2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

சீதக்காதி - சினிமா விமர்சனம்

சீதக்காதி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சீதக்காதி - சினிமா விமர்சனம்

சீதக்காதி - சினிமா விமர்சனம்

‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்ற கண்ணதாசனின் கவிதை வரிகளே ‘சீதக்காதி’யின் கதை.

சீதக்காதி - சினிமா விமர்சனம்

தமிழ் நாடகத்துறையின் ஆணிவேர் ‘அய்யா ஆதிமூலம்.’ இறுதிவரை மக்கள் முன் நேருக்கு நேர் நின்று நடித்துக்காட்டிக் கைத்தட்டல்கள் வாங்குவதில்தான் அவருக்கு விருப்பம். ஒருநாள் அவரை மரணம் ஆட்கொள்கிறது. கலைமீதான தன் தீராக்காதலைத் தணித்துக்கொள்ளவும் பொருளாதார ரீதியாகத் தத்தளிக்கும் குடும்பத்தைக் காப்பாற்றவும் வெவ்வெறு மனிதர்கள் உடலில் புகுந்து அவர் சினிமாவில் நடிக்கத் தொடங்க, பரபரப்பாகிறது தமிழகம். கலையம்சமும் காமெடியுமாகக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன்.

சீதக்காதி - சினிமா விமர்சனம்

விஜய் சேதுபதிக்கு இது பெருமிதப் படம். கலைத்தாகத்தையும் முதுமையின் நடுக்கத்தையும் இயலாமையின் பரிதவிப்பையும் முழுமையாகக் கொண்டுவந்திருக்கிறார். வெறும் நாற்பது நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் அவரின் தாக்கம் படம் முழுக்கவே பரவியிருக்கிறது. ‘கட்’ இல்லாத எட்டு நிமிடக் காட்சியில் மனிதரின் கண் பாப்பாக்கள்கூட அப்படி நடிக்கின்றன.

சீதக்காதி - சினிமா விமர்சனம்



அர்ச்சனா, மைக்ரோ அளவு உடல்மொழி மாற்றத்தில்கூட அவ்வளவு நேர்த்தி. ‘சீதக்காதி’யின் பெரிய பலம் மெளலியின் அனுபவம் மிக்க நடிப்பு. நாடகக் கலைஞர்களின் நடிப்பு கிளாசிக். நடிக்கத் தெரியாததைப்போல் நடிப்பதில் ராஜ்குமாரும் சுனிலும் அசத்தியிருக்கிறார்கள். சரஸ்காந்தின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு ஃப்ரேமுமே ஒரு குட்டிக்கதை சொல்கிறது. படத்தை டைட்டில் கார்டு முதல் தாங்கிப்பிடிப்பது கோவிந்த் வஸந்தாவின் மந்திரவிரல்கள். படத்தின் நீளம் அயர்ச்சியை உண்டாக்குவதால் எடிட்டர் கோவிந்தராஜ் இன்னமும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

ஆவி நடிப்பதை எந்தக் கேள்வியுமின்றி ஒட்டுமொத்தத் தமிழகமுமே நம்புவது, ‘சிறந்த நடிகர்’ விருது கொடுப்பது, நீதிமன்றக் காட்சி, தொலைக்காட்சி விவாதம் ஆகியவை நம்பகத்தன்மையைக் குறைக்கின்றன. அதேபோல் நகைச்சுவைக் காட்சிகள் என்றாலும் மீண்டும் மீண்டும் ஒரேமாதிரியான காட்சிகளைக் காண்பது சலிப்பு. 

சீதக்காதி - சினிமா விமர்சனம்

‘கலைக்கும் கலைஞர்களுக்கும் மரணமில்லை’ என்ற மையக்கருத்துக்காக ‘சீதக்காதி’ அய்யாவை வரவேற்கலாம்.

- விகடன் விமர்சனக் குழு