
வலைபாயுதே

twitter.com/amuduarattai
கூகுள் மேப் வந்த பிறகு, ஊருக்குப் புதிதாக வருபவர்களுக்கு அட்ரஸ் சொல்லும் சமூக சேவையும் இல்லாமல்போச்சு.

twitter.com/manipmp
சிச்சுவேசனுக்கு ஏற்ற ட்யூன் போட்டது ராஜா சாரா இருக்கலாம். ஆனா சிச்சுவேசனுக்கு ஏற்ற பாட்டு போடுவது பஸ் டிரைவர்கள்தான்.
twitter.com/withkaran
எந்தச் சமையல் வீடியோ யூடியூப்ல பாத்தாலும் மிளகாய்ப் பொடி உப்பு உங் களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு போட்டுக்கோங்கிறானுவ... அந்த எழவு தெரியாமத்தானே வீடியோ பார்கக வந்தோம்.
twitter.com/amuduarattai
மிக சொகுசாக வாழும் சாமியார்கள்தான், நம்மை எளிமையாக வாழச் சொல்லி உபதேசம் செய்கிறார்கள்.

twitter.com/Kozhiyaar
மனைவி தவறு செய்தால், ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற கொள்கையும், கணவன் தவறு செய்தால், ‘அடங்க மறு அத்து மீறு’ என்ற கொள்கையும் பின்பற்றப்படுகிறது!
twitter.com/rp_tweety
முடி கொட்டுதேன்னு கவலைப்படுறதைவிட எதிர்காலத்துல டை செலவு மிச்சம்னு சந்தோசப்படுங்க.
twitter.com/shivaas_twitz
இவனுங்க இந்த பட்ஜெட்டைப் பத்திப் பெருமையா பேசுறதைப் பார்த்தா, இனிமே நாம வேலைக்கே போக வேணாம் போலயே..?!
twitter.com/Giri47436512
உங்க கூட கொஞ்சி விளையாட ஆசைப்பட்டிருப்பார் தந்தை. உங்க வாழ்வாதாரத்தைப் பெருக்க ஓயாமல் உழைத்துக்கொண்டு அது இயலாமல் போயிருக்கலாம்., கடைசி காலத்துல அந்தக் குறையை நீக்கத்தான் தான் சேர்த்து வைத்த அவ்வளவு அன்பையும் பேரக்குழந்தையிடம் செலுத்த ஆசைப்படுவார். அவர்களைப் பிரித்துவிடாதீர்கள்.
twitter.com/parveenyunus
தேர்தல் அறிக்கையைப் பாராளுமன்றத்துல வெளியிட்ட ஒரே கட்சி பா.ஜ.க-வாதான் இருக்கும் # இடைக்கால பட்ஜெட்.
twitter.com/MJ_twets
தூக்கியெறிந்தார்கள் என்ற கவலை வேண்டாம், விழுந்தது விதை என்பதை நிரூபியுங்கள்..!

facebook.com/dravida.maindhan.9
6 மாதங்களுக்கு முன்பு: கலைஞர் திறமையானவர், ஸ்டாலின் வேஸ்டு.
3 மாதங்களுக்கு முன்பு: அண்ணா ஒரு கலங்கரை விளக்கம், கருணாநிதி இன விரோதி.
6 மணிநேரத்துக்கு முன்பு: அண்ணா ஒரு பிழைப்புவாதி, பெரியார்தான் இயக்கம் நடத்திய தலைவர்.
3 மாதங்களுக்குப் பிறகு: ஈவெரா ஒரு வந்தேறி, எங்க ஆளுதான் எல்லாம்.
இது சீமான் உருவான வரிசை. இந்த வரிசையில் இப்பொழுது பல முகநூல் சீமான்கள் சேர உள்ளனர்.
ஆக, இது அதுல்ல?!

facebook.com/Khadar.FT
STR-க்கு சொன்ன தேதில வர்றது பொறந்த நாள் மட்டும்தான்!
facebook.com/mugizhnilaa
வாழ்கிறோம் என்று நம்புவதற்காகவாவது ஒரு வலி அவசியமாகிவிடுகிறது....
facebook.com/S. Charu Hasan
ஹாசன் குடும்பத்தில் நடிக்க வந்தவர்கள் ஏழு பேர்... இதில் கமலஹாசனிடம் என்ன குறைகள் என்று தேடிக் கண்டுபிடிப்பவர்கள் சாருஹாசனிடம் அதைக் கண்டுகொள்ள வில்லை.. 65 வயது வரை புகைபிடித்தவன்... இன்றுவரை அவ்வப்போது கொஞ்சம் தண்ணி போடுபவன்... யோவன் டி கார்லோ முதல் இன்றைய ஹாலிவுட் நடிகைகள் வரை அவர்களிடம் ரகசியமாக மயங்கியவன்... என்னை யாரும் கண்டுகொள்ளவில்லையே.. ‘தாதா 87’ வந்த பிறகாவது என்னையும் கவனியுங்கள்...!
விக்னேஷ் சி செல்வராஜ்
தற்கால இலக்கியச் சூழலை உற்று நோக்குகையில் புதுமுக வாசகர், வாசகியின் தோழி, எழுத்தாளர் ஒப்பனை, பதிப்பக ஆஸ்தான டெய்லர், இலக்கிய பி.ஆர்.ஓ, கமர்ஷியல் எழுத்து வாசிக்கும் ‘சி’ சென்டர் வாசகர், 100 நூல்கள் வாசித்த Veteran வாசகர், புத்தகம் வாங்காமல் வெளியீட்டு விழாக்களில் மட்டும் பங்கேற்கும் ‘வாசக அட்மாஸ்பியர்’ ஆகிய பதங்கள் உருவாவதற்கான சாத்தியம் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் தெரிகிறது.
சைபர் ஸ்பைடர்