2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

மாரி 2 - சினிமா விமர்சனம்

மாரி 2 - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மாரி 2 - சினிமா விமர்சனம்

மாரி 2 - சினிமா விமர்சனம்

க்ஸ்ட்ரா குசும்பு, எக்ஸ்ட்ரா சேட்டை, எக்ஸ்ட்ரா சண்டை என லோக்கல் டானின் அப்கிரேடட் வெர்ஷனாக வந்தி ருக்கிறார் மிஸ்டர் மாரி!

மாரி 2 - சினிமா விமர்சனம்

ஏரியாவின் ரகளை பேபியான தனுஷின் நெருங்கிய தோஸ்து கிருஷ்ணா. மாரியின் தாதாயிசத்தால் பாதிக்கப்படும் டொவினோ தாமஸ், பழிக்குப் பழி வாங்க இவர்களுக்குள் சண்டை மூட்டிவிடுகிறார். இருந்த ஒரே நண்பனையும் இழந்துவிட்டதால் தனுஷ் ஒதுங்கிக்கொள்ள, ஜம்மெனப் பறக்கிறது டொவினோவின் கொடி. அதோடு நிறுத்தாமல் திரும்பவும் அவர் மாரியைச் சீண்ட, மாஸாக கம்பேக் கொடுத்து, சீண்டியவர்களை எல்லாம் வரிசையில் நிற்க வைத்து செய் செய் எனச் செய்கிறார் மாரி 2.0!

தனுஷிடமிருந்து எனர்ஜியை லாரி லாரியாக அள்ளிப் போட்டு எடுத்துப்போகலாம் போல! ஒவ்வொரு சீனிலும் மாரி ராஜ்ஜியம்தான். ‘என்னாடா’ என ஒருமாதிரியாகவும், ‘என்னா சொல்றீங்க’ என இரண்டாம் பாதியில் வேற மாதிரியாகவும் நடிப்பில் மிரட்டுகிறார். சேட்டைக்கார மாரிக்கு ஏற்ற ஜோடி அராத்து ஆனந்திதான். படபட பட்டாசு! நடனம் தொடங்கி எக்ஸ்பிரஷன்ஸ் வரை சாய் பல்லவி செம. ரோபோ சங்கர் -  வினோத் இணையின் ஒன்லை னர்கள் படம் முழுக்க சிரிக்க வைக்கின்றன.

மாரி 2 - சினிமா விமர்சனம்

மலையாள தேசத்தின் லவ்வர் பாய் டொவினோ தாமஸ் மாரி ஏரியாவில் ‘சாவின் கடவுள்.’ நரம்பு தெறிக்கும் உடல், போதை தேடும் கண்கள் என கேரக்டருக்குப் பக்கா பொருத்தம். வரலட்சுமி வழக்கமான ஆபீஸராக வந்துபோகிறார்.

மாரி 2 - சினிமா விமர்சனம்

‘தீம் மியூசிக்ல ராஜான்னா அது நான்தான்’ என மீண்டும் நிரூபித்திருக்கிறார் யுவன். பாடல்களும் அவை படமாக்கப்பட்ட விதமும் சூப்பர். அதுவும் ‘ரவுடி பேபி’ கொரியோகிராபி பிரபுதேவாவின் டிரேடுமார்க் கலாட்டா! ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கலர்ஃபுல் விருந்து. 

முதல் பாகத்தில் மிஸ்ஸான கதையை, தேடி எடுத்துக் கொடுத்திருக்கிறார் பாலாஜி மோகன். ‘மாரி கெத்து’ மியூசிக் போல தடதடக்கும் திரைக்கதையும் ப்ளஸ். ஆனால், ட்விஸ்ட்டுகளில் இருக்கும் லாஜிக் குறைபாடுகள் படம் பார்க்கும்போதே பளிச்செனத் தெரிவதால் இரண்டாம் பாதி கொஞ்சம் இழுக்கிறது. ஆங்காங்கே பாட்ஷா சாயல் வேறு!

மாரி 2 - சினிமா விமர்சனம்

தேவையில்லாத பில்டப் காட்சிகளுக்குச் செலவிட்ட எனர்ஜியை, லாஜிக் ஓட்டைகளை அடைக்கச் செலவிட்டிருந்தால் இந்த லோக்கல் ரவுடி அடுத்த லெவல் டானாகியிருப்பார்!

- விகடன் விமர்சனக் குழு