அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

• விக்ரம் குமார் இயக்கத்தில், நானி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு இரட்டை வேடமாம். கதைப்படி ஐந்து ஹீரோயின்கள் தேவையென்பதால் கீர்த்தி சுரேஷ், மேகா ஆகாஷ், பிரியா வாரியர் ஆகியோரிடம் பேசி வருகிறதாம் படக்குழு. 

• சல்மான் கான் - கேத்ரீனா கைஃப் நடித்த ‘டைகர் ஜிந்தா ஹை’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். அதில் கோபிசந்தும் தமன்னாவும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

• ‘அருவி’ படத்துக்குப் பிறகு, எந்தப் படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த நடிகை அதிதி பாலன், மலையாளத்தில் சந்தோஷ் சிவன் இயக்கும் ‘ஜேக் அண்ட் ஜில்’ படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

• டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘சாம்பியன்’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இந்தப் படங்களுக்கு முன்பாக அவர் கமிட்டான ‘நகல்’ படத்தில் ஒரு ஷெட்யூல் மட்டும் எடுக்காமல் இருந்தது. அதை தற்போது ‘டூப்ளிகேட்’  என்று பெயர் மாற்றம் செய்து வெளியிட உள்ளனர். 

• ‘குளிர் 100’ பட இயக்குநர் அனிதா உதீப், இப்போது உருவாக்கி உள்ள படம் ‘90 எம்.எல்’. இந்தப் படத்தில் ஓவியா முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். படத்தின் இசையமைப்பாளர் நடிகர் சிம்பு. படத்துக்கு ‘ஏ’ சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது.

மிஸ்டர் மியாவ்

• ‘மஹா’ படத்தில் நடித்துவரும் ஹன்சிகா, இப்போது சந்தீப் கிஷனுடன் ‘தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ., பி.எல்’ படத்தில் இணைந்துள்ளார். கர்னூலில் சூட்டிங் தொடங்கியுள்ள இப்படத்தில், வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

போட்டோ ஷாப்

மிஸ்டர் மியாவ்

நடிகை ஜனனி ஐயர்

“ ‘தெ
கிடி’ என்னை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்த்த படம். அதோட தெலுங்கு சக்சஸ் மீட்ல எடுத்ததுனால இந்தப் போட்டோ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அது மட்டுமில்லாம இதுல நான் அழகா இருக்கேன்ல!”     

கேள்வி கார்னர்

இயக்குநர்  சந்தோஷ் ஜெயக்குமார்

“மூன்றாவது முறையாக கெளதம் கார்த்திக்குடன் சேர்ந்து படம் பண்றீங்க. என்ன ஜானர்?”

“ப
டத்துக்கு ‘தீமைதான் வெல்லும்’னு பெயர் வெச்சிருக்கோம். ஹீரோயினே இல்லாத த்ரில்லர் சப்ஜெக்ட். படத்துல பாடல்களும் இல்லை. முதல் ஷெட்யூலை கோவாவில் எடுக்க பிளான் பண்ணி இருக்கோம்”

சைலன்ஸ்

• சாக்லேட் ஹீரோவுக்கும் சூப்பர் டான்ஸ் ஹீரோயினுக்கும் மார்ச் மாதம் திருமணம் என்று தகவல்கள் வந்தன. இந்நிலையில், அம்மணி ஒரு கன்னட படத்தில் கமிட்டாகி இருப்பதால், விரைவில் ஷூட்டிங் செல்லவிருக்கிறாராம். அதனால் கல்யாணச் செய்தி நிஜம்தானா என்று விவாதம் பெரிதாகிவருகிறது.

• பன்ச் நடிகரின் மூன்று எழுத்துப் படம் தீபாவளிக்கு வரவேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர். ஆனால், இயக்குநரின் தாமதத்தால் பட வேலைகள் இழுத்துக்கொண்டிருக் கின்றன. தான் இப்போது நடித்து வரும் படமும் தாமதம் ஆவதால், டபுள் டென்ஷனில் இருக்கிறாராம் மிஸ்டர் பன்ச்!