சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வந்தா ராஜாவாதான் வருவேன் - சினிமா விமர்சனம்

வந்தா ராஜாவாதான் வருவேன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
வந்தா ராஜாவாதான் வருவேன் - சினிமா விமர்சனம்

வந்தா ராஜாவாதான் வருவேன் - சினிமா விமர்சனம்

காதலால் பிரிந்த குடும்பத்தைப் பாசத்தால் இணைக்க நினைக்கும் ஆயிரமாவது படம்தான் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்.’ 

வந்தா ராஜாவாதான் வருவேன் - சினிமா விமர்சனம்

கோடிகளில் புரளும் வயதான வீல்சேர் பணக்காரர் நாசர். காதல் திருமணத்தால் வெறுத்தொதுக்கிய தன் மகள் ரம்யா கிருஷ்ணனை, பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பார்க்கத் துடிக்கிறார். பேரன் சிம்புவை இந்தியாவுக்கு அனுப்பி, கூட்டிவரச் சொல்ல, அடுத்து என்ன, அதேதான்... 

வந்தா ராஜாவாதான் வருவேன் - சினிமா விமர்சனம்

சிம்புவுக்குச் சில வருடங்கள் கழித்து ஒரு ஜாலி ரோல். மற்றவர்களைக் கதறக் கதற அடிப்பது, ரிஸ்க் எடுக்காமல் நடனம் ஆடுவது என ஒளி சற்று இந்தப்படத்தில் தெரிகிறது. ஆனால் ‘எனக்கா ரெட் கார்டு’ பாடல், படம் முழுக்க சிம்புவுக்குத் துதிபாடுதல்  என ஒளியை ஊதி அணைத்துவிடுவார்கள் போலிருக்கிறது.

சுந்தர்.சி படத்தின் ஆடல் பாடல் நடிகைகளாக இதில் கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ். இருவர் பேசும் வசனங்களைவிடவும் அவர்களின் ஆடைகள் குறைவு. சீனியர் நடிகர்களாக பிரபுவும், சுமனும் ஆங்காங்கே வருகிறார்கள்.  யோகிபாபு, ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ், `நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் சுந்தர்.சி படத்தின் இத்யாதி காமெடி நடிகர்கள் என அதே டிராமா செட்டோடு நடிகர்கள் வந்துபோகிறார்கள். அதில் யோகி பாபு மட்டும் தான் காமெடியில் பாஸ் மார்க் வாங்குகிறார். மற்றவர்கள் காமெடிக் காட்சிகளுக்கே பாப்கார்ன் வாங்க ரசிகர்களை வெளியே தள்ளுகிறார்கள்.

வந்தா ராஜாவாதான் வருவேன் - சினிமா விமர்சனம்ஹிப் ஹாப் ஆதியின் இசையில் ‘வாங்க மச்சான் வாங்க’ தாளம் போட வைத்தாலும், பின்னணி இசை காட்சிகளின் உணர்வைக் கடத்தக் குட்டிக்கரணம் அடிக்கிறது. மல்ட்டி கலர் வெரைட்டி காட்டுகிறது கோபி அமர்நாத்தின் கேமரா. எடிட்டர் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு இன்னும் சற்று தாராளமாகவே கத்தரி வைத்திருக்கலாம். ரைடர் ராஜசேகரின் ஸ்டன்ட் காட்சிகள், இது தெலுங்குப் படத்தின் ரீமேக் என நம்ப வைக்கின்றன.  சுந்தர்.சி படம் எனில் யாருமே லாஜிக் எதிர்பார்க்க மாட்டோம் என்னும்போது. ‘இங்க ஓட்டுக்கே காசுதான், அதக் கொடுத்து மக்கள வெளிய அனுப்பு’ என பன்ச் பேசுவதெல்லாம் எரிச்சலூட்டுகிறது.

‘ஹீரோ ஆகிடலாமான்னா, ஷூட்டிங்குக்கு கரெக்ட்டான டயத்துக்குப் போகணுமாம். நமக்கு செட் ஆகாது’ என, படத்தில் சுய எள்ளல் செய்கிறார் சிம்பு.  கோலிவுட்டுக்கு மீண்டும் அவர் செட் ஆகிவிட்டார் போலிருக்கிறது. அட, சட்டுபுட்டுன்னு அப்படியே ராஜாவா வாங்க!

- விகடன் விமர்சனக் குழு