சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

குட்பை 2018 - சினிமா

குட்பை 2018 - சினிமா
பிரீமியம் ஸ்டோரி
News
குட்பை 2018 - சினிமா

குட்பை 2018 - சினிமா

குட்பை 2018 - சினிமா

Jurassic World:Fallen Kingdom

கி
ட்டத்தட்ட 60 சதவிகித காட்சிகளையும் டைனோசர்களை வைத்தே விளையாடியிருந்தார்கள். ப்ளூவாகத் தோன்றும் கடைசி வெலாசிரேப்டர் (Velociraptor) செய்த அட்டகாசங்கள் இன்னமும் கண்முன்னே நிற்கின்றன. தன்னைவிடப் பெரிய மிருகத்தை தைரியமாக எதிர்த்து நின்ற ப்ளூ, ஒரு மாஸ் ஹீரோதான்!

குட்பை 2018 - சினிமா
குட்பை 2018 - சினிமா

Ready Player One

கே
ம்ஸ் பற்றிய 3D படம். 2045-ம் வருடத்தில் மக்களின் வாழ்க்கை முறையோடு இணைந்துவிடுகிறது OASIS என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி கேம். அதில் வெற்றிபெறுபவர்கள்தாம் அந்த கேமிங் உலகத்துக்கே ராஜா. நாம் பார்த்து மகிழ்ந்த கிங்காங், டைனோசர் உள்ளிட்ட விலங்குகள், பழைய சூப்பர்ஹிட் படங்கள் எல்லாவற்றையும் திணித்து உற்சாகமூட்டிய படம்.

குட்பை 2018 - சினிமா

Ralph Breaks the Internet

ழைய படங்களைக் கிண்டல் செய்து புதிய படத்தை விற்கும் ஸ்டைலில், அனிமேஷன் வகையே இந்த Ralph Breaks The Internet. கூகுள், யூடியூப், இன்ஸ்டாகிராம் எல்லாவற்றையும் கலாய்த்தனர். ஸ்டேன்லீ, அயர்ன்மேன், ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரங்கள், டிஸ்னி படங்களின் இளவரசிகள் எனக் கதைக்குள் புகுத்தி நம்மை திக்குமுக்காட வைத்தார்கள்.

The Grinch

ஹு
வில்லி நகரம், கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கோலாகலமாக கொண்டாடத் தயாராக, அதைத் தடுத்து நிறுத்த கிளம்புகிறது, க்ரின்ச். ‘How the Grinch Stole Christmas!’ புத்தகத்தை ஒரு சூப்பர் அனிமேஷன் படமாக மாற்றிவிட்டார்கள். க்ரின்ச்சுக்கு முகபாவனை, உடல்மொழி, குரல் கொடுத்தது யார் தெரியுமா? நம் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்’ பெனிடிக்ட் கம்பர்பேட்ச்.

குட்பை 2018 - சினிமா

Black Panther - ஷ்யூரி

16
வயதுதான் ஷ்யூரிக்கு. வயதுக்கு மீறிய அறிவு. இன்று புதிதாக என்ன செய்யலாம் என்றே யோசிப்பவள். நிறத்தால் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள். தன் செயல்களால் அவளைப் போன்றோர்களுக்கு ரோல்மாடல் ஆகிறாள். பிளாக் பேந்தரான அண்ணனுக்கு இவள்தான் பக்கபலம். பிரச்னை என்றால் களத்தில் இறங்கி சண்டையிட்டும் நம்மை கவர்ந்தாள் ஷ்யூரி.

குட்பை 2018 - சினிமா

Spider-Man: Into the Spider-Verse - மைல்ஸ் மோரல்ஸ்

6 ஸ்
பைடர்கள் அசத்திய படம். அதில், அதிகம் கவர்ந்தது, மைல்ஸ் என்ற குட்டி ஸ்பைடர்மேன். தன்னிடம் உள்ள சூப்பர் பவரால் மக்களுக்கு உதவும் மைல்ஸ். குழப்பம், சந்தேகம், உற்சாகம், சோகம் என எதிர்கொள்ளும் ஒவ்வொரு தருணத்தையும் கையாண்ட விதம் க்ளாப்ஸ் ரகம்.

Incredibles 2

2004-ம்
ஆண்டில் ஆஸ்கர் வென்ற அனிமேஷன் படத்தின் இரண்டாம் பாகம். எலாஸ்டிக் கேர்ள் உலகைக் காக்கும் வேலை. தன் சூப்பர் ஹீரோ கணவனை, குழந்தையைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, அசைன்மென்ட்டுக்குச் செல்கிறாள், எலாஸ்டிக் கேர்ள். காமெடி, குட்டிக் குழந்தையின் குறும்பு என அதகளம் செய்த படம்.

குட்பை 2018 - சினிமா

Avengers: Infinity War - ஸ்பைடர்மேன்

பு
திய மார்வெல் (Spiderman: Homecoming) ஸ்பைடி எனும் பீட்டர் பார்க்கருக்கு வயது 15. ஸ்கூலுக்குச் செல்கிறான். தவறுகள், குற்றங்கள் நிகழும்போதெல்லாம் தடுக்க அஞ்சியதே இல்லை. எல்லா சூப்பர் ஹீரோக்களும் ஒன்று கூடும் ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ படத்தில் ஊருக்கு ஓர் ஆபத்து என்றதும், எதற்கும் தயங்காமல் யுத்தத்துக்கு தயாரான பீட்டர் பார்க்கர் நமக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்.

Fantastic Beasts: The Crimes Of Grindelwald - ஆல்பஸ் டம்பிள்டோர்

‘ஆ
ல்பஸ் டம்பிள்டோர்’ என்றாலே, ‘ஹாரி பாட்டர்’ படங்களில் வரும் பிரின்ஸிபால் தாத்தா நினைவுக்கு வருவார். ‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்’ படங்கள் அதற்கு முன்பாக நடக்கும்  கதை என்பதால், இளவயது டம்பிள்டோரை காட்டியிருக்கிறார்கள். அதே அறம் சார்ந்து இயங்கும் டம்பிள்டோராக, அரசையே எதிர்த்து இயங்கி் அசத்தினார் ஜூட் லா.

ர.சீனிவாசன்