Published:Updated:

சர்கார் - சினிமா விமர்சனம்

சர்கார் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சர்கார் - சினிமா விமர்சனம்

சர்கார் - சினிமா விமர்சனம்

தை... ரிலீஸுக்கு முன்பே பிரேக்கிங் நியூஸிலேயே சொல்லப்பட்டது தான். 

சர்கார் - சினிமா விமர்சனம்

சர்காரைத் தாங்கிநிற்கும் அஸ்திவாரம் துள்ளலும் எள்ளலும் கலந்த விஜய் எனும் பிராண்ட்தான். அதற்கடுத்து ராதாரவியும் வரலெட்சுமியும் கொஞ்சம் ஸ்கோர் செய்கிறார்கள். மற்றபடி பழ.கருப்பையா, கீர்த்தி சுரேஷ், லிவிங்ஸ்டன், யோகிபாபு என்று பலரும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களைப் போல பரிதாபமாக வந்துபோகிறார்கள்.

சர்கார் - சினிமா விமர்சனம்கனடாவில் 22,000 பேரை வேலையிழக்கச் செய்து, 10,000 பேரை நாட்டை விட்டே அனுப்பிய ‘கார்ப்பரேட் கிரிமினல்’ விஜய், 25,000 ரூபாய் கந்துவட்டிக் கொடுமைக்காகத் தீக்குளித்தவர் களுக்காகக் கண்ணீர் சிந்துகிறார். 55 வருட அரசியல் அனுபவமுள்ள பழ.கருப்பையா, வெளிநாட்டில் இருக்கும் ‘பாப்பா’ சொல்படிதான் அரசியலே செய்கிறார். ‘கட்சி அலுவலகத்தில் கொலை செய்யலாமா?’ என்று ‘லீகல் ஒப்பீனியன்’ கேட்கிறார் ‘ரெண்டு’ அரசியல்வாதி ராதாரவி. ஒவ்வொரு மணிக்கும் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் வழக்கறிஞர் ஜெத்மலானி, நீதிமன்றத்தில் வாய் திறப்பதே இல்லை. இப்படிப் படத்தில் எல்லா கேரக்டர்களும் ஏனோதானோ வென்று சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். 

சர்கார் - சினிமா விமர்சனம்

அயோத்திகுப்பத்தில் வாழ்பவர்கள் அத்தனை பேருமா வெளியூரிலிருந்து வந்தவர்கள், நாயகனின் அண்ணனுக்கு ஏன் விவாகரத்து ஆக வேண்டும், வெளிநாட்டு பவுன்ஸர்களுக்கு எப்படி தமிழ் தெரியும், தன் வாக்கையே கள்ள ஓட்டு போட்டவரிடம் ஹீரோ காமெடியா செய்வார் என எல்லாக் காட்சிகளிலும் அதிக ஓட்டைகள். ‘டெங்குவுக்குக் காரணம் பொதுப்பணித்துறை’, இந்தியாவில் இருந்து கொண்டே ‘கால் தி இண்டியன் எம்பஸி’, காவல்துறை அதிகாரியே ‘சுந்தர் டெபாசிட் வாங்க மாட்டார்’ என்று சொல்வதென்று ஏ.ஆர்.முருகதாஸ் - ஜெயமோகன் கூட்டணியின் வசனங்கள் அபத்தக் களஞ்சியம். அதிலும், கள்ள ஓட்டால் ஓட்டிழந்தவரின் குடும்பத்தை இழிவுசெய்யும் வசனம் வக்கிரத்தின் உச்சம்.

ரஹ்மானுக்கும் யாராவது கள்ள ஓட்டு போட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை.  பாடல்களை ரசிக்கமுடியவில்லை. ரஹ்மான் - குதுப் இ க்ரிபாவின் பின்னணி இசை  மட்டும் ஓகே. ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரன், கவனிக்க வைக்கிறார். ராம் - லெட்சுமணன் வடிவமைப்பில் ஆக்‌ஷன் காட்சிகளில் தீ. 
 
பலவீனமான திரைக்கதை, நம்பகத் தன்மையற்ற காட்சிகள், அபத்தமான வசனங்கள், புரியாத பாடல்கள், பொருத்தமற்ற பாடல்காட்சிகள், முழுமை பெறாத பாத்திரங்கள் என்று நம்பிக்கை வாக்கெடுப்பில் பரிதாபமாகத் தோற்கிறது இந்த ‘சர்கார்.’

- விகடன் விமர்சனக் குழு