தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

விளையாட்டு புள்ள! - அவள் சினிமா

விளையாட்டு புள்ள! - அவள் சினிமா
பிரீமியம் ஸ்டோரி
News
விளையாட்டு புள்ள! - அவள் சினிமா

விளையாட்டு புள்ள! - அவள் சினிமா

பெண்களின் `கனா’க்கள், அவர் களுடைய கண்களிலேயே சிதைந்துபோவதுதான் பெரும் பாலும் வாடிக்கை. துளியும் அது சிதைந்துவிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்து, சாதித்துக் காட்டும் ஒரு பெண்ணின் பெருமை பேசுகிறது `கனா’ திரைப்படம். மகளை கிரிக்கெட் வீராங்கனையாக்குவதற்காகப் போராடும் தாய் தந்தை மற்றும் அவர்களுடைய விவசாயம் என அனைத்தையும் நெகிழ்ச்சியோடு

விளையாட்டு புள்ள! - அவள் சினிமா

காட்சிப்படுத்தியுள்ளனர்.

குளித்தலை கிராமத்தில் இருக்கும் சாதாரண விவசாயி சத்யராஜ். ஒரே மகள் ஐஸ்வர்யா ராஜேஷ், அப்பாவுக்கு கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தை உணர்ந்து தானும் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக நினைக்கிறார். சிறுவயதில் ஊரிலிருக்கும் அண்ணன்களுடன் கிரிக்கெட் கற்றுக்கொள்ளும் அவர், பல தடைகளைத் தாண்டி இந்திய அணியில் இடம்பிடிக்க, கடுமையாகப் போராடுகிறார். அதற்காக அவர் சுமக்கும் வலிகள், அதிலிருந்து விடுபட எடுக்கும் முயற்சிகள், வீசப்படும் கேலிகளை உதறித்தள்ளுவதாக நடத்தும் போராட்டங்கள் அனைத்தும் பெண் சமூகம், தான் முன்னேறுவதற்காக ஒவ்வொரு துறையிலும் படும் கஷ்டங்களைக் கண்முன்னே கொண்டு வருகிறது.

விளையாட்டு புள்ள! - அவள் சினிமா

‘வயசுக்கு வராம இருக்கறதால, ஆம்பளைப் பிள்ளைனு ஊர்ல கேலி பேசிட்டு இருக்காங்க’ என்று அம்மா வருந்தும்போது, ‘கண்டதையெல்லாம் சாப்பிட்டு எட்டு, ஒன்பது வயசுல இன்னிக்கு உள்ள பிள்ளைங்க வயசுக்கு வந்துடுது. நம்ம பிள்ளை அப்படியா? தோட்டத்துல விளையுறதை சாப்பிட்டு நல்லா ஆரோக்கியமா இருக்குது. அதெல்லாம் வர வேண்டிய நேரத்துக்குத்தான் வரும்‘ என்று அப்பா கொடுக்கும் பதிலடி, சமூகத்துக்குக் கொடுக்கும் சாட்டையடி.

பெண்கள் இப்போது எத்தனையோ படிகள் முன்னேறிவிட்டார்கள். ஆனால், இன்னும் பல படிகள் காத்திருக்கின்றன கடப்பதற்கு. அந்தப் படிகளில் பெண்கள் தைரியமாக ஏறிச் செல்ல வேண்டும் என்று ‘கனா’ கண்டிருக்கிறார், தயாரிப்பாளராக அவதாரமெடுத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். அதற்காகவே அவருக்கு ஒரு ஹேட்ஸ் ஆப்!

 - துரை நாகராஜன்