Published:Updated:

“தயாரிப்பாளர் சங்கம் உடையும்!”

“தயாரிப்பாளர் சங்கம் உடையும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தயாரிப்பாளர் சங்கம் உடையும்!”

“தயாரிப்பாளர் சங்கம் உடையும்!”

“தயாரிப்பாளரா பல படங்கள் பண்ணியிருந்தாலும், ஒரு இயக்குநரா ‘மாயவன்’ல நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்னு, ஒரு வேலைக்காகப் பலபேர்கிட்ட பேசவேண்டி இருந்தது. அந்த அனுபவங்கள் ‘GANGS OF மெட்ராஸ்’ படத்துக்கு ரொம்ப வசதியா இருந்துச்சு.”  -  மீண்டும் இயக்குநராகக் களமிறங்கியிருக்கிறார், தயாரிப்பாளர் சி.வி.குமார்.   

“தயாரிப்பாளர் சங்கம் உடையும்!”

“ GANGS OF மெட்ராஸ்’னு டைட்டில்... பீரியட் படமா?”

“இல்லை. 2000-த்துக்கு முன்னாடி பிறந்த எல்லோருக்கும் சென்னையை ‘மெட்ராஸ்’னுதான் தெரியும். எனக்குச் சொந்த ஊர் மதுரை. 1985-லிருந்து மெட்ராஸுக்கு வந்து போயிட்டிருக்கேன். கடந்த இருபது வருடமாதான், மெட்ராஸை நாம சென்னைன்னு சொல்றோம். வட மாநிலங்கள், தென் மாவட்டங்கள்ல இன்னும் சென்னையை மெட்ராஸ்னுதான் சொல்றாங்க. எல்லோருக்கும் நெருக்கமான விஷயமா இருக்கட்டுமேன்னுதான், படத்துக்கு ‘GANGS OF மெட்ராஸ்’னு டைட்டில் வெச்சோம்.

சென்னையில இருக்கிற நார்கோஸ் டீலர்கள் பற்றிய படம் இது. சட்டவிரோதமா போதைப் பொருள்கள் கடத்துற விஷயங்களைப் பின்புலமா வெச்சு, எழுதியிருக்கிற ஆக்‌ஷன் கதை. நார்கோஸ் குரூப்ஸ் எப்படி நடந்துப்பாங்க. அவங்களோட வேலைகள் என்ன, அவங்களுக்குள்ள என்ன மாதிரியான சண்டைகள் வரும்னு சொல்லியிருக்கோம். அப்படி ஒரு நார்கோஸ் குரூப்கிட்ட மாட்டிக்கிற ஒரு ஜோடி, அவங்களோட எதிர்வினை இதெல்லாம் அடங்கிய ஒரு ரிவெஞ்ச் படம்தான், ‘GANGS OF மெட்ராஸ்.’ ஒரு லேடி கேங்ஸ்டரைச் சுற்றிதான் திரைக்கதை நகரும்.” 

“தயாரிப்பாளர் சங்கம் உடையும்!”

“நடிகர்கள்?”

“இயக்குநர் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, அசோக், ஆடுகளம் நரேன் நடிச்சிருக்காங்க. சன் டிவி ‘கிராமத்தில் ஒருநாள்’ சாய் பிரியங்கா ஹீரோயினா அறிமுகம் ஆகுறாங்க. படத்துல அவங்கதான் லேடி கேங்ஸ்டர். இதுல நடிக்க வேற சில ஹீரோயின்ஸ் கிட்ட பேசினோம். பாய் கட், ஸ்டன்ட் அப்படி இப்படின்னு பல விஷயங்கள் இருந்ததனால, யாரும் பண்ண முன்வரலை. ஓகே சொன்ன சிலருக்கு ஆக்‌ஷன் காட்சிகளுக்குத் தேவையான ‘டாம் பாய்’ உடல்மொழி மிஸ் ஆச்சு. ஆனா, பிரியங்கா பின்னிட்டாங்க.”

“இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தவிர, புது டெக்னிக்கல் டீமா இருக்கே?!”

“படத்தோட யங் டெக்னிக்கல் டீம், தானா அமைஞ்சது. பாலிவுட் உதவி ஒளிப்பதிவாளர் கார்த்திக் குமார் தில்லை இந்தப் படத்துக்கு கேமராமேனா வொர்க் பண்ணியிருக்கார். பாடல்களுக்கு கனடா வாழ் இந்தியரான ஹரி டஃபுசியா மியூசிக் பண்ணியிருக்கார்.  அனுபவம் வாய்ந்த ஒருத்தர் பின்னணி இசை அமைச்சா நல்லா இருக்கும்னு சந்தோஷ் நாராயணன்கிட்ட சொன்னேன். அவரும் பண்ணிக் கொடுத்துட்டார்.”   

“தயாரிப்பாளர் சங்கம் உடையும்!”

“தயாரிப்பாளர் சி.வி.குமார்கிட்ட இருந்து புதுப் புது ஜானர்ல படங்கள் வந்தன. இப்போ குறைஞ்சிடுச்சு. இயக்குநரா பிஸி ஆகிட்டீங்களோ?!” 

“அப்படியெல்லாம் இல்லை. புரொடக்‌ஷன் வேலைகளும் ஒருபக்கம் நடந்துகிட்டுதான் இருக்கு. ‘4G’, ‘டைட்டானிக்’, ‘ஜாங்கோ’, ‘இன்று நேற்று நாளை 2’ இதெல்லாம் தயாரிப்புல இருக்கு. இப்போதைக்கு ‘GANGS OF மெட்ராஸ்’ ரிலீஸுக்கு ரெடி. கடந்த வருடம் நடந்த சினிமா ஸ்டிரைக்ல இருந்து சரியான ரிலீஸ் தேதி அமையலை. பெரிய ஹீரோக்களின் படம் நிறைய வந்தது. சின்னப் படங்களுக்கான இடமும் சரியா அமையணும்ல!”

“தயாரிப்பாளர் சங்கத்துல இருந்து, ரிலீஸ் பிரச்னைக்காக ரெகுலேஷன் கமிட்டி அமைச்சாங்களே! இன்னும் ரிலீஸ் பிரச்னை இருக்கா?!”

“தயாரிப்பாளர் சங்கப் பிரச்னை இன்னும் 25 வருடம் ஆனாலும் இருக்கும். காரணம், உறுப்பினர்கள் நிறைய இருக்கிறதுதான்! ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி இருக்குதான்; ஆனா, எங்க ஒரு இடத்துல ‘கேட்’ போட்டாலும் அங்கே கூச்சல் குழப்பம் இருக்கத்தான் செய்யும். இன்னும் கொஞ்சநாள்ல பாருங்க... தொடர்ந்து படம் பண்ற தயாரிப்பாளர்கள் தனியா பிரிஞ்சு வருவாங்க.” 

அலாவுதின் ஹுசைன்