2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

சிலுக்குவார்பட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்

சிலுக்குவார்பட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிலுக்குவார்பட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்

சிலுக்குவார்பட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்

ரு `ஆஃபாயில்’ எப்படி சில்வண்டை சிங்கமாக மாற்றுகிறது என்பதுதான் சிலுக்குவார்பட்டி சிங்கத்தின் ஒன்லைன்.

என்வுகவுட்டருக்கு அஞ்சி தலைமறைவாக இருக்கும் பயங்கரமான ரவுடி சாய்ரவி. அவருக்கு அரசியல்வாதி ஒருவரை தீர்த்துக்கட்டுகிற அசைன்மென்ட். அவருடைய போட்டுத்தள்ளும் ப்ளானில் ஆன்திவேயில் நாயகன் விஷ்ணு விஷாலுடன் ஏற்படும் ‘ஆஃபாயில்’ மோதலில் மீண்டும் லாக்கப்புக்குள் செல்கிறார். விஷ்ணுவிஷாலை கொலைவெறியோடு சாய்ரவி துரத்த, நாயகன் பல கெட்டப்புகள் போட்டு லாகவமாக தப்பிக்கிற சிரிப்பு எபிசோட்கள்தான் சிங்கத்தின் மிச்ச சொச்சம்!

சிலுக்குவார்பட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்

லாஜிக் பற்றியெல்லாம் கவலையில்லாமல், பரபரப்பான சேஸிங் கதையை காமெடி டெம்ப்ளேட்டில் கலகலப்பாக தர முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் செல்லா அய்யாவு.

கான்ஸ்டபிள் சத்யமூர்த்தியாக விஷ்ணு விஷால். ராட்சசனில் சீரியஸ் போலீஸ் இதில் சிரிப்பு போலீஸ். பலவித கெட்டப்களில் பளிச் என நடித்திருக்கிறார்.  முறைப்பெண் ராஜியாக ரெஜினா கஸான்ட்ரா. அழகாக க்யூட்டாக வருகிறார். சைக்கிள் சங்கராக சாய் ரவி. ஒட்டாத தாடியுடன் ஒரு கெட்டப், க்ளீன் ஷேவில் ஒரு கெட்டப் என டபுள் கெட்டப்பில் மிரட்டுகிறார். தன் ஒன்லைனர்களால் வழக்கம்போல்

சிலுக்குவார்பட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்

சிரிக்கவைத்திருக்கிறார் யோகிபாபு. ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், கருணாகரன், சிங்கமுத்து, லொள்ளு சபா மனோகர் என காமெடி நடிகர் சங்கத்தையும் மொத்தமாக கூட்டியிருக்கிறார்கள். `பிக்பாஸ்’ ஓவியாவும் இருக்கிறார், ஒரு பாட்டுக்கு மட்டும்!

கல்யாண வீடு, உருட்டுக்கட்டை, சாக்குமூட்டை, டாடா சுமோ, ஜில்ஜில் பார், செல்போன் ஆதாரம், மாறுவேடம் என ஏராளமான காமெடி பட விஷயங்கள். ஆனால், காமெடிகள்தான் குறைவு. பாட்ஷா, கேப்டன் பிரபாகரனை வைத்து ஆனந்த ராஜுக்கும், மன்சூர் அலிகானுக்கும் பிடித்திருக்கும் ரீவண்ட் காட்சிகள் ரோபல்ஸ்!

லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்களும், அரேபிய மொழியில் வரும் பின்னணி இசையும்... டெம்போ கூட்டியிருக்கலாம்ஜி. ஜாலிமூடுக்கு ஜம்மென்று செட் ஆகிறது ஜே.லக்ஸ்மன் கேமரா.

காமெடி நடிகர்களை விரட்டி விரட்டி டீம் சேர்த்தவர்கள், காமெடி காட்சிகளையும் நிறைய சேர்த்திருந்தால், சிலுக்குவார்பட்டிக்கு சிறப்பு சேர்த்திருக்கலாம்!

 - விகடன் விமர்சனக் குழு