Published:Updated:

``மலையாளத்துக்கு பப்ளி ஓகே... ஆனா, தமிழுக்கு..?’’ - அபர்ணா பாலமுரளி

``மலையாளத்துக்கு பப்ளி ஓகே... ஆனா, தமிழுக்கு..?’’ - அபர்ணா பாலமுரளி

``மலையாளத்துக்கு பப்ளி ஓகே... ஆனா, தமிழுக்கு..?’’ - அபர்ணா பாலமுரளி

Published:Updated:

``மலையாளத்துக்கு பப்ளி ஓகே... ஆனா, தமிழுக்கு..?’’ - அபர்ணா பாலமுரளி

``மலையாளத்துக்கு பப்ளி ஓகே... ஆனா, தமிழுக்கு..?’’ - அபர்ணா பாலமுரளி

``மலையாளத்துக்கு பப்ளி ஓகே... ஆனா, தமிழுக்கு..?’’ - அபர்ணா பாலமுரளி

``மலையாளப் படமோ, தமிழ்ப் படமோ அதில் என் கேரக்டர் வலுவாக இருக்கணும். அப்படித்தான் ’மகேஷிண்டே பிரதிகாரம்’, `எட்டு தோட்டாக்கள்’ தொடங்கி இப்போ `சர்வம் தாள மயம்' படம் வரைக்கும் என்னோட கேரக்டரைப் பார்த்துதான் படத்தை செலக்ட் பண்ணிட்டு இருக்கேன்...’’ - தெளிவாகப் பேச ஆரம்பித்தார், `எட்டு தோட்டாக்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி தற்போது ’சர்வம் தாள மயம்’ படத்தின் ரிலீஸுக்காகக் காத்திருக்கும் நடிகை அபர்ணா பாலமுரளி.

`சர்வம் தாள மயம்’ படத்தில் உங்களோட ரோல் எப்படி இருக்கும்..?

``இது ஆசிரியர் மாணவர் உறவைப் பேசுகிற படம்; அதனால் என்னுடைய கதாபாத்திரத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்காது; நான் படம் முழுக்க வர மாட்டேன். நான் சில காட்சிகளில் வந்தாலும் அது படத்துக்கு முக்கியமானதா இருக்கும்; ரசிக்கும்படியாக இருக்கும்.’’

இந்தப் படத்தில் நடித்த அனுபவம்..? 

``எனக்குத் தமிழ் சரியா தெரியாது. என்னோட முதல் தமிழ்ப்படத்தில் ஏதோ பண்ணி சமாளிச்சிட்டேன். ஆனால், இதில் லைவ் ரெக்கார்ட்டிங் பண்ணினாங்க. அதனால், நடிக்கும்போதே நான் சரியான தமிழில் பேசி நடிக்கணும். அது சவாலாகவும் அதே சமயத்தில் கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது. இருந்தாலும், ராஜீவ் மேனன் சாரோட சப்போர்ட்டில் நல்லபடியா நடிச்சி முடிச்சிட்டேன். ஆடிஷனில் இருந்து படம் முடியுற வரைக்கும் எனக்கு ரொம்ப சப்போட்டிவ்வா இருந்தார். பொதுவா ஒரு படத்தோட ஆடிஷனுக்குப் போனால் அங்க இயக்குநர் இருக்க மாட்டார். அவரோட உதவியாளர்தான் நமக்கு ஸ்கீரின் டெஸ்ட் பண்ணுவாங்க. ஆனால், இந்தப் படத்தோட ஆடிஷனில் ராஜீவ் சாரே என்கூட இருந்து ஸ்கீரின் டெஸ்ட் பண்ணினார். என் கேரக்டருக்கு மட்டுமல்ல; எல்லா கேரக்டருக்கும் இப்படித்தான் ஆடிஷன் பண்ணியிருக்கார். இப்படி ஆரம்பத்திலிருந்தே இந்தப் படம் எனக்கு ரொம்ப நெருக்கமான படமா மாற ஆரம்பிச்சிடுச்சு.’’

தமிழ் படங்கள் தொடர்ந்து பார்த்துட்டு இருக்கீங்களா?

``ரஜினி சார்ல இருந்து சூர்யா சார் வரைக்கும் அவங்களோட படங்களெல்லாம் கேரளாவில் வந்துடும். தமிழ்நாட்டுல இருக்கிற மாதிரிதான் இங்கேயும் ஒரே கொண்டாட்டமா இருக்கும். சமீபத்தில் ரிலீஸான `ராட்சசன்’, `96’, `பரியேறும் பெருமாள்’ போன்ற படங்களும் இங்க ஹவுஸ்ஃபுல்லா ஓடுச்சு. நானும் தொடர்ந்து தமிழ்ப் படங்களைப் பார்த்துட்டுத்தான் இருக்கேன்.’’

மலையாள சினிமாவுலகுக்கும் தமிழ் சினிமாவுலகுக்கும் இடையில் ஏதாவது வேறுபாட்டை உணருகிறீர்களா?

``மலையாளம்; எனக்குத் தெரிந்த மொழி, எனக்கு பரீட்சயமான மனிதர்கள்னு எல்லாரும் எனக்கு தெரிஞ்சவங்களா இருக்கிறதால எப்பவுமே ஒரு கம்ப்ர்ட் இருக்கும். ராஜீவ் மேனன் சாரோடு வொர்க் பண்ண படத்துலேயும் நிறைய ஆட்கள் மலையாளிகளா இருந்தாங்க. அதனால, பெருசா ஒரு வித்தியாசமும் தெரியலை. மலையாள சினிமாவுக்கும் தமிழுக்கும் வித்தியாசம் சொல்ற அளவுக்கு இன்னும் நான் படங்கள் பண்ணலை. படம் நிறைய பண்ண பிறகுதான் அது தெரிய வரும்.’’

தமிழ்ப்படங்களில் நடிக்கிறதுக்காக மொழியை கத்துக்கிறதைத் தாண்டி வேறென்ன விஷயங்களை கத்துக்கிட்டிருக்கீங்க..?

``மலையாளப் படங்களில் நடிக்கும்போது நான் எவ்வளவு குண்டா, பப்ளியா இருந்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்; என் இயக்குநர்களும் அதைப் பற்றி எதுவும் சொல்வது இல்லை. ஆனால், நான் தமிழ்ப் படங்களிலோ அல்லது வேற மொழிப் படங்களிலோ கமிட்டாகும்போது, நான் உடம்பைக் குறைக்க வேண்டிய அவசியம் இருக்கு. அதுக்காகத்தான் இப்போ ஜிம்முக்கெல்லாம் போய் உடம்பை குறைச்சிட்டு இருக்கேன். அந்தந்த மொழியைக் கத்துக்கிறதைத் தாண்டி நான் பண்ற விஷயம் இதுதான்.’’

பாடகி அபர்ணா பற்றி..?

``மலையாளத்தில் நிறைய பாடல்கள் பாடியிருக்கேன். தமிழில் `எட்டு தோட்டாக்கள்'லகூட பாடியிருக்கேன். அப்பா,அம்மா இரண்டு பேருமே இசைக்கலைஞர்கள்தான். எதிர்பாராமல்தான் நடிக்க வந்தேன். எப்பவுமே மியூசிக்குக்குதான் முன்னுரிமை கொடுப்பேன்.’’

அடுத்து நடிக்கப்போகும் படங்கள் பற்றி?

``மலையாளத்தில் ரெண்டு படம் ரிலீஸுக்கு இருக்கு. தமிழில் `சர்வம் தாள மயம்' ரீலீஸாக வேண்டியதிருக்கு. இந்தப் படத்தோட ரிலீஸுக்குப் பிறகுதான் மற்ற படங்களில் கமிட்டாகணும்.’’

ME TOO..?

``என்னைப் பொறுத்தவரைக்கும், இப்போ, பேசிட்டிருக்க ME TOO  விஷயங்கள்லாம் ரொம்ப நாளைக்கு முன்னாடி நடந்தது. அப்போ, அதைப் பதிவு பண்ண அவங்களுக்கு எந்தச் சந்தர்ப்பமும் வாய்க்கலை. இப்போ, சோஷியல் மீடியாலாம் வலிமையா இருக்கிறனால நிறைய பேர் அதைப் பற்றிப் பேசுறாங்க. அதனால் பலருக்கு பயம் வரும்னு நினைக்கிறேன்.’’

படங்கள்: பிரணவ் ராஜ்