2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

2019-ல கெத்தா வர்றோம்!

2019-ல கெத்தா வர்றோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
2019-ல கெத்தா வர்றோம்!

சினிமா

இப்போதே அதிகமும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் 2019 ரிலீஸ்களின் சின்ன சின்ன ட்ரைலர்கள் இங்கே...

Game of thrones Season 8 

2019-ல கெத்தா வர்றோம்!

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக ஓர் ஆச்சர்யத்தைத் தக்க வைத்து வருகிறார் ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்டின். இன்னும் சொல்லப்போனால், 1996-ம் ஆண்டு வெளியான முதல் புத்தகத்தில் இருந்தே ரசிகர்கள் இந்த சீரிஸின் முடிவிற்காகக் காத்துக்கிடக்கிறார்கள். தொடர் தொடங்கியபோது, கத்துக்குட்டிகளாக அதில் நடிக்கத் தொடங்கியவர்கள் எல்லாம் தற்போது ஹாலிவுட்டின் சிம்டாங்காரனாகிவிட்டார்கள். சோஃபி டர்னர், மைஸி வில்லியம்ஸ், எமிலியா கிளார்க், பீட்டர் டிங்க்லேஜ், கிட் ஹாரிங்டன் என, தொடர் ஆரம்பத்தில் மூன்றாம் லெவலில் இருந்த கதாபாத்திரங்கள்தாம் தற்போது அரியணை நோக்கி நகர்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் சிம்மசொப்பன செர்ஸியாக லீனா ஹெடி. ஏழு சாம்ராஜ்யங்கள், ஓர் அரியணை. இதுதான் கேம் ஆஃப் த்ரோன்ஸ். இதுமட்டுமா என்றால்... இல்லை. சாம்ராஜ்யங்களுக்குள் நிகழும் சர்ச்சைகள், சண்டைகள், கொலைகள், பழிதீர்த்தல்கள்... இவை அனைத்தையும் ரத்தம் தெறிக்கத் தெறிக்கச் சொல்லும் கதை இது. ‘ஏ’ கன்டென்ட்டும் எக்கச்சக்கம்.  சென்ற ஆண்டு வெளியான ஏழாவது சீஸன், பனிமனிதர்களான நைட் வாக்கர்ஸின் கை ஓங்குவதோடு முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இறுதி சீஸனுக்கு இப்போதிருந்தே நகம் கடித்துக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

2019-ல கெத்தா வர்றோம்!

Manikarnika: The Queen of Jhansi

நா
டாண்ட ராஜாக்களின் வரலாற்றை மிகைப்படுத்தி உணர்ச்சிமிகு பயோபிக்குகளாக மாற்றிக் கல்லாகட்டுகின்றன பாலிவுட்டும், டோலிவுட்டும். அவை கொடுத்த உற்சாகத்தில் இப்போது `மணிகர்ணிகா’ மூலம் தேசிங்கு ராணிகளின் பக்கம் கரை ஒதுங்கியிருக்கிறார்கள். ஜான்சி ராணி லக்ஷ்மிபாயின் பயோபிக்தான் மணிகர்ணிகா. கதையையும் திரைக்கதையையும் பாகுபலியின் பிதாமகன் விஜயேந்திர பிரசாத் பார்த்துக்கொள்ள, இயக்கத்தை வானம், மகாநடி படங்களை இயக்கிய க்ரிஷ் கவனித்துவந்தார். சில பிரச்னைகளால் க்ரிஷ் விலகிக்கொள்ள, இயக்கமும் கங்கனாவின் பொறுப்பு இப்போது. அவரின் உழைப்பு ஒவ்வொரு போஸ்டரிலும் தெரிகிறது. கதிகலங்க வைக்கும் டிரெய்லரும் வைரல் ஹிட். வரும் ஜனவரி 25-ம் தேதியன்று வெளியாகவிருக்கிறது மணிகர்ணிகா.

2019-ல கெத்தா வர்றோம்!

Spiderman:Far from Home

றைந்த காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் ஸ்டேன்லிக்கு மிகவும் பிடித்த ஸ்பைடர்மேன் ஹீரோ, டாம் ஹோலண்டுதான். அவர் நடித்த ஸ்பைடர்மேன் முதல் பாகமான ‘ஹோம்கம்மிங்’ 150 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாராகி 900 மில்லியன் டாலர் லாபம் ஈட்டி மார்வெல்லுக்கு 2017-ன் ஜாக்பாட்டை அளித்தது. அதன் இரண்டாம் பாகம் 2019-ல் ரிலீஸாக ரெடியாகிவருகிறது. அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாரில் மாயமான ஸ்பைடர்மேன் இதில் எப்படி வருவார் என யோசிக்கிறீர்களா? கதைப்படி, அவெஞ்சர்ஸ்: எண்டு கேமிற்குப் பிறகு ஸ்பைடர்மேன் சந்திக்கும் பிரச்னைகள்தான் படமாம். இதைச் சொன்னதன் மூலம் அவெஞ்சர்ஸ் நான்காவது பாகத்தில் ஸ்பைடர்மேன் திரும்ப வந்துவிடுவார் என்ற ஓப்பன் சீக்ரெட்டை அதிகாரபூர்வமாக உறுதிசெய்துள்ளது மார்வெல்.

2019-ல கெத்தா வர்றோம்!

Dark Phoenix

ஹா
லிவுட் சீரிஸ் படங்களில் அதிகம் குழப்பியடிப்பது எக்ஸ்மேன் படங்களின் டைம்லைன்தான். இதுவரை வெளியாகியுள்ள  ஒன்பது பாகங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பவை. சில பாகங்களில் முதன்மைக் கதாபாத்திரமான சார்லஸ் சேவியராக பேட்ரிக் ஸ்டீவர்ட் நடித்திருப்பார், சில பாகங்களில் ஜேம்ஸ் மெக்வாய் அந்த ரோலில் வருவார். இந்தக் கேரக்டர் குழப்பங்கள் போதாதென டைட்டில்களிலும் ஜிலேபி சுற்றும் இந்தப் படங்களைத் தயாரிக்கும் நிறுவனமான ஃபாக்ஸ் மார்வெல். உதாரணம் - Days of Future Past. இது கடந்தகாலக் கதையா, எதிர்காலத்தில் நடக்கும் கதையா என டைட்டில் பார்த்தே திணறிப்போனார்கள் எக்ஸ்மேன் வெறியர்கள். இந்த வரிசையில் அடுத்ததாக, வரும் ஜூன் மாதம் வெளியாகவிருக்கிறது டார்க் ஃபீனிக்ஸ். இதில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் புகழ் சோஃபி டர்னர்தான் முதன்மைக் கதாபாத்திரம்.  ‘X-Men: Apocalypse’ காலகட்டத்திலிருந்து பத்தாண்டுகளுக்குப் பின் நடக்கும் கதை இது. வழக்கம்போல ‘திஸ் ஈஸ் த எண்டு’ என்னும் பல்லவியை மீண்டும் பாடுகிறது டார்க் ஃபீனிக்ஸ். ஆனால், இப்போதைக்கு எண்டு இல்லை என்பதுதான் நிஜம்.

2019-ல கெத்தா வர்றோம்!

Once Upon a Time in Hollywood

சி
னிமாவை நேசிக்கும் அனைவருக்கும் பிரியமான ஒரு பெயர் `குவென்டின் டொரன்டினா’. ஆனால், இத்தனை பேரால் கொண்டாடப்படும் இயக்குநரோ, ‘10 படங்களோடு என் சினிமா வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிடுவேன்’ என அறிவித்துவிட்டார். அவரின் ஒன்பதாவது படம் இது. அவரோடு ஏற்கெனவே பணியாற்றிய அனுபவமுள்ள டிகாப்ரியோ, பிராட் பிட் இருவரும்தான் இந்தப் படத்தின் ஹீரோக்கள். 1960களில் மேன்சன் ஃபேமிலி என்னும் கல்ட் குழு, பிரபல இயக்குநர் ரோமன் பொலன்ஸ்கியின்  மனைவி ஷாரோன் டேட்  மற்றும் சில பிரபலங்களைக் கொடூரமாகக் கொன்றனர். அந்த உண்மைச் சம்பவத்தைத்தான் தன் ஸ்டைலில் உருவாக்கி வருகிறார் டொரன்டினோ. கொலையான  நடிகை ஷாரோன் டேட்டாக மார்கட் ராபி நடிக்கிறார். ப்ரூஸ் லீ கதாபாத்திரத்தில் மைக் ஹோ என்பவர் நடிக்கிறார். படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகவிருக்கிறது.

2019-ல கெத்தா வர்றோம்!

Pokemon Detective  Pikachu

ப்போ பப்ஜி போல், இரண்டாண்டுகளுக்கு முன் கேமர்களை சாலையில் வாக்கிங் போக வைத்த கேம் போக்கிமான். ‘பிக்காச்சூ பிக்காச்சூ’ என சென்னையின் சர்ச்சைக்குரிய ஏரியாக்களிலும் அசால்ட்டாக கால் பதித்து ஏழரையைக் கிளப்பினார்கள் கேமர்ஸ். மொபைலில் இருக்கும் எமோஜியையே படமாக எடுக்கும் ஹாலிவுட்டுக்கு, போக்கிமான் போல் கொலுக் மொழுக் லட்டு கிடைத்தால் சும்மா இருக்குமா? துப்பறியும் கதை ஒன்றை ரெடி செய்து மே மாத ரிலீஸுக்கும் தயாராகிவிட்டது வார்னர் பிரதர்ஸ். ஒரு கார் விபத்தில் துப்பறிவாளரான ஹேரி குட்மேன் காணாமல்போக, அவரைத் தேடி அலைகிறான் அவர் மகன் டிம் குட்மேன். அவனுக்குத் துணையாகத் தேடுதல் வேட்டையில் உதவுவது துப்பறிவாளரான பிக்காச்சூ. `டெட்பூல்’ ரியான் ரொனால்ட்ஸ் குரலில் அது அடிக்கும் லூட்டிகளும், வசனங்களும்தான் படத்தின் ஹைலைட்.

2019-ல கெத்தா வர்றோம்!

Avengers End game

டீ
சரில் விண்வெளியில் இருக்கும் அயர்ன்மேன் தன் நிலை பற்றி ஒரு வீடியோ வெளியிடுகிறான். நிஜத்தில் நாசாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் அக்கவுன்ட், அதற்குப் பதில் அனுப்புகிறது. மார்வெல் அவெஞ்சர்ஸ் படங்களின் தாக்கம் அத்தகையது. சூப்பர்ஹீரோ படம் என்றால் சுபமாகத்தான் முடிய வேண்டும் என்பதை மாற்றியமைத்த முதல் படம் அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார். சூப்பர்ஹீரோக்கள் எல்லாரும் மண்ணைக் கவ்வ, தேனோஸின் வெற்றியுடன் கேப்டன் மார்வெல்லைக் கைகாட்டி முடிந்தது முதல் பாகம். வரும் ஏப்ரல் மாதம், அதன் சீக்வெல் வெளியாக இருக்கிறது. மூன்றாவது பாகத்தில் இருக்கும் கதாபாத்திரங்களோடு ஹாக் ஐ, கேப்டன் மார்வெல், ஆன்ட் மேன் என இன்னும் ஏராளமான நட்சத்திரப் பட்டாளம் சேரவிருப்பதால். ஏப்ரலில் ‘ஹேப்பி தீவாளி ஃபோக்ஸ்’ சொல்ல வருகிறது அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்.

கார்த்தி