அரசியல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்


திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதியப் படத்துக்கு, அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா, கியாரா அத்வானி ஆகியோரிடம் பேசி வருகிறார்கள்.

டிகை எமி ஜாக்சன், அவருடைய காதலர் ஜார்ஜ் இருவருக்கும் திருமணம் நிச்சயமானது பழைய செய்தி. 2020-ம் ஆண்டு கிரீஸ் நாட்டில் இருக்கும் ஒரு தீவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது என்பது புதிய செய்தி.

மிஸ்டர் மியாவ்

பிரம்மாண்ட இயக்குநர் இப்போது இரண்டாம் பாகம் படத்தை எடுத்து வருகிறார். அடுத்ததாக பாலிவுட்டில் முன்னணி நடிகரை மனதில் வைத்து ஒரு ஸ்கிரிப்ட் தயாரித்திருக்கிறாராம். அந்த ஸ்கிரிப்டை படமாக எடுக்கலாமா அல்லது வெப்சீரிஸாக எடுக்கலாமா என யோசித்து வருகிறாராம்.

யோபிக் அதிகமாக வரும் இந்தச் சூழலில் காமெடி நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக்க இருக்கிறார்கள். அதில் ‘பத்ம’ விருது பெற்ற நடன நடிகரை நடிக்க வைக்கப் பேசி வருகிறார்களாம்.

மிஸ்டர் மியாவ்

டிகை ராய் லட்சுமி, ‘நீயா 2’, ‘சிண்ட்ரல்லா’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து, புலியை மையக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட உள்ள புதியப் படத்தில் நடிக்க இருக்கிறார்.

போட்டோ ஷாப்

நடிகை ஆத்மிகா “எப்பவுமே மாடர்ன் டிரஸ் மட்டுமே அணியற மாதிரி வாய்ப்புகள் அமையுது. ஆனா, எனக்கு ரொம்ப பிடிச்சது புடவைதான். புடவை என்னை இன்னும் அழகாகக் காட்டும். நான் புடவையில் இருக்கும் நிறைய போட்டோக்களில் இது என் மோஸ்ட் ஃபேவரைட்”

மிஸ்டர் மியாவ்

டிகை அமலா பால் சமீபகாலமாக தன் சமூக வலைதளப் பக்கங்களில், லுங்கியோடு இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். இதுகுறித்து கமென்டில் ஒருவர் கேட்டதற்கு, “யெஸ். ஐ லவ் லுங்கீஸ்” என்றி சிலாகித்திருப்பவர், மீண்டும் ஒரு லுங்கி  போட்டோவை அப்லோட் செய்துள்ளார்.

மிஸ்டர் மியாவ்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிக்கும் படத்தில், சிவகார்த்திகேயனின் தங்கையாக ‘யூ டியூப்’ பிரபலம் ஹரிஜா நடித்துள்ளார். அதர்வாவின் ‘100’ படத்திலும் இவருக்கு முக்கிய கேரக்டராம்.

மிஸ்டர் மியாவ்

பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் - காஜல் அகர்வால் நடிக்கும் ‘சீதா’ படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் ‘ஆர்.எக்ஸ் 100’ பட நாயகி பாயல் ராஜ்புத் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

கேள்வி கார்னர்

இயக்குநர் புவன் நல்லான்

“ ‘ஜாம்பி’ பட ஷூட்டிங் எந்தளவு இருக்கு? இதில் யாஷிகாவுக்கு என்ன ரோல்?”

“அறுபது சதவிகித ஷூட்டிங் முடிஞ்சது பாஸ். யோகிபாபுவுடைய போர்ஷன்கள் மட்டும் பாக்கி. அதையும் இந்த மாத இறுதிக்குள் முடிச்சிடுவோம். யாஷிகா ஆனந்த் இந்தப் படத்துல மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்டா நடிச்சிருக்கிறாங்க”