2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

மன்னா கடைசியாக நடித்து வெளியான தெலுங்குப் படம் ‘நெக்ஸ்ட் ஏன்ட்டி?’. படத்தில் போல்டான வசனங்கள் பேசியும் வித்தியாசமாக நடித்துமிருந்தார் தமன்னா. இந்தப்படம் வெற்றியடையும் என்று எதிர்பார்த்தவருக்கு மிகப்பெரிய ஏமாற்றம். `படத்தின் தோல்விக்கு தெலுங்கானா தேர்தல்தான் காரணம்’ என்று இப்போது காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறார். நெக்ஸ்ட் வெற்றிதான்!

இன்பாக்ஸ்

டிகர் சயீஃப் அலிகானின் மகள் சாரா அலி கான். இவர், சமீபத்தில் காபி வித் கரன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்திக் ஆர்யானை டேட்டிங் செய்ய விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். இருவரையும் ‘லோக்மாத் ஸ்டைலிஷ் அவார்ட்ஸ்-2018’ நிகழ்ச்சியில் சந்தித்த ரன்வீர் சிங் கார்த்திக் ஆர்யானை சாராவுக்கு அறிமுகப்படுத்தி வைக்க, இப்போது இருவரும் சிநேகிதர்களாகிவிட்டார்கள்!. இருவரையும் ரன்வீர் சிங் கைகோக்க வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. கை கோக்கும் கை!

‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராஜமெளலியின் அடுத்த பிரமாண்டமான படத்தில் தெலுங்கின் முன்னணி நாயகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சமுத்திரக்கனி கமிட்டாகியிருக்கிறார். ‘பாகுபலி’ கட்டப்பா கதாபாத்திரம் போல் சமுத்திரகனியின் ரோலும் செம்மயாக இருக்குமாம்! வெயிட்டப்பா!

இன்பாக்ஸ்

தயநிதியோடு ‘சைக்கோ’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். இதை முடித்ததும், அடுத்து ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கான கதையை  எழுதிக் கொண்டிருக்கிறாராம். இதிலும் விஷாலே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.  கணியன் ரிட்டர்ன்ஸ்!

இன்பாக்ஸ்

மும்பையைச் சேர்ந்த ஹமீத் நிஹால் அன்சாரி என்பவர் முகநூல் வழியாக பாகிஸ்தான் பெண் ஒருவரை காதலித்துள்ளார். அப்பெண்ணிற்கு வீட்டில் கட்டாயத் திருமணம் செய்து வைப்பதி லிருந்து அவரைக் காப்பாற்ற வேண்டுமென்று பாகிஸ்தான் சென்றிருக்கிறார். ஆனால், அவரை சந்திப்பதற்கு முன்பே அன்சாரி சந்தேகத்தின் பெயரில் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பிறகு அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மும்பையிலுள்ள தனது வீட்டிற்கு வந்திருக்கிறார். ‘முகநூல் மூலம் காதலில் விழாதீர்கள். உங்களது பெற்றோர்களிடமிருந்து எதையும் மறைக்காதீர்கள். தவறான முறைகளை பின்பற்றி எந்தவொரு இடத்திற்கும் செல்ல முயற்சி செய்யாதீர்கள்” என்று கூறியுள்ளார். நோட் பண்ணுங்க பாய்ஸ்!

இன்பாக்ஸ்

டைம் பத்திரிகை வெளியிட்ட ‘25 செல்வாக்குமிக்க டீனேஜர்கள் 2018’ பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று டீனேஜர்கள் இடம் பிடித்திருக்கின்றனர். இதில் எட்டாவது படிக்கும் ரிஷப் என்பவர் கணைய புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த காவியா கோப்பரப்பு என்பவர் மூளைப் புற்றுநோயைக் கண்டறியும் கம்பயூட்டர் புரோகிராம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இது பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் இருக்கும் திசுவின் நிறம், அடர்த்தி, அமைப்பு ஆகியவற்றைத் துல்லியமாகக் காட்டுமாம். அமிகா ஜார்ஜ், மாதவிடாய் நேரத்தில் நாப்கின்கள் வாங்க இயலாத பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உதவும் வகையில் தனி கொள்கை ஒன்றை அரசு உருவாக்கி அதன் மூலம் அவர்களைப் பயன்பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். வாழ்த்துகள் பிரண்ட்ஸ்!

இன்பாக்ஸ்

ந்திர சூப்பர் ஸ்டார் என். டி.ஆரின் பயோபிக் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. என்.டி.ஆராக அவதாரம் எடுப்பதுடன் படத்தை தயாரித்தும் உள்ளார் என்.டி.ஆரின் வாரிசு பாலகிருஷ்ணா. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் ஆந்திர மக்களை அசரடித்திருக் கிறது. படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவா தரகமாக நடித்திருக்கிறார் வித்யா பாலன். அவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படமென்பதால் வித்யாபாலன்  ரசிகர்கள் ‘என்.டி.ஆர்’க்காக வெயிட்டிங்.  வெல்கம் வித்யா!