முழுக்கப் பயத்துடன் பயணிக்கிறார்.

சண்டக்கோழி 2 - சினிமா விமர்சனம்



யுவன் ஷங்கர் ராஜா, பரபரப்புக் காட்சி களுக்கு இசையால் உயிர் கொடுத்திருக்கிறார். திருவிழாவின் வண்ணங்களோடு குழைத்து காட்சிகளாக்கித் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சக்திவேல். படத்தொகுப்பாளர் பிரவீன் சண்டைக்காட்சி களில் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

 ஒரு திருவிழா, அதற்குள் காதல், காமெடி, ஆக்ஷன், எமோஷன் என சகல மசாலாக்களையும் கலந்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. 

சண்டக்கோழி 2 - சினிமா விமர்சனம்
சண்டக்கோழி 2 - சினிமா விமர்சனம்

‘வன்முறை கூடாது, சமத்துவம் வேண்டும்’ என்று மெசேஜ் சொல்ல நினைத்தது நல்ல விஷயம்தான். ஆனால் கழுத்தறுப்பவரும் ஒருதரப்பு, கருணைகாட்டிக் காப்பாற்றுபவரும் அதே தரப்பு, எப்போதும் அச்சத்துடனும் விசுவாசத்துடனும் இருக்க வேண்டியவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள்தான் என்றல்லவா புரிந்துகொள்ளப்படும்? ‘`எதுக்குய்யா புலி, சிங்கம்னு பேசுறீங்க? மனுஷங்களா இருங்க” என்று சொல்லும் நல்லவரான ‘ஐயா’ அவர் செருப்பைக்கூட அவரே போடாமல், யாராவது எடுத்துப்போட்டால் காலை நுழைத்துக்கொள்வது, மனிதர்களை இழிவுபடுத்துவது என்று அவருக்குத் தெரியவில்லையா?

பந்தோபஸ்துக்கு வரும் போலீஸ் எந்த அசம்பாவிதத்தையும் தடுத்து நிறுத்தாமல் குச்சி ஐஸ் சாப்பிடுவது, தேவையேயில்லாத ‘பெண் பார்க்கும் படலம்’ சென்டிமென்ட் டிராமா, ஒரு டஜன் குடும்ப உறுப்பினர்களையே மீண்டும் மீண்டும் ‘தெக்கூர்காரர்கள்’ என்று பில்டப் கொடுப்பது என்று... சண்டைக் கோழியில் லாஜிக்கும் மிஸ்ஸிங்;  பழைய பாய்ச்சலும் நிறைய மிஸ்ஸிங்.

- விகடன் விமர்சனக் குழு