மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

அன்புள்ள கி.ராவுக்கு எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்
தொகுப்பு: கி.ராஜநாராயணன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18
பக்கங்கள்: 263 , விலை:

விகடன் வரவேற்பறை

190.

விகடன் வரவேற்பறை

தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு எழுத்தாளர்களும் இளையராஜா, சிவகுமார் என்ற இரு திரை ஆளுமைகளும் எழுதிய கடிதங்களின் தொகுப்பு. கடிதங்களின் வழி அக்கால இலக்கிய உரையாடல்களை அறிந்துகொள்வதோடு, ஒவ்வொரு வட்டாரத்துக்குமான உணவு வகைகள் உள்ளிட்ட கலாசாரக்கூறுகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. பெண் எழுத்தாளர் அம்பையின் கடிதத்தின் மூலம் ஒரு புராஜெக்ட்டுக்காக கன்னியாகுமரி, நெல்லை மாவட்டப் பெண்களைச் சந்திக்க அவர் பயணப்பட்டது பதிவாகியுள்ளது. 'நவீன’ எழுத்தாளர்களுக்குள்ளும் எப்படி பழமைவாதம் உறைந்துபோயிருக்கிறது என்பதற்கு சுந்தரராமசாமி முதல் ஜெயகாந்தன் வரை 60-களிலேயே 'நமஸ்காரம்’ என்று கடிதத்தை ஆரம்பிப்பதும் நகுலன் 'ஸ்ரீராயங்கல - கி.ராஜநாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர் அவர்களுக்கு’ என்று சாதிப் பெயரை விளித்துக் கடிதம் எழுதியிருப்பதும் உதாரணங்கள்!

Brian's Gandhi  இயக்கம்: ராம் ஜே சரவணன்

விகடன் வரவேற்பறை

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த ஒரு தந்தை, மகளுக்கு நம் நாடு மிகவும் பிடித்துப்போகிறது! ஆனால், பழைய பேப்பர் கடையில் கவனிப்பாரற்றுக்கிடக்கும் உடைந்த காந்தி சிலை இருவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறது. அந்த வெளிநாட்டுக்காரர் காந்தி சிலையை விலை கொடுத்து வாங்கி, பள்ளிக்கூடம் ஒன்றில் வைக்கிறார். 'எல்லா பள்ளிகளிலும் காந்தி சிலை இருக்க வேண்டும்!’ என்ற செய்தியுடன் முடிகிறது படம். சிம்பிள் படம்தான். ஆனால், அலெக்ஸின் துல்லியமான ஒளிப்பதிவும் பத்மனின் பின்னணி இசையும் கவனம் ஈர்க்கிறது!

மதுரேய்...  http://maduraivaasagan.wordpress.com

விகடன் வரவேற்பறை

மதுரை மீது தீராக் காதல்கொண்ட ஒருவரின் வலைப் பதிவுகள். மதுரையின் சித்திர வீதிகள் பற்றிய பதிவு ஆகட்டும், 'பஞ்சபாண்டவ மலையில் பசுமைநடைக் குறிப்புகள்’ எனும் பதிவாகட்டும், 'அரிட்டாபட்டி மலை ஏன் பாதுக்காக்கப்பட வேண்டும்?’ என்கிற பதிவாகட்டும் அனைத்திலும் வாசகனோடு நேரடியாக உரையாடுவதைப் போன்ற வசீகர மொழிநடை!  

 ஒவ்வொரு மனிதரும் நண்பரே!   www.people-communicating.com

விகடன் வரவேற்பறை

பிறருடன் எப்படிப் பழகுவது என்று சொல்லித் தரும் தளம். கேட்கும் திறனை வளர்த்துக்கொள்வது எப்படி, பணியிடங்களில் எவ்வாறு மற்றவருடன் தொடர்பு கொள்ள வேண்டும், நேர்முகத் தேர்வில் பின்பற்ற வேண்டிய டிப்ஸ் எனப் பல தளப் பழக்கங்கள் இங்கே நிரம்பிக்கிடக்கின்றன!

நண்பன்  இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வெளியீடு: ஜெமினி ஆடியோ  விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

ஹாரிஸ்-ஷங்கர் கூட்டணியின் இரண்டாவது ஆல்பம்! நட்புக்குக் கொடி பிடிக்கிறது க்ரிஷ், சுஜித் சுரேஷன் குரல்களில் ஒலிக்கும் 'என் ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான்’ பாடல். 'தோழனின் தோள்களும் அன்னைமடி... அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள்கொடி’ என விவேகாவின் வரிகள் ஒவ்வொன்றும் ஃப்ரெண்ட்ஷிப் பொக்கே! 'ஹார்ட்டிலே பேட்டரி’ பாடல் நா.முத்துக்குமாரின் பாசிட்டிவ் வார்த்தைகளால் ஃபுல் பேட்டரி சார்ஜ் ஏற்றுகிறது. பன்மொழிக் காதல் பேசும் 'அஸ்க் லஸ்கா’ பாடலில் 'தே ஜா வூ, ப்ளூட்டோ, நாடிமானி, வைரஸ் இல்லா கணினி, வளைகோடு’ என 'சயின்ஸ்’ வார்தைகளைக் கோத்து இளமைக்கு அணி சேர்க்கிறார் கவிஞர் கார்க்கி! ஆலாப் ராஜு குரலில் ஏகாந்தமாய் ஒலிக்கும் 'எந்தன் கண் முன்னே...’ பாடல் ஸ்வீட் மெலடி. பா.விஜய்யின் குறும்பு வரிகளில் 'இருக்காண்ணா இடுப்பிருக்காணா’ செம 'கிக்’குங்விணா. 'ஆல் இஸ் வெல்’ ஆல்பம்!